நூற்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்த இந்த வன்முறைக்குக் காரணம் அஞ்சுமன்
அஹ்லே சுன்னத் ஜமாஅத் என்ற தீவிரவாத அமைப்பு. இதற்கு பின்புல அரசியல் ஆதரவு
தர ஆளும் திரிணாமூல் காங்கிரஸ், எதிர்க்கட்சிகளான மார்க்சிஸ்ட், காங்கிரஸ்
கட்சிகள் போட்டியிடுகின்றன. எல்லாம் ஒட்டுமொத்த ஓட்டு படுத்தும் பாடு!
2015, அக்டோபரில் மாட்டிறைச்சி உண்டார் என்பதால் ஒரு இஸ்லாமியர்
உ.பி.யில் கொல்லப்பட்டபோது நமது அரசியல்வாதிகளும் ஊடகங்களும் வானுக்கும்
பூமிக்குமாகக் குதித்ததை நாடறியும். அந்த நிகழ்வை வைத்துக்கொண்டு மோடி அரசை
கடுமையாக விமர்சித்த அவர்கள், இப்போது எங்கே போனார்கள்? கும்பலாகத்
திரண்டு வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தான் தாத்ரியிலும் நிகழ்ந்தது. அதன்
எண்னிக்கை தான் வித்தியாசம். இப்போது, மால்டா மாவட்டம் பற்றி எரிகிறபோது,
இதை ஊதிப் பெரிதாக்காதீர்கள் என்று உபதேசம் செய்கிறார்கள்.
கமலேஷ் திவாரிக்கு எதிரான பேரணி
















