
2. தூமையைக் குறித்த கற்பனைகளும், கதையாடல்களும், சாதிப் பிரயோகங்களும் ஏராளம். பார்ப்பன சாதியில், மற்றும் இந்துமதத்தைக் கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டிருப்பவர்களிடையிலும் மூன்று நாட்கள் தனியே வீட்டின் பின் இருக்க வேண்டும். மற்றவர் தொடலாகாது. குழந்தைகள் நாடிவந்தால் அவர்கள் உடுப்புகளை நீங்கள் கழற்றிவிட வேண்டும். அவ்வுடுப்புகளையும் இம்மூன்று நாட்கள் பயன்படுத்திய உடை, படுக்கை மட்டும் சாமான்களையும் நான்காம் நாள் கழுவிய பிறகு வீட்டிலுள்ளோர் மஞ்சள் நீர் தெளித்து உள்ளே சேர்த்துக் கொள்வர். “தீட்டு” கழிய இந்த ஏற்பாடு. தீட்டு!
3. பெண்மையின் குறியீடாக இருக்கும் இத் தூமையை அடையும் இளம் பெண்கள் ‘கொண்டாடப்படுவது’ சமூகத்திலுள்ள மற்ற ஆண்களுக்கும் இதைப்பற்றி அறிவிப்பதற்காகவும் அவளது நடவடிக்கைகளில் அந்நாள் முதல் மாற்றம் ஏற்படுத்துவதற்காகவும் தான். பொருளாதாரக் குறையுடையோர் சிலர் வீடுகளில் பெண் பூப்படைந்தவுடன் அவள் திருமணத்திற்கு செல்வம் சேர்க்கவில்லையே என்ற கவலை மேலோங்கி ஒப்பாரி வைத்து அழுவதும் உண்டு. தமிழகத்தில் “தூய்மைக்குடிக்கி” என்ற சொல் ஒரு வசைச் சொல்லாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. தாயின் கருவிலுள்ளபோது தூமையைக் குடித்தவன் என்ற பொருளில் இது எவ்வாறு வசைச் சொல்லாக முடியும்?
இச்சமூகத் தூய்மையாக்கங்களிலிருந்து பெண்கள் வெளியேறி மேற்கொள்ளும் ஒரு எழுத்து முயற்சி என்பதற்காகவே இத்தலைப்பு.
தர்மினி-மோனிகா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக