வெள்ளி, 8 ஜனவரி, 2016

சரோஜாதேவி வெள்ளநிவாரணதுக்கு 5 லட்சம்...நடிகர் சங்கத்தில் வழங்கினார்

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி தன்னுடைய பிறந்தநாளை வியாழக்கிழமை (07.01.2016) கொண்டாடினார். இந்நிகழ்வில் நடிகர் சிவகுமார் , நடிகர் சங்க நிர்வாகிகள் மனோபாலா, குட்டி பத்மினி, உதயா, ரமணா, ஹேமசந்திரன், அயுப் கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.சரோஜாதேவி பேசியது, நான் முதலில் நடிகர் சிவகுமார் அவர்களிடம் தான் சென்னைக்கு வந்து பிறந்த நாள் கொண்டாடுவது பற்றியும் நிவாரண நிதி வழங்குவது பற்றியும் கூறினேன். நான் அதை பற்றி அவரிடம் கூறியதும் உடனே ஏற்பாடு செய்துவிடலாம் என்று கூறி என்னை உற்சாகப்படுத்தினார். நடிகர் சிவகுமார் மிகவும் நல்ல மனிதர், எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் அனைவருக்கும் நான் என்னுடைய வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன்.நான் முன்னொரு காலத்தில் மிகப்பெரிய நடிகையாக வலம்வந்த போது நடிகர் சங்கத்துக்கு ரூபாய் 5௦,௦௦௦ நன்கொடையாக வழங்கினேன்.

வியாழன், 7 ஜனவரி, 2016

மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் வைகோ...அதிமுகவின் பூத் ஏஜென்டாக செயல்பட முடியும், வேற லட்சியம்? ..

மக்கள் நலக் கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக நான் போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் விரும்பினால் அதை ஏற்கிறேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.மதுரை மண்டல மதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் இன்று நடைபெற்றது. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, சிவகங்கை மாவட்டச் செயலாளர் புலவர் செல்வந்தியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசு ம்போது “மக்கள் நல கூட்டணி ஒருங்கிணைப்பாளராக இருக்கும், தாங்கள் முதல்வர் வேட்பாளராக வேண்டும்.
வழக்கம்போல் யாருக்கும், எதற்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது என வேண்டுகோள் விடுத்தனர். அதற்கு பதில் அளித்த வைகோ பேசும்போது, “எனக்கு எந்த ஆசையும் இல்லை. உங்கள் கட்டளையை ஏற்கிறேன். மறுப்பும் சொல்ல முடியவில்லை என்றதும் அரங்கத்தில் இருந்த நிர்வாகிகள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

அதிமுக அரசுக்கு எதிராக 25 ஊழல் குற்றச்சாட்டுக்களை இளங்கோவன் அடுக்குகிறார்

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுக்கு எதிரான ஊழல் பட்டியலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெளியிட்டுள்ளார். அதில் ஆவின் பால் கலப்பட ஊழல், பள்ளிக் கல்வித்துறையில் ஊழல், கோகோ கோலா நிறுவனத்திற்கு நிலம் வழங்கியதில் ஊழல், கிரானைட் ஊழல் உள்ளிட்ட 25 ஊழல்களை பட்டியலிட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அ.தி.மு.க. அரசு மீதான ஊழல் பட்டியலை வெளியிட்டார். அந்த பட்டியலில், 
செயற்பொறியாளர் எஸ்.முத்துக்குமாரசாமி தற்கொலை 
 மின் கொள்முதலில் ஊழல் 
கோகோ கோலா நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கியதில் ஊழல் 
 உயர்கல்வித்துறையில் ஊழல் 
ஆவின் பால் கலப்பட ஊழல் 

வடகிழக்கு மாநிலங்களில் 8.0 ரிச்டர்களுக்கு மேல் நான்கு நிலநடுக்கங்கள் ஏற்படவாய்ப்பு....நிபுணர்கள் எச்சரிக்கை

புதுடில்லி :'நாட்டின் வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் இமயமலை பகுதி யில் கடுமையான நிலநடுக்கம் ஏற்படலாம்' என, மத்திய உள்துறை அமைச்சகத்தின், தேசிய பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இமயமலை அடிவாரத்தில் உள்ள, அருணாச்சல பிரதேச மாநில தலைநகர் இடாநகரில், மத்திய உள்துறை அமைச்சகத்தின், தேசிய பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் கூட்டம் நடந்தது. அதில், மலைப்பிரதேச கட்டுமான நிபுணர்களும் பங்கேற்றனர். நில நடுக்கத்தை தாங்கும் சக்தி படைத்த கட்டிடங்களை எப்பொழுது கட்டி எப்பொழுது குடி புகுவது... இனி கட்டும் கட்டிடங்களையாவது ஒழுங்காக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்...

ஜெயலலிதா சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: விசாரணை நீதிபதி அதிரடி மாற்றம்

முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீடு மனு மீதான வழக்கில் விசாரணை நீதிபதி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கை கர்நாடக நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து, கர்நாடக மாநில அரசு, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மற்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனால் ஜெயலலிதா உட்பட நால்வர் தரப்பிலும் எதிர் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மேல் முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது மனுக்களை விசாரித்த நீதிபதிகள், ''இந்த வழக்கு தொடர்பாக கர்நாடக மாநில அரசு, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட நால்வர் தரப்பிலும் இருந்து ஆயிரக்கணக்கான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.   நீதி துறையை மக்சிமம் வளைத்து நெளித்து உடைத்த ஒரு கோஷ்டியின்  வழக்கை  மைக்கிராஸ்கோப்பால்தான் பார்க்கவேண்டி இருக்கிறது. இதில் எதோ அவசரம் தெரிகிறதே

ஈரான் தூதரகம் தாக்குதல்..சவுதிமீது ஈரான் அதிரடி குற்றச்சாட்டு

சவுதி தலைமையிலான கூட்டுப்படை ஏமனில் உள்ள தங்கள் நாட்டு தூதரம்
மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. சவுதி அரேபியா, சிறுபான்மை ஷியா பிரிவு மதத் தலைவர் நிமர் அல் நிமர் (வயது 56) உள்பட 47 பேருக்கு ஒரே நாளில் அண்மையில் மரண தண்டனையை நிறைவேற்றியது. இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு ஈரானில் போராட்டம் வெடித்தது, ஈரானில் சவுதி தூதரகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனையடுத்து ஈரான் உடனான உறவை சவுதி அரேபியா முறித்துக் கொண்டது. இவ்விவகாரத்தில் சன்னி இஸ்லாமிய பிரிவை சேர்ந்த நாடுகள் சவுதி அரேபியாவிற்கு ஆதரவாக ஈரானில் இருந்து தங்களது நாட்டு தூதர்களை திரும்ப அழைத்து வருகிறது.

காஷ்மீர் முதலமைச்சர் முஃப்தி முகமது சையது காலமானார்...V.P.Sing ஆட்சியின் உள்துறை அமைச்சர்

காஷ்மீர் மாநில முதலமைச்சர் முஃப்தி முகமது சையது இன்று காலமானார்.
அவருக்கு வயது 79.
பல்வேறுவிதமான உடல் நல உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தில்லி மருத்துவமனை ஒன்றில் சில வாரங்களுக்கு முன்பாக சேர்க்கப்பட்டு, சிகிச்சைபெற்றுவந்தார்.
வியாழக்கிழமையன்று அதிகாலையில் முஃப்தி முகமது சையது மரணமடைந்ததாக அம்மாநில கல்வித் துறை அமைச்சர் நயீம் அக்தர் பிடிஐயிடம் தெரிவித்தார்.
இவரது மக்கள் ஜனநாயகக் கட்சியும் பாரதீய ஜனதாக் கட்சியும் இணைந்து காஷ்மீரில் ஆட்சி செய்து வருகின்றன.
முஃப்தியின் மரணத்தையடுத்து அவரது மகள் மெஹ்பூபா முஃப்தி அடுத்த முதல்வராக பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2014 டிசம்பரில் காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. முஃப்தியின் பிடிபி 28 இடங்களைக் கைப்பற்றியது. பாரதீய ஜனதாக் கட்சி 25 இடங்களைக் கைப்பற்றியது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வெற்றியை துப்பாக்கியால் சுட்டு கொண்டாடியதில் ஒருவர் மரணம்

ஆப்கன் தேசியக் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு எதிராக பெற்ற டெஸ்ட் போட்டித் தொடர் வெற்றியைக் கொண்டாடிய சிலர் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு பதின்பருவ இளைஞர் கொல்லப்பட்டார்.ஆப்கானிஸ்தானின் தெற்கே நடந்த இந்த சம்பவத்தைத் தவிர, தலைநகர் காபூலில் நடந்த வேறொரு சம்பவத்தில் வேறு பலர் காயமடைந்தனர். ஷார்ஜாவில் நடந்த ஜிம்பாப்வே-ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான ஐந்து டெஸ்ட் போட்டித் தொடரை ஆப்கானிஸ்தான் வென்றதை அடுத்து, ஆப்கான் ரசிகர்கள் பல இடங்களில் வீதிகளில் ஆடியும், வானில் துப்பாக்கியால் சுட்டும் கொண்டாடினர்.

A.R .ரஹ்மான் :உலகை அழகுள்ளதாக மாற்றுவோம் ! திலீப்குமார் ரஹ்மான் ஆனது போல உலகம் என்ற பெயர் கலகம் என்றாகம இருந்தா சரி...

தனது 48-வது பிறந்தநாளன்று தன்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். அவர் கூறியிருப்பதாவது : என் பாசத்திற்குரிய நண்பர்கள், ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகளுக்கு... உங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கும், பிரார்த்தனைக்கும், பாசத்திற்கும் நன்றி. நான் கடினமாக உழைத்து அழகாக இசையமைப்பதற்கு காரணம் நீங்கள் தான். எல்லாம் வல்ல இறைவன் நம்மை ஒன்றிணைத்து, நமது மனதை சுத்தமாகவும் கருணையுள்ளதாகவும் வைத்திருக்கட்டும். ஒன்றிணைந்த அறிவு, அன்பு, அக்கறையுடன் உலகத்தை அழகானதாக மாற்றுவோம்

வட கொரியா ஹைட்ரஜன் குண்டை வெடிக்க வைத்தது...மிகவும் சக்தி வாய்ந்த..

பியாங்யாங்: ஹைட்ரஜன் அணுகுண்டை வெற்றிகரமாக சோதித்துள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது. இந்த சோதனை காரணமாகவே, நிலநடுக்கம் போன்ற அதிர்வை வட கொரிய மக்கள் உணர்ந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியாவின் இந்த சோதனைக்கு சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், ஐநா,வும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஆசிய நாடான வடகொரியாவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி இருந்தது. வடகொரியாவின் அணுஆயுத சோதனை மையத்திற்கு அருகே இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக கூறப்பட்டது. சீனர்கள்தான் இவர்களுக்கும் பாகிஸ்தானுக்கும் தொழில் நுணுக்கத்தை கொடுத்தவர்கள்... எல்லாம் காப்பி அடிக்கும் கூட்டம்... சொந்த மூளையை வைத்து தானாக செய்யத்தெரியாது...

17600000 கோடி 2G ஸ்பெக்ட்ரம் பிரசாரம்....இப்போது 200 கோடியாக சுருங்கியது ...அதுவும் கடன்...

புதுடில்லி: 'தி.மு.க.,வால் நடத்தப்படும் கலைஞர், 'டிவி'க்கு, குஸேகான் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் நிறுவனம் மூலமாக, 200 கோடி ரூபாய் பணம் கடனாக கொடுத்த  விவகாரத்தில் உண்மை தன்மை இல்லை' என, அமலாக்க இயக்ககம் கூறியுள்ளது.
'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் இறுதிக்கட்ட விவாதங்கள், சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி ஓ.பி.ஷைனி முன் நடந்து வருகின்றன. அமலாக்க இயக்ககம் தொடர்ந்த, சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பான விசாரணையில், அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் நேற்று வாதிட்டதாவது: தி.மு.க.,வால் நடத்தப்படும் கலைஞர், 'டிவி'க்கு, குஸேகான் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் நிறுவனம், சினியுக் பிலிம்ஸ் நிறுவனம் மூலமாக, 200 கோடி ரூபாய் பணம கடனாக கொடுக்கப்பட்டு  உள்ளது. இந்நிறுவனங்கள், உண்மையான வர்த்தக பரிவர்த்தனைகளில் ஈடுபடவில்லை. 200 கோடி ரூபாய் பணத்தை பரிமாற்றம் செய்யும் நோக்கில், போலியாக இந்த நிறுவனங்கள் துவக்கப்பட்டு உள்ளன என்று தற்போது சிபியை வழக்கறிஞர் வாதிட்டார்.   ராசா ஒரு தலித்தாக ஒரு திமுக காரனாக ஒரு தேயிலைதோட்ட கூலி பரம்பரையாக இருப்பதெல்லாம் அவா பொறுப்பாளா?

புதன், 6 ஜனவரி, 2016

தமிழக வெள்ளம் : தனியார்மயம் உருவாக்கிய அழிவு ! வினவு.com

06-encroached-lakes“நீரின்றி அமையாது உலகு” என்றார் திருவள்ளுவர். இதனை நமது முன்னோர்கள் நன்கு உணர்ந்தும் புரிந்தும் வைத்திருந்ததற்கு ஆதாரமாகத் திகழ்பவைதான் தமிழகத்தின் கிராமம் தொடங்கி நகரம் வரை காணப்படும் கண்மாய்களும், ஏரிகளும், குளங்களும். ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை தமிழகத்தில் ஏறத்தாழ 39,000 ஏரிகளும், 3,000 கோயில் குளங்களும், 5,000 ஊருணிகளும் இருந்ததாகப் பல்வேறு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு தமிழகத்தில் இன்றுள்ள நவீன, பெரிய அணைக்கட்டுகளில் தேக்கப்படும் நீரின் கொள்ளளவைவிட அதிகம் என்று நீரியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். உதாரணத்திற்குச் சொன்னால், வைகை அணையின் கொள்ளளவு 614 கோடி கன அடி; காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 364 கோடி கனஅடி.

பல்கலைக்கழகங்கள் இறக்குமதி ! மாணவர்கள் ஏற்றுமதி !! vinavu.com

கல்வியை பாதுகாப்போம்புதிய கல்விக் கொள்கை – 2015 :
பல்கலைக்கழகங்கள் இறக்குமதி ! மாணவர்கள் ஏற்றுமதி !! “எண்ணென்ப ஏனை யெழுத்தன்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என்கிறது குறள்.
ஆனால், மோடி அரசு முன் வைக்கும் புதிய கல்விக்கொள்கை-2015 சமூகத்தின் கண்களாக இருக்கும் கல்வியை நோண்டி விற்றுத் தீர்க்கப் பார்க்கிறது.
வரும் டிசம்பர்-15- இல் மோடி அரசு, உலக வர்த்தகக் கழகத்தின் காட்ஸ் ( General Agreement on Trade in Services) ஒப்பந்தத்தில் கையெழுத்திடவிருக்கிறது. ஏற்கனவே, 90-களில் புகுத்தப்பட்ட காட் ஒப்பந்தம் உற்பத்தித் துறையில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்று கூவி இந்திய விவசாயத் தையும் தொழில்துறையையும் சின்னாபின்னமாக்கியிருக்கிறது.
இலட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது; கோடிக்கணக்கான தொழிலாளிகள் உதிரிகளாகிப் போனது; சிறு-குறுந்தொழில்கள் பேரளவில் அழிந்துபோனது;

அ.தி.மு.க.தேர்தல் பிரசாரம்...ஈசான்ய மூலையில் இருந்து, காலை, 8:15 மணிக்கு துவக்கம்

தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், அ.தி.மு.க., சார்பில், இன்று காலை, 8:15 மணிக்கு, தேர்தல் பிரசாரம் துவக்கப்படுகிறது.
தமிழக சட்டசபையின் பதவி காலம், மே மாதம் நிறைவு பெறுகிறது. எனவே, மார்ச் மாதம் துவக்கத்தில், தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த லோக்சபா தேர்தலின் போது, மற்ற கட்சிகள் கூட்டணி குறித்து முடிவு எடுப்பதற்கு முன், முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். அதே பாணியில்,சட்டசபை தேர்தல் பணிகளை துவக்க, அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது.வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து, அவர்களிடம், அ.தி.மு.க., அரசின் சாதனைகளை எடுத்து கூறி, ஓட்டுகளைப் பெறுவதற்காக,ஒவ்வொரு ஓட்டுச் சாவடிக்கும், ஜெயலலிதா பேரவை சார்பில், ஏஜன்ட் நியமிக்கும் படி, சில மாதங்களுக்கு முன் ஜெயலலிதா உத்தரவிட்டார்.   பணபட்டுவாடா துவங்கிடிச்சி டோய் இன்னும் 4 மாதம் களுக்கு பிரியாணி, சாராய வியாபாரம் கொடி கட்டி பறக்கும்...ஏய் கோவாலு பொருளாதாரம் உயரும்ல ?

அ.தி.மு.க. துணை பொதுச்செயலராகிறார் சசிகலா?

சென்னை: அ.தி.மு.க. பொதுக்குழுவிலேயே நம்பர் 2-வாக முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலா அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் தற்போது இம்மாத இறுதிக்குள் சசிகலா அதிமுக துணைப் பொதுச்செயலராகிவிடுவார் என்கிறது அதிமுக வட்டாரங்கள். அதிமுகவில் நிரந்தர பொதுச்செயலராக ஜெயலலிதாவே நீடித்து வருகிறார். மற்ற கட்சிகளைப் போல அதிமுகவில் நம்பர் 2 இடம்
யாருக்கும் கிடையாது. Sasikala to get top ADMK Post? சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு செல்ல நேரிட்ட போது அடுத்த முதல்வர் யாராக இருக்கலாம் என சசிகலாவின் உறவினர்கள் உட்பட பலரது பெயர்களும் அடிபட்டன. ஓய்வுபெற்ற பின்னரும் அரசு பதவியில் ஆலோசகராக ஒட்டிக் கொண்டிருக்கும் ஷீலா பாலகிருஷ்ணன் பெயரும் கூட அடிபட்டது. ஆனால் மீண்டும் ஓ. பன்னீர்செல்வம்தான் முதல்வரானார்.  இந்த அம்மா சும்மா டிராமா காட்டுவதில் எம்ஜியாரையும் மிஞ்சிய குழப்ப கேஸ். கொடுக்கும் கொடுக்காது அல்லது கொடுத்துவிட்டு பறிக்கும் மொத்தத்தில் குரங்குக்கு வாழ்க்கைப்பட்ட சசி 

சவுக்கு: அம்மா என்ற புனிதமான பெயரை உச்சரிக்கவே கூச்சப்படும் பெயராக ......

பசியோடு ஓட்டலுக்குள் நுழைகிறார். மெனுவை நீட்டுகிறார் சர்வர்.
ஒரு ஆனியன் ரவா.
ரவா தோசை ஆயிருச்சு சார்.
சரி, ஆனியன் ஊத்தப்பம்.
ஆனியனே வரலை சார் மார்க்கெட்டுக்கு.
அடடா, அப்ப மசால் தோசையே கொடுங்க.
ஆனியன் இல்லாம் மசாலா பண்ணினா ருசியா இருக்குமா, சார்?
அப்ப நான் என்னதான் சாப்பிட்றது? சாதா தோசையே கொடுங்க.
கரண்ட் கட்ல ஃபிரிட்ஜ் ஓடல. சட்னி புளிச்சுர்ச்சு. சாம்பார் மட்டுந்தான். பரவால்லையா?
தலையெழுத்து. அதையாவது கொண்டு வாப்பா. பசிக்குது.
இதுதான் இந்திய ஜனநாயகத்தில் வாக்காளர்களின் நிலை. அவர் சொன்னது போல் தலையெழுத்து என்றும் சொல்லலாம்.
தமிழ்நாட்டு வாக்காளர் என்றால் இன்னும் பாவம்.
பழைய தோசையை கல்லில் போட்டு சூடாக்கி தருவதைதான் சாப்பிட முடியும்.

இந்துவாக இருந்து முஸ்லிம் ஜிகாதியாக மாறியவன் அடையாளம் காணப்பட்டான்

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் மற்றொரு ‘ஜிகாதி ஜான்’ உருவாகியிருக்கிறான். அவன் இந்திய வம்சாவளியை சேர்ந்தவன். சமீபத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஒரு வீடியோ வெளியிட்டனர். அதில் இங்கிலாந்து ராணுவத்துக்கு உளவாளியாக இருந்த 5 பிணைக்கைதிகளை முகமூடி அணிந்த தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற வீடியோ காட்சி இடம் பெற்றிருந்தது. பிணைக் கைதியை சுட்டுக் கொன்றவர்களில் ஒருவன் ஜிகாதி ஜான்–2 என அழைக்கப்பட்டான். அவன் இங்கிலாந்தை சேர்ந்தவன் என தெரிய வந்துள்ளது. அவனது பெயர் அபு ருமாசயா (32). இவனது உண்மையான பெயர் சித்தார்த்த தார். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவன் பிறப்பால் இந்து. பின்னர் இவன் இஸ்லாம் மதத்துக்கு மாறி ஆயிஷா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டான். ஆயிஷா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவள். எனவே, அவனும் தீவிரவாதியாக மாறினான். லண்டனில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்தான். வீடியோவில் வெளியான குரலை வைத்து அவன் சித்தார்த்த தார் தான் என தாயாரும், சகோதரியும் தெரிவித்தனர். இதை இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து போலீசாரும் உறுதி செய்துள்ளனர்.

ஒபாமா அதிரடி..இனி யாரும் சுலபமாக துப்பாக்கி வைத்திருக்க முடியாது

அமெரிக்காவில் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு மக்களுக்கு இருந்துவரும்
உரிமையை கட்டுப்படுத்துவது தொடர்பான அதிபர் ஒபாமாவின் திட்டங்கள் பற்றி அவரது அலுவலகமான வெள்ளை மாளிகை விவரம் வெளியிட்டுள்ளது. துப்பாக்கி விற்பவர்கள் அனைவரும் அதற்காக தங்களைப் பதிவுசெய்துகொண்டவர்களாக இருக்க வேண்டும் என்றும், துப்பாக்கி வாங்க வருபவர்களைப் பற்றி பரிசோதனைகள் செய்த பிறகு தான் அவர்களிடம் விற்க வேண்டும் என்றும் புதிய விதிகள் கொண்டுவரப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Dmdk.Titanic தேமுதிக டைடானிக் பாதையில்..கப்டனோ சதா full ..கப்பலுக்கு உள்ளேயே ஐஸ் பாறைகள்...பிரேமா...சுதீஷ்....

விஜயகாந்த் ஏன் கருணாநிதி, வைகோ, பி.ஜே.பிக்கு தேவைப்படுகிறார்? - தி.மு.க. சர்வே சொல்லும் உண்மை! 2005-ல் விஜயகாந்த் 'அரசியல் என்ட்ரி’ கொடுத்து தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என புதிய கட்சியை ஆரம்பித்தபோது, உலகத் தமிழர்கள் அனைவரிடமும் ஒரு பிரமாண்ட எதிர்பார்ப்பு இருந்தது. 'நீண்ட காத்திருப்புக்கு பிறகு தமிழகத்துக்கு ஒரு நல்ல மாற்றம் வந்துவிட்டது' என்று மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட விஜயகாந்தின் ரசிகர்கள் உற்சாகமாக குரல் கொடுத்தார்கள்.
திரையில் பார்த்த அதே சிவந்த கண்களோடும் கோபத்தோடும் விஜயகாந்த் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு பெரிய கட்சிகளையும் வறுத்தெடுத்தார். அவரது தீவிரப் பிரசாரமும் கணிசமான மக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கையும் சாதகமாக இருக்க... அப்போது நடைபெற்ற தேர்தலில் 8.38% வோட்டுக்களை அவர் குவித்ததோடு தன் கட்சி சார்பாக தனி ஒருவனாக சட்டமன்ற உறுப்பினராகவும் ஜெயித்தார்.

நாஞ்சில் சம்பத் தெரிந்தே உளறினார்....வைகோ வந்துவிடகூடாது என்கின்ற அவசரம்....புகைச்சல் வெளிச்சம்

""பொதுக்குழுவை கோலாகலமாக கொண்டாட லையே... ஏற்கனவே நடந்த எங்க பொதுக்குழுவோடு இதனை ஒப்பிடுகிறபோது ஆயிரத்தில் ஒரு பங்கு ஏற்பாடு பண்ணலியே... ரொம்ப எளிமையால்ல நடத்துனோம்.''""அந்தந்த வீட்டு உரிமை யாளர்களோட அனுமதி பெற்று, அவர்களின் மகிழ்ச்சி யோடுதான் பேனர்கள் வைத்தோம். பேனர் வச்சதால ஆள் போக முடியாம, மூச்சுத்திணறி இறந்துட்டாங்களா?''

""500 பேர் இறந்தது வெள்ளத்தில் அடிச்சிட்டு போனதாலா? வெள்ளத்தை வேடிக்கப்பாக்க போனதாலா? ஒரு வீட்டில் ஒப்பாரி கேட்கும். அடுத்த வீட் டுல கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணி யிருக்காங்க. ஒப்பாரி கேட்கிறது என்பதற் காக கல்யாணத்தை நிறுத்த முடியாது.''

செவ்வாய், 5 ஜனவரி, 2016

400 ரயில் நிலையங்களை பராமரிக்கும் பணி தனியாரிடம்...அருண் ஜெட்லி முடிவு:

400 ரயில் நிலையங்களை பராமரிக்கும் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவன நாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், நிதி ஆதாரங்களை பெருக்கும் பணியில் ரயில்வேத்துறை ஈடுபட்டு வருகிறது. இந்த வகையில் ரயில் நிலைய பராமரிப்பும் தனியார் வசம் ஒப்படைக்கப்படும். இதற்காக 400 ரயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வெகு விரைவில் அந்த ரயில் நிலையங்களை பராமரிக்கும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்க ரயில்வேத்துறை நடவடிக்கை எடுக்கும். சிரிய மற்றும் நடுத்தர விமான நிலைங்களை பராமரிக்கும் பொறுப்பையும் தனியார் வசம் ஒப்படைப்பது குறித்து ஆலோசனை செய்யப்ப்டடு வருகிறது என்று தெரிவித்தார்.nakkheeran,com

உலகின் மிகப்பெரிய நீலநிற இரத்தினக்கல் இலங்கையில்....100 மில்லியன் அமெரிக்க டாலர்கள்


முதல் முறையாக உலகின் மிகப்பெரிய நீலநிற மாணிக்கக்கல் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள அழகுக்கல் நிபுணர்கள் உரிமை கோரியுள்ளனர். ‘த ஸ்டார் ஆப் ஆடம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ப்ளூ ஸ்டார் சபையர் என்ற மாணிக்கக்கல் 1404.49 காரட் நிறை கொண்டது.இதன் சந்தை மதிப்பு 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும், பெயர் வெளியிட விரும்பாத இந்தக் கல்லின் தற்போதைய உரிமையாளர் இந்த மாணிக்க கல்லை 175 மில்லியன் டாலர்கள் வரை (சுமார் ஆயிரத்து நூறு கோடி ரூபாய்) ஏலத்தில் விற்பனை செய்ய முடியும் என்றும் அழகுக்கல் நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இந்த மாணிக்கக்கல் ‘இரத்தினங்களின் நகரம்’ என்று அழைக்கப்படும் இலங்கையின் இரத்தினபுரி பகுதியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கக்கல் என்ற உலக சாதனைப் பட்டியலில் தற்போது உள்ள மாணிக்கக்கல் 1,395 காரட் நிறை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. மாலைமலர்.com

திருச்சியில் கனிமொழி பிறந்தநாளுக்கு வாழ்த்து போஸ்டர்கள்....உள்குத்து இருக்குமோ?


கனிமொழிக்கு எதிரிகள் ஒருபோதும் வெளியே இருந்ததில்லை. எப்போதும் குடும்பத்துக்கு உள்ளேயே அவருக்கு குழிபறிக்க ஒரு கூட்டம் காத்திருக்கிரதாக சொல்லப்படுகிறது. திமுகவின் அடிப்படை கொள்கைகளில் பற்று கொண்ட முக்கிய தலைவர்களில் இவர் ஒருவர்தான் மிகவும் நேர்மையானவராக உள்ளார். இவரை சிறைக்கு தள்ளியவர்கள் வடவர்கள் மட்டும் அல்ல உள்வீட்டிலேயே உள்ள கோடரி காம்புகள்தான் என்பது முழு உலகத்திற்கும் தெரியும். கனிமொழிக்கு திமுகவின் தலைமையை ஏற்க கூடிய தகுதி உள்ளதாக காட்டி திமுகவை ஒரு அதிமுக போல மாற்ற முயற்சிக்கும் பாதி பார்பன கும்பல்களிடம் கனிமொழி ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.உடன்பிறந்தே கொல்லும் வியாதிகள்தான் தாரளாமாக உள்ளதே?

திமுக ஆர்ப்பாட்டம்...தொண்டர்கள் குவிந்ததால் நெரிசலில் சிக்கிய கலைஞர்

சென்னை திமுக ஆர்ப்பாட்டத்தில் குவிந்த தொண்டர்கள் கூட்டம் | படம்: எஸ்.ஆர்.ரகுநாதன்.மாஸ்-காட்டிய-கழகம்-4-மணி-நேரம்-திணறித்-தவித்த-மக்கள்-8-தகவல்களுடன்-திமுக-ஆர்ப்பாட்டம்/ சென்னை திமுக ஆர்ப்பாட்டத்தில் குவிந்த தொண்டர்கள் கூட்டம் | படம்: எஸ்.ஆர்.ரகுநாதன். >செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு குறித்து நீதி விசாரணை நடத்தக் கோரி நடந்த திமுக ஆர்ப்பாட்டத்துக்கு தொண்டர்கள் குவிந்ததால் சென்னை வாலாஜா சாலையில் காலை முதலே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.குறிப்பாக, அண்ணா சாலை, வாலாஜா சாலை, கடற்கரைச் சாலை ஆகிய பகுதிகளில் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முன்னதாக, திமுக கட்சி ரீதியாக பிரிக்கப்பட்டுள்ள சென்னை தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு, திருவள்ளூர் வடக்கு, தெற்கு ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜீன்ஸ் பயங்கரவாதம் – தினமணி/திருக்கோவில் லூலாயி ! இந்து "அரை" நிலைய துரை

ஜீன்ஸ் போட்டால் கடவுளுக்கு ஆகாதாம்!
ஆன்ட்ராய்டு காலத்தில் அரை டிராயரை தடை செய்தால் பழனி ஆண்டவனே குற்றவாளியல்லவா?
காமாட்சி ஆட்சி செய்யும் சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை மீனாட்சி ஆட்சி புரியும் மதுரையிலும் இருக்கிறது. புட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட சிவனான்டி மண்ணில் ஜீன்ஸ் பேண்டுகளின் அட்டகாசம் அதிகரித்தபடியால், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அவர்கள் திருக்கோவில் ஆடை கட்டுப்பாடு தொடர்பாக தாமாகவே ஒரு வழக்கை பதிவு செய்தார்.
கிரானைடும், ஸ்டிக்கரும், பீஃப் கானமும் ஆட்டம் போடும் தமிழ்த்தாய் ஊரில் தாமாகவே வழக்கு போடுவதற்கு எத்தனையோ இருக்கையில் இற்றுப் போகும் அழுக்கு பேண்டு குறித்து ஒரு நீதியரசர் ஏன் இத்தனை அற ஆவேசம் கொண்டிருக்க வேண்டும்? ஏதோ இந்த மட்டிலாவது இந்த மண்ணில் அறம் சீவித்திருக்கிறதே என்று காரப் பணியாரம் சுவைத்துக் கொண்டு கவிதை ஏரியாவில் இலக்கியம் பூசும் சில வார்த்தை செதுக்கர்கள் சிலாகிக்கிறார்கள்.
ஜீன்ஸ் போட்டால் கடவுளுக்கு ஆகாதாம்!
அந்த வழக்கு தொடர்பாக கடந்த நவம்பர் 26-ம் தேதி வைத்தியநாதன் சில உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார். நெற்றிக் கண் திறப்பினும் கூந்தலுக்கு இயற்கையாக மணம் கிடையாது என்ற அரிய உண்மையை நிலைநாட்டிய வைகைக் கரையில் லெக்கின்ஸ் போட்டால் இயற்கையாக பக்தி வராது என்று ஒரு பத்வாவை ஏவி விட்டார். அதில், தமிழக இந்து கோவிலுக்குள் வரும் ஆண்கள் மேல் சட்டை, வேட்டி, பைஜாமா, சாதாரண பேண்ட் (ஜீன்ஸ் இல்லை), சட்டை அணிந்து வர வேண்டும், பெண்கள் சேலை, தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் மற்றும் குழந்தைகள் உடல் முழுவதும் மூடப்பட்ட ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்றெல்லாம் தாலிபான் முல்லாக்களுக்கு போட்டியாக உத்தரவிட்டார். ஆன்ட்ராய்டு காலத்தில் அரை டிராயரை தடை செய்தால் பழனி ஆண்டவனே குற்றவாளியல்லவா?
நீதியரசரே பொங்கி விட்டால் திருக்கோவில்களில் வெண் பொங்கலை மட்டும் படையல் செய்யும் இந்து அறநிலையத் துறையும் பொங்கினார்கள்.