தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின்போது வீடுதோறும் தினமும் 700 லிட்டர் குடிநீர் இலவசமாக விநியோகிக்கப்படும் என்று "ஆம் ஆத்மி' கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. அதைத் தொடர்ந்து, முதல்வராகப் பொறுப்பேற்றதும் தில்லியில் குடிநீர் விநியோகம் தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்ற முன்னுரிமை அளிக்கப்படும் என்று அரவிந்த் கேஜரிவால் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
முதல்வருடன் ஆலோசனை: இந் நிலையில், கடந்த சனிக்கிழமை முதல்வர் பொறுப்பை ஏற்ற அரவிந்த் கேஜரிவால் அன்று மாலையே குடிநீர் விநியோகம் தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.












