திங்கள், 28 அக்டோபர், 2013

முஷரப் முன்பு எப்படி நவாஸ் ஷெரிப்பை கவிழ்த்து ஆட்சியை பிடித்தார் ? விபரம் வெளியாகியது

பாகிஸ்தானில் கடந்த 1999–ம் ஆண்டு நவாஸ் செரீப் பிரதமராக வந்த போது பர்வேஸ் முஷ்ரப் ராணுவ தலைமை தளபதி ஆக இருந்தார். அப்போது
அக்டோபர் 12–ந் தேதி ராணுவ புரட்சி மூலம் நவாஸ் செரீப் ஆட்சியை கவிழ்த்து முஷ்ரப் அதிகாரத்தை கைப்பற்றி சர்வதிகாரி ஆனார்.
பின்னர் தன்னை பாகிஸ்தானின் அதிபராக அறிவித்து கொண்டார். நவாஸ் செரீப் ஆட்சியை கவிழ்த்து விட்டு ராணுவ புரட்சி நடத்த முஷ்ரப் முன்கூட்டியே திட்டமிட்டு இருந்தார்.
அதை ராணுவ முன்னாள் தளபதி ஷாகித் அஷீஷ் தற்போது அம்பலபடுத்தியுள்ளார். இவர் எழுதிய புத்தகம் சமீபத்தில் வெளியானது. அதில், இந்த தகவலை பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

மைக்கல் ஜாக்சனின் மரணத்திற்கு காரணமான மருத்துவர் விடுதலை

உலகப் புகழ்பெற்ற பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009-ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது சாவு பற்றிய மர்மம்
அதிகரித்த வேளையில் அவரது சாவுக்கு அவரது மருத்துவர்தான் காரணம் என்று போலீசாரால் துப்பறியப்பட்டது. அவரது குடும்ப டாக்டர் கான்ராடு முர்ரே அளவுக்கு அதிகமான சக்தி வாய்ந்த மாத்திரை வழங்கியதுதான் காரணம் என்று கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மீது லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை 6 வாரங்கள் நடைபெற்றது. அப்போது ஜாக்சனின் குடும்ப டாக்டர் அரக்கத்தனமாகவும், தீமையாகவும் செயல்பட்டுள்ளார் என்றும் மரணத்துக்குக் காரணம் மருத்துவரே என்றும் கூறி 2011-ம் ஆண்டு அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

டாக்டர் முர்ரே இரண்டு ஆண்டுகாலம் சிறை தண்டனையை அனுபவித்தார். இந்த நிலையில் டாக்டர் முர்ரேயின் கவனக்குறைவால் அறுவை சிகிச்சைக்கு முன்னர் அளிக்கப்படும் மயக்க மருந்தை அதிகமாக மைக்கேல் ஜாக்சனுக்கு கொடுத்ததாலேயே அவர் இறந்தார் என்று கூறப்பட்டது.

புதிய நீதிபதி நியமனத்தை எதிர்த்து ஜெயலலிதா மனு ! சொத்து குவிப்பு வழக்கை எப்படியாவது பைசல் பண்ணலாம்னா முடியல்லை ?

பெங்களூரு: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க புதிய நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாலக்கிருஷ்ணா கடந்த மாதம் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார். வழக்கை விரைவாக முடிக்க அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பாலக்கிருஷ்ணாவிற்கு பதவி நீட்டிப்பு வழங்குவது பற்றி கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கர்நாடக அரசு ஆலோசிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. ஆனால் வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்று நீதிபதி பாலக்கிருஷ்ணா மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் பொறுப்பு நீதிபதியாக செயல்பட்ட முடிகவுடரை சிறப்பு நீதிபதியாக நியமனம் செய்து கர்நாடக அரசு அறிக்கை வெளியிட்டது.

நடிகை சரிதா புகாருக்கு முகேஷ் பதில்

நடிகை சரிதாவிடம் இருந்து சட்டப்படி விவாகரத்து பெற்றுக் கொண்ட பிறகே இரண்டாவது திருமணம் செய்தேன் என்று நடிகர் முகேஷ் கூறியுள்ளார்.
சரிதாவை திருமணம் செய்த நடிகர் முகேஷ் அவரைப் பிரிந்து கேரளாவைச் சேர்ந்த நடனக் கலைஞர் தேவிகாவை காதலித்து கடந்த வாரம் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்துக்கு முகேஷின் முதல் மனைவியான நடிகை சரிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து சரிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், முகேஷ் சட்ட விரோதமாக தேவிகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், அவருக்கும் எனக்கும் இதுவரை சட்டப்படி விவாகரத்து நடக்கவில்லை; விவாகரத்து பெறாமல் இரண்டாம் திருமணம் செய்தது கிரிமினல் குற்றம். எனவே வழக்கு தொடரப் போகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
சரிதாவின் குற்றச்சாட்டுக்கு முகேஷ் சார்பில் அவர் வழக்குரைஞர்வெளியிட்டுள்ள பதிலில், ”சரிதாவின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை. சரிதாவை சட்டரீதியாகப் பிரிந்ததற்கான அனைத்து ஆவணங்களையும் பதிவு அலுவலகத்தில் அதிகாரியிடம் அவர் தாக்கல் செய்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. dinamani.com

அம்மா உணவகத்திற்கு Traffic ராமசாமி வழக்கு ! அம்மா குடிநீருக்கும் வழக்கு !

சென்னை: ‘அம்மா' உணவகம் பெயரை மாற்றக்கோரியும்... குடிநீர் பாட்டிலில் இரட்டை இலை சின்னத்தை நீக்க வலியுறுத்தியும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 10 மாநராட்சிகளில் அம்மா உணவகம் என்ற பெயரில் மலிவு விலை கேண்டீன் செயல்பட்டு வருகிறது. இதேபோல் மலிவு விலையில் குடிநீரும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் அம்மா உணவகம் பெயரை முதலமைச்சர் உணவகம் என்று மாற்றக் கோரியும், தமிழக அரசு வழங்கிவரும் அம்மா குடிநீர் பாட்டிலில் இருக்கக்கூடிய இரட்டை இலை சின்னத்தை நீக்கக் கோரியும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்தார். மக்கள் வரிப்பணத்தில் தொடங்கப்படும் திட்டங்களில் முதலமைச்சர் படங்களும் , கட்சி சார்ந்த சின்னங்களும் இடம் பெறுவது சட்டவிரோதமான செயல் என்று அவர் தனது வழக்கில் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி 2004 ஆம் ஆண்டு ஆயிரம் லிட்டர் குடிநீரை 5 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், தற்போது 1 லிட்டர் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், 4 வார காலத்திற்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
tamil.oneindia.in/

நம்பிக்கை இல்லாமல்தான் ஷூட்டிங் ஆனால் அதையே சவாலாக எடுத்தேன் -

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்த காயத்ரி நடிக்கும் புதிய
படம் ‘ரம்மி. விஜய் சேதுபதி, ‘இனிகோ பிரபாகர், ஐஸ்வர்யா நடிக்கின்றனர். கே.பாலகிருஷ்ணன் டைரக் ஷன். டி.இமான் இசை. ஜே.சதீஸ்குமார் வெளியீடு. இப்படத்தின் ஆடியோவை கமல்ஹாசன் நேற்று காலை வெளியிட்டார். பட குழுவினர் நிருபர் களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது காயத்ரி கூறியதாவது:இதுவரை நகரத்து பெண்ணாக மாடர்ன் உடைகள் அணிந்துதான் நடித்திருக்கிறேன். ‘ரம்மி‘ படத்தில் நடிக்க என்னிடம் கால்ஷீட் கேட்ட இயக்குனர் கிராமத்து பெண்ணாக நடிக்க வேண்டும் என்றார். ஒரு நிமிடம் ஷாக் ஆனேன். ‘கிராமத்து பெண் வேடத்துக்கு என்னை எப்படி தேர்வு செய்தீர்கள். இதுவரை அந்த வேடம் ஏற்றதில்லையே என்றேன். ‘கதைப்படி கொஞ்சம் மாடர்ன் தோற்றத்திலான கிராமத்து பெண் தேவை அதற்கு நீங்கள் பொருத்தமாக இருப்பீர்கள் என்றார். அதன்பிறகு ஏற்றுக்கொண்டேன். முதலில் நம்பிக்கை இல்லாமல்தான் ஷூட்டிங் சென்றேன். பிறகு அதை சவாலாக எடுத்துக்கொண்டு நடித்தேன் என்றார் - See more at: tamilmurasu.org

முன்னாள் போராளிகள் ஏன் சொந்த ஊருக்கு போக விரும்புவதில்லை ?

-இலங்கையில் நேரடியாக சேகரிக்கப்பட்ட தரவுகளுடன், ரிஷி.
மேலேயுள்ள போட்டோவில் இடதுபுறம், விடுதலைப் புலிகள்
முன்னாள் போராளி ஒருவரும் ராணுவத்தை சேர்ந்த ஒருவரும் வவுனியா நகரசபை மைதானத்தில் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட போட்டோ. வலதுபுறம், களுத்துறை மாவட்டம் பாயகல என்ற இடத்தில் உள்ள பயிற்சி மையத்தில் முன்னாள் போராளிகள்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நீண்டகால போராளிகளாக இருந்தவர்கள் பலருடன் பேசியபோது, இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது தொடர்பான மனோதத்துவ பிரச்னை ஒன்று அவர்களுக்கு இருப்பதை உணர்ந்துகொள்ள முடிந்தது. இந்த பிரச்னை, இயக்கத்தின் படையணிகளில் இருந்தவர்களிடம்தான், அதிகம் உள்ளது. அரசியல் பிரிவு உட்பட இதர பிரிவில் இருந்தவர்களிடம் அவ்வளவாக கிடையாது.
இயக்கத்தின் படையணிகளில் இருந்தவர்கள், தமது வாழ்வின் நீண்ட காலப் பகுதியில் சமூகத்தை ஒரு ராணுவ பார்வையில் புரிந்து கொண்டவர்களாக (understand the socity from a military perspective) உள்ளார்கள்.

நரேந்திர மோடி: நிதிஷ் குமார் ஒரு துரோகி ! புலிகளிடம் இருந்து இந்த துரோகி லேபில் வியாபாரத்தை மோடி வாங்கிவிட்டார்

‘‘பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஒரு துரோகி’’ என பாட்னாவில் நடந்த பா.ஜ கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கடுமையாக தாக்கி பேசினார். தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தையும் பொருட்படுத்தாமல், பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த பா.ஜ கட்சியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மற்றும் பேரணியில் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசியதாவது: பா.ஜ.வில் இருந்து முதல்வர் நிதிஷ் குமார் ஏன் விலகினார் என மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். ஜெயப்பிரகாஷ் நாராயன், ராம் மனோகர் லோகியா போன்ற பெருந்தலைவர்களை முதுகில் குத்தியவர்களால், நீண்ட காலமாக நட்புடன் இருந்த பா.ஜ.வை விட்டு எளிதில் வெளியேற முடியும்’’ என நான் கூறிவருகிறேன். காங்கிரசிடம் இருந்து நாட்டை காப்பாற்ற தனது வாழ்நாள் முழுவதும் போராடியவர் குரு ஜெயப்பிரகாஷ் நாராயன். ராம் மனோகர் லோகியாவின் சீடர் என கூறிக் கொள்ளும் நிதிஷ் குமார் தற்போது காங்கிரஸ் கட்சியுடன் உறவாடுகிறார்.

சமுக வலைதளங்கள் ! முழு உலகத்தையும் விரல்நுனிக்கு கொண்டு வருவது ஒரு அற்புதமே

 சுவிட்சர்லாந்து சென்றாலும் சரி. சொந்த ஊருக்குச் சென்றாலும் முழு உலகத்தையும் உங்கள்  அறிவுக்கு எட்டிய தூரத்தில் கொண்டு வருவது இது தான்  
கெளரி தன் காதலன் சங்கரைத் தேடிச் சென்னைக்கு வருகிறாள். ஆனால் அவள் வருவதாகத் தெரிவித்து எழுதிய கடிதம் சங்கருக்குக் கிடைக்காமல் போய்விடுகிறது. அவள் வழி மாறி இறக்க நேரிடுகிறது. இது 1988இல் வெளிவந்த இதயக்கோயில் படத்தில் உள்ள ஒரு சம்பவம். The Notebook என்ற ஆங்கிலப் படத்தில் நாயகன் தன் காதலிக்கு 365 கடிதங்களை எழுதுகிறான். அவை எல்லாமும் கிடைக்காமல் போய்விடுகிறது. இருவரும் வேறு ஒருவருக்கு நிச்சயயிக்கப்படுகிறார்கள்.இந்த இரண்டு சம்பவங்களும் இன்றைக்கு உள்ள இளைஞர்களுக்கு வேடிக்கையாகத் தோன்றக்கூடியது. 'ஒரு டெக்ஸ்ட் செஞ்சிருக்கலாமே?' எனச் சொல்வார்கள்.இன்றைக்குத் தகவல் தொடர்பு அவ்வளவு வளர்ச்சி அடைந்துவிட்டது. தொலைபேசி முன்பே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அது பொதுப் பயன்பாட்டுக்கு வரவில்லை. செல்போன் கண்டுபிடிக்கப்பட்டதுதான் உண்மையிலேயே தகவல் தொழில்நுட்பப் புரட்சி எனலாம். இன்று செல்போன் என்பது பேசும் கருவியாக மட்டுமில்லை. பலவிதமான பயன்பாடுகளுடன் இருக்கிறது. அதில் இருக்கும் மிக முக்கியமான பயன்பாடு இன்றைக்கு விரைவாக வளர்ச்சி அடைந்து வரும் சமூக வலைத்தளங்கள்.

BJP : ஒவ்வொரு தமிழனின் வீட்டிலும் தாமரை கொடி பறக்க வேண்டும் ! ஒவ்வொரு தமிழன் காதிலும் பூ சூட்ட வேண்டும் !

ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக சார்பில் ஈரோட்டில்  நடைபெற்ற புதிய உறுப்பினர்கள் இணையும் நிகழ்ச்சி யில் பாஜக மாநிலத் தலைவர் அன்று என்னிடம் பல கேள்விகளை பத்திரிகையாளர்கள் முன் வைத்தனர். ஆனால் நான் அவர்களிடம் 6 மாதத்திற்கு பின்பு கேளுங்கள் என்று கூறினேன்.
பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.அவர், ‘’ பாரதிய ஜனதாவை மதவாத கட்சி என்று கூறுகிறார்கள். ஆனால் ஏன் , எதற்கு அப்படி சொன்னார்கள் என்று சொன்னவர்களுக்கும் தெரியாது. கேட்பவர்களுக்கும் தெரியாது. அரசியலில் தேச பக்தியை ஊட்ட வேண்டும் என்று கூறிய கட்சி தான் பாஜக. பாஜக வளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.தமிழகத்தில் பாஜக வளரக்கூடாது என்று கூறிய அரசியல் கட்சிகள் பல, நம்முடன் கூட்டணி வைக்க முயற்சி செய்துவருகின்றன. கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் 30- ம் தேதி பாரதிய ஜனதா மாநில தலைவர் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது.
 கடந்த 2010 ம் ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் ஜூலை போராட்டம் நடத்தப்பட்டது.

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

இந்த களவாணிகளின் காதலன் மோடி ! ஜக்கி வாசுதேவ் அமிர்தானந்தமாயி பால் தினகரன் நாராயணீ பீடம் சாமி பங்காரு அடிக சத்குரு, மகரிஷி, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ

அரசியல்வாதிகள் கில்லாடிகளா? சாமியார்கள் கில்லாடிகளா? இப்படி யாராவது கேட்டால் கேள்வியை முடிப்பதற்குள்ளாக பதில் சொல்லிவிடலாம். பாபாஜி ராம்தேவிலிருந்து நித்யானந்தா வரைக்கும் அத்தனை சாமியார்களும் கில்லாடிகள்; அத்தனை சாமியார்களும் கேடிகள். இந்த பட்டியலுக்குள் ‘காவி சாமியார்கள்’ மட்டுமில்லை, பால் தினகரன், மோர் தினத்தந்தி, தயிர் தினமலர் என்று மதத்தின் பெயரால் வியாபாரம் செய்து கொண்டிருக்கு அத்தனை பேரையும் செருகிவிடலாம். இந்த வாரத்தில் நரேந்திர மோடியை பால் தினகரன் சந்தித்திருக்கிறார். சந்தித்துவிட்டு போகட்டும். நமக்கென்ன வந்தது? இதே போலத்தான் சில மாதங்களுக்கு முன்பாக மோடியை ஜக்கி வாசுதேவ் சந்தித்தார். கடந்த மாதம் திருச்சிக்கு வரும் வழியில் கேரளாவில் அமிர்தானந்தமாயியைச் சந்தித்துவிட்டு வந்துதானே கூட்டத்திற்கு டாட்டா சொன்னார், Mr.மோடி. 
பிஸினஸ் செய்யும் சாமியார்கள் எல்லாம் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும் தங்கள் அடிவயிற்றில் கை வைத்துவிடக் கூடாது. அவ்வளவுதான் அவர்களின் நோக்கம். அரசியல்வாதிகளின் கருப்புப்பண விவகாரங்களை பற்றி கதறும் மீடியாவும், சினிமாக்காரனின் வருமான வரி பற்றி பேசும் புரட்சியாளர்களும் ஏன் சாமியார்களின் கேப்மாரித்தனங்களைப் பற்றி அதிகம் பேசுவதில்லை? சாபம் விட்டுவிடுவார்கள் என்ற பயம் போலிருக்கிறது. 
நித்யானந்தா இருக்கிறான் பாருங்கள்- ஒருசமயம் எங்கள் கல்லூரிக்கு வந்திருந்தான்.

தவறான சிகிச்சியால் உயிரிழந்த பெண் ! கோடம்பாக்கம் தனியார் மருத்துவமனை...

சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண், டாக்டர்களின் தவறான அணுகுமுறையால் பரிதாபமாக உயிரிழந்தார்.சென்னை அடுத்த சேலையூர் அக்ரகாரத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் மோகன். தனியார் கார் நிறுவனம் ஒன்றில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஹரினி நாச்சியார் (வயது 23).குழந்தை பேறுக்காக கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த 2 மாதமாக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவருக்கு மயக்க மருந்து கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவர் கண் திறக்காமலேயே இறந்தார்.டாக்டர் அகிலா அவருக்கு சிகிச்சை அளித்தார். அவர் எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் பணியாற்றுகிறார்.  இது பற்றி தகவல் அறிந்த நாச்சியாரின் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் திரண்டனர். தவறான சிகிச்சையால்தான் இறந்ததாகவும், இதனால் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அவர்கள் முற்றுகையிட்டனர்.போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.ராயப்பேட்டை மருத்துவ மனையில் டாக்டர்கள் குழு நாச்சியாரின் உடலை பிரேத பரிசோதனை செய்கிறது. இதன் முடிவில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தால் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதற்கிடையே அந்த பெண்ணின் உறவினர்கள் பிரேத பரிசோதனை நடத்தப்படும் ராயப்பேட்டை மருத்துவ மனை முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.படங்கள் : அசோக்; nakkheeran

சவுதி பெண்கள் வாகனம் ஓட்டும் உரிமை போராட்டம் வெற்றி கரமாக தொடங்கினர் ! அரசு கடும் எச்சரிக்கை !


More than 60 Saudi women got behind the wheels of their cars as part of a protest against a ban on women driving in the kingdom, activists have claimed.
A Saudi professor and campaigner, Aziza Youssef, said the activists have received 13 videos and another 50 phone messages from women showing or claiming they had driven, the Associated Press reported.
She said it had not been not possible to verify all of the messages. But, if the numbers are accurate, they would make Saturday's demonstration the biggest the country has ever seen against the ban.
சவுதியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற இருந்த ‘பெண்கள் காரோட்டும் போராட்டம்’ கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதி உட்துறை அமைச்சு, “சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபடுவதற்காக எந்தவொரு பெண் காரில் டிரைவர் ஆசனத்தில் பொது இடத்தில் காணப்பட்டாலும், உடனே கைது செய்யப்படுவார். இதில் எந்த விதிவிலக்கும் கிடையாது” என நேற்று அறிவித்திருந்தது.
சவுதியில் பெண்கள் டிரைவ் செய்வது, சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் டிரைவ் செய்யும் பெண்கள் சட்டவிரோத நடவடிக்கைக்காக தண்டிக்கப்படுவார்கள் என்றும் அந்நாட்டு சட்டம் கூறுகிறது.
இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள சில பெண்கள் அமைப்புகள், பெண்கள் வாகனம் செலுத்தும் போராட்டம் இன்று நடைபெறும் என அறிவித்திருந்தனர். அதையடுத்தே இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உட்துறை அமைச்சு அறிவித்தது.

நடிகை அர்ச்சனா சின்ன திரைக்கு வருகிறார் ! சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் சீரியல்



பாலுமகேந்திராவின் வீடு , நீங்கள் கேட்டவை உள்பட பல்வேறு படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை அர்ச்சனா. தமிழில் வீடு, தெலுங்கில் தாசி ஆகிய இரு படங்களுக்காகவும்  சிறந்த நடிகைக்கான 2தேசிய விருதுகளை பெற்று உள்ளார்.  தங்கர் பச்சானின் ஒன்பது ரூபாய் நோட்டு, தனுஷின்  பரட்டை என்கிற அழகு சுந்தரம் என்ர படங்களில் அவர் கடைசியாக நடித்து இருந்தார். மிகவும் எளிமையாக காட்சி அளிக்கும் அர்ச்சனா  குச்சிப்புடி, கதகளி நடனங்களில் தேர்ச்சி பெற்றவர்.
கடந்த 5 வருடங்களாக நடிக்காமல் இருந்த நடிகை அர்ச்சனா சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார். இந்த முறை அவர் நடிப்பது பெரிய திரையில் அல்ல சின்ன திரையில்.
ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை, பாஷா படங்களை  இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் சின்னத்திரை தொடர்களில் அவர் நடிக்கிறார்.

தங்கப்புதையல் சாமியார் பயங்கர சக்சஸ் ! பக்தர் கூட்டம் அலை மோதுகிறது ! விளம்பர ஸ்டன்ட் வெற்றி !

உன்னவோ: பழமையான 19ம் நூற்றாண்டு கோட்டையில் 1,000 டன் தங்கம்
புதைந்திருப்பதாக கூறிய சாமியார் சோபன் சர்க்கார், இன்னமும் பிஸியாகி விட்டார். சாமியாரை பார்க்க அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், விவிஐபிக்கள் முதல் சாதாரண மக்கள் வரை தினமும் ஆசிரமத்திற்கு வருகின்றனர். 1,000 டன் தங்க கனவை கண்டவர் இவரா என்று ஆச்சர்யம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. 65 வயதான இந்த சாமியாரிடம்  ஆசி பெறுவதற்காக தினமும் நூற்றுக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் அனைவரும் ஆசிரமத்திற்கு வெளியே அமர்ந்திருக்க, மகாராஜாவைப்போல் வெளியில் வந்து ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் எல்லோருக்கும் ஆசிர்வாதம் வழங்குகிறார். பக்ஷாரில் உள்ள ஆசிரமத்தில் வசித்துவந்த சாமியார் தற்போது அருகில் உள்ள மற்றொரு ஆசிரமத்திற்கு மாறியுள்ளார். புலித்தோல் வடிவம் கொண்ட துணியால் செய்யப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து கொண்டு மிக அமைதியாக பேசும் இவரது அறையில் மின்சார விளக்குகள் கூட கிடையாது.

மோடி கலந்து கொள்ள இருந்த மைதானத்தில் இரண்டு குண்டுகள் வெடித்தன ! ஆனாலும் கலந்து கொள்கிறாராம் !

பாட்னாவில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ள
பொதுக்ககூட்ட மைதானத்தில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனால் பதற்றம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொதுக்கூட்ட மைதானத்தில் அடுத்தடுத்து 5 குண்டுகள் வெடித்ததால் கூட்டத்திற்கு வந்த மக்கள் மற்றும் பா.ஜ.க தொண்டர்கள் அச்சத்தில் சிதறி ஓடினர். ஏற்கனவே பாட்னாவில் 3 இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது மைதானத்தில் குறைந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 5 பேர்காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாட்னாவில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பை பொருட்படுத்தாமல் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்றுள்ளார். dinakaran.com

நடிகை சரிதா ஆவேசம் : 2வது திருமணம் செய்த முகேஷ் மீது வழக்கு தொடருவேன்

நடிகை சரிதாவுக்கும் மலையாள நடிகர் முகேசுக்கும் கடந்த 1989–ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஷர்வன், தேஜஸ் ஆகிய 2 மகன்கள்
உள்ளனர். இந்த நிலையில் சரிதாவுக்கும் முகேசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் விவாகரத்து செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் முகேசுக்கும் கேரளாவில் பிரபல நடன ஆசிரியையாக உள்ள தேவிகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். கேரளாவில் உள்ள ரிஜிஸ்டர் அலுவல கத்தில் அவர்கள் பதிவு திருமணம் செய்து கொண்டனர். முகேஷ் 2–வது திருமணம் செய்து கொண்டதை அறிந்ததும் நடிகை சரிதா அதிர்ச்சி அடைந்தார். தங்கள் இருவருக்கும் விவாகரத்து ஆனதாக கூறப்பட்ட தகவலை மறுத்துள்ள அவர் 2–வது திருமணம் செய்த கணவர் முகேஷ் மீது வழக்கு தொடரப்போவதாகவும் கூறியுள்ளார்.

விளம்பரங்களுக்கு ஒத்துழைக்காத நடிகைகளின் சம்பளத்தில் 20 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் ! ஒத்துழைப்பு என்பதை தவறாக விளங்கி கொள்ளவேண்டாம் !

சென்னை:ஆடியோ ரிலீஸுக்கு வராத ஹீரோயின்களுக்கு 20 சதவீதம்
சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.தமிழ் படங்களை ரிலீஸ் செய்வதற்கு முன்பு ஆடியோ ரிலீஸ், பட புரமோஷன் விழா என படத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்று சேர்க்க பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும் ஹீரோயின்கள் பங்கேற்பதில்லை என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. ‘ஆல் இன் ஆல் அழகுராஜா பட ஆடியோ விழா நடந்தபோது அதில் ஹீரோயினாக நடித்த காஜல் அகர்வால் பங்கேற்கவில்லை, அதேபோல் ‘கோலாகலம் விழாவில் ஹீரோயின் சரண்யா மோகன், ‘உயிர்மொழி படத்தில் கீர்த்தி பங்கேற்கவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புகார்கள் வந்தன. இது பற்றி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார் கூறும்போது, ‘படங்கள் வெளிவருவதற்கு முன் அதை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க புரமோஷன் நிகழ்ச்சிகள் மிக முக்கியம். இந்நிகழ்ச்சிகளுக்கு ஹீரோயின்கள் பெரும்பாலும் வருவதில்லை என்று புகார் வந்துள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்காத ஹீரோயின்களுக்கு 20 சதவீதம் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். பேசப்பட்ட சம்பளத்தில் 20 சதவீதம் வைத்துக்கொண்டு அந்த நடிகைகள் நிகழ்ச்சி யில் பங்கேற்றால் அப்பணம் தரப்படும். இதுபற்றி நடிகர் சங்கத்திடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. ஹீரோயின்களின் மேனேஜர்களும் சில சமயம் ஹீரோயின்கள் வராததற்கு காரணமாக இருப்பதால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே பிரபல நடிகையின் மேனேஜர் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
.tamilmurasu.org

சிறுமிகளுக்கு சுயம்வரம்! அதிர்ச்சித் தகவல்! மேற்கு வங்கத்தில் !

கொல்கத்தா, அக். 25-  மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்னாபூர் பகுதியில்
பழங்குடி மக்கள் இன்னும் தங்கள் குழந் தைகளுக்கு சுயம்வரம் மூலம் திருமணம் செய்துவைக்கிறார்கள். ஆண்டுதோறும் நடக்கும் இந்த திருவிழாக்கள் இந்த ஆண்டும் மாவோயிஸ்ட்கள் அச்சுறுத் தல்கள் குறைவாக இருப்பதால் வெகு விமரிசையாக நடைபெறுகிறதாம்.
இந்த அதிர்ச்சிகரமான தகவல் குறித்து அப்பகுதியில் பழங்குடியினர் முன்னேற்றத் திற்காக பாடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவனமான சுசேத்னா வை சேர்ந்த சுமிதா தத்தா கூறியதாவது:
மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் அதிகமிருந்த ஜங்கல்மஹால் பகுதிகளில் வாழும் பழங்குடிமக்கள் தங்கள் பண்டிகைக்கால சுயம்வரங் களுக் குத் தயாராகி வருகின்றனர். பின்பூர் என்னு மிடத்தில் நடைபெறும் ஆர்கொன்டா படபிந்தா மேளா போன்ற சுயம்வர விழாக் களில் தங்களது 12 வயதான சிறுமிகளுக்கு திருமணம் செய்ய இவர்கள் ஒன்று கூடு கின்றனர்.
இந்த சுயம்வரங்களில் பங்கேற் கும் சிறுமிகள் யாராவது ஒருவரை கண்டிப்பாக தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்பது குடும்பத்தினருடைய கட்டளை. இந்த சிறுமிகளுக்கு குழந்தை திருமணத்தில் இருந்து தப்பிக்க வாய்ப்பேயில்லை.

நெய் மணம் கமழும் புதிய ரக மிளகாய் Hybrid green chilly smells like ghee

 A hybrid variety of chilly that emits ghee flavour when cooked has been developed by Srilakshmi, under the
guidance of her father Padmasree T Venkatapathy Reddiar.
Using Gamma radiation, the new hybrid variety has been developed through cross breeding a Sri Lankan variety of green chilly with Sivakasi variety of green chilly in the Lakshmi Narayana Hybrid Crossandra Innovation Centre at Koodapakkam, said Srilakshmi.
On an occasional visit to forest near Munnar, this chilly was noticed by Venkatapathy Reddiar and after finding that it smells like ghee, he brought it to Puducherry. After cooking in food and feeding it to animals and then by the own family, it was ascertained that the chilly is edible. Then on experimentation by crossbreeding with pungent chillies, this new hybrid variety was developed.
புதுச்சேரியை சேர்ந்த விவசாயி வேங்கடபதி. இவர் அதிகளவில் பூக்கும் கனகாம்பரம் செடியை ஒட்டு முறையில் உருவாக்கியுள்ளார். இதேபோல் காமா கதிர்வீச்சை பயன்படுத்தி, அதிக மகசூல் அளிக்கும் புதிய ரக சவுக்கு கன்றுகளை உருவாக்கி உள்ளார். 4ம் வகுப்பு வரை பயின்ற வேங்கடபதியின் சாதனையை பாராட்டி அவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. தற்போது இவரது மகள் ஸ்ரீலட்சுமி, நெய் மணம் கமழும் புதிய ரக மிளகாயை உற்பத்தி செய்துள்ளார். அதை முதல்வர் ரங்கசாமி நேற்று அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜவேலு, துணை சபாநாயகர் செல்வம், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் சாந்தா, வேங்கடபதி, அவரது மனைவி விஜயாள் ஆகியோர் பங்கேற்றனர். ரங்கசாமி கூறுகையில், படிக்காத விவசாயி வேங்கடபதி விவசாயத்தில் புரட்சி ஏற்படுத்தி புதுவைக்கு பெருமை சேர்த்துள்ளார். தற்போது இவரது மகள் புதிய மிளகாயை கண்டு பிடித்துள்ளார். இதற்கு நெய் மணம் கமழும் மிளகாய் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தினால் சமையலில் நெய் மணம் வருவதாக பயன்படுத்தியவர்கள் கூறினர்.

திமுகவில் எல்லா மட்டத்திலும் ஸ்டாலின் ஆதரவு எதிர்ப்பு என்று இரண்டு கோஷ்டிகள் ! எகிறி பாய்ந்த அழகிரி !

எல்லா மாவட்டத்திலுமே, இரண்டு கோஷ்டிகள்; ஒன்று ஸ்டாலின் ஆதரவு
கோஷ்டி; மற்றொன்று எதிர்ப்பு கோஷ்டி. ஆக, இதில் நான் கோஷ்டி ஏற்படுத்துவதாக சிலர் சொல்வதும், அதை தலைவர் உட்பட எல்லாரும் நம்புவதும் வேதனையாக இருக்கிறது.
 முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க.வின் தென்மண்டல அமைப்பு செயலருமான அழகிரி, அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியதும், கட்சியில் மீண்டும் பரபரப்பு துவங்கி உள்ளது. ஒன்றரை மாதமாக, அமெரிக்காவில் தன் மகள் வீட்டில், அழகிரி தங்கியிருந்தார். கட்சி விவகாரங்கள் எதிலும் தலையிடாமல் ஓய்வில் இருந்த அவர், 15ம் தேதி சென்னை திரும்பினார்.அதிகாலை, 2:00 மணிக்கு, சென்னை விமான நிலையம் வந்த அவர், நேராக மதுரை சென்றுவிட்டார். இரண்டு நாள் ஓய்வுக்கு பிறகு, சென்னை வந்த அழகிரி, தி.மு.க., தலைவர் கருணாநிதியைச் சந்திக்க காத்திருந்தார்; ஆனால், சந்திக்கவில்லை. கோபாலபுரம் வீட்டுக்கு சென்ற அவர், தாயார் தயாளுவை சந்தித்து, நீண்ட நேரம் பேசியுள்ளார்.

ஜெயலலிதா கூறும் 1700 மெகாவாட் மின்சாரம் தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்டவைதான் ! அம்மா சும்மா பிலிம் காட்டாதீங்க !

சென்னை: முதல்வர் ஜெயலலிதா புதிதாக கிடைத்திருப்பதாக கூறும், 1700
மெகாவாட் மின்சாரம் முழுவதும் தி.மு.கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களின் மூலம்தான் கிடைத்திருக்கிறது என தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''முதலமைச்சர் ஜெயலலிதா 2.11.2012 அன்று சட்டமன்றத்தில் விரைவில் மின்உற்பத்தி துவக்கப்படவுள்ள திட்டங்கள் என்று சிலவற்றை குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்டதில், மேட்டூர் (600 மெகாவாட்), வல்லூர் 1 ஆம் அலகு (500 மெகாவாட்), வல்லூர் 2 ஆம் அலகு (500 மெகாவாட்), வல்லூர் 3 ஆம் அலகு (500 மெகாவாட்),  வடசென்னை (1 ஆம் அலகு, 600 மெகாவாட்), வடசென்னை (2 ஆம் அலகு, 600 மெகாவாட்) தூத்துக்குடி (இரண்டு அலகுகள், 1000 மெகாவாட்) ஆக இந்த ஏழு திட்டங்களுமே தி.மு.க. ஆட்சியிலே தொடங்கப்பட்டவைதான்.

மு.க.முத்து மருத்துவமனையில் !

தி.மு.க. தலைவர் கலைஞரின் மகன் மு.க.முத்துக்கு(65). திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து திருவாரூரில் இருந்து அவரை அவரது குடும்பத்தினர் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க காரில் அழைத்து வந்தனர்.
கார் புதுவைக்கு அருகில் வந்தபோது மு.க.முத்துவின் உடல்நிலை மேலும் மோசமானது. இதனால் புதுவை–விழுப்புரம் சாலையில் அரும்பார்த்தபுரத்தில் உள்ள ஒரு தனியார்
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டுவரப்பட்டார். சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மு.க.முத்துவை அவரது மனைவி சிவகாமசுந்தரி மற்றும் குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்து வருகின்றனர். மேடைகளில் மெல்லிசை கச்சேரிகள் மற்றம் தி.மு.க. கொள்கை விளக்கப் பாடல்களை பாடி இசை நிகழ்ச்சி நடத்தி வந்த இவர் 1970-ம் ஆண்டு 'பிள்ளையோ பிள்ளை' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் திரையுலகில் கால் பதித்தார். அதனை தொடர்ந்து, சமையல்காரன், அணையா விளக்கு, இங்கேயும் மனிதர்கள், பூக்காரி உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக நடித்து, சொந்த குரலில் பாடியும் உள்ளார்.

விஜயகாந்துக்கு காங்கிரஸ் தூது: டில்லியில் சந்திக்க ராகுல் திட்டம்

தேசிய அளவில், மூன்றாவது அணி அமைக்கும் முயற்சிக்கு, முட்டுக்கட்டை விழுந்தது போல், தமிழகத்திலும், மூன்றாவது அணி அமைக்கும் திட்டத்துக்கு, சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த அணியில் சேர, ம.தி.மு.க., தயாராக இருக்கிறது. ஆனால், தே.மு.தி.க., நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.தி.மு.க., - அ.தி.மு.க., இல்லாமல், தே.மு.தி.க.,வுடன் சேர்ந்து, தேர்தலை சந்திக்க, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் விரும்புவதாகவும், அது தொடர்பாக, டில்லியில் விஜயகாந்தை சந்தித்துப் பேச அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக, பா.ஜ., தலைமையில் மூன்றாவது அணி அமைப்பதற்கான முயற்சி துவங்கியது. பா.ம.க., - ம.தி.மு.க., - தே.மு.தி.க., ஆகிய கட்சிகளை இந்த அணியில் சேர்க்க, பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆரம்ப நிலையிலேயே, அதை ஏற்க மறுத்த பா.ம.க., தனியாக ஒரு கூட்டணியை ஏற்படுத்தியுள்ளது. சமுதாய ஜனநாயக கூட்டணி என்ற பெயரில், தனித்துப் போட்டியிட, அக்கட்சி தயாராகி விட்டது. இந்த கூட்டணி அமைய வாய்ப்பு இலை,, கேப்டன் விஜயகாந்த் அங்கு இங்கு மோதிவிட்டு கடைசியில் தலைவர் கருணாநிதி பக்கமே சாய்வார் என்பது எழுதபடாத விதி, திமுக+தேமுதிக+காங்கிரஸ்+பாமக+விடுதலை சிறுத்தை+முஸ்லிம் லீக்+புதியதமிழகம் நாற்பதும் ?

தமிழ்நாட்டில் வைகுண்டராஜன் மூன்று மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்துகிறார்

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் மருதையன் எழுதிய 'மோடி : வளர்ச்சி என்பது முகமூடி' நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னையில் தாசப்பிரகாஷ் சிக்னல் அருகே உள்ள தர்மபிரகாஷ் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நூலை பெங்களூரு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பாலன் வெளியிட்டார். வழக்கறிஞர் பாலன் பேசுகையில், நரேந்திர மோடி என்பதைவிட நரபலி மோடி என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். 2002ல் இருந்து 2006 வரை இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என்று என்கவுன்டர் செய்து கொன்று குவித்தார். குஜராத்தில் எங்கு பார்த்தாலும் அழிவும், தீக்கிரையுமாக ஒரு கேவலமான நிர்வாகத்தைதான் மோடி நடத்தி வருகிறார். இவர் ஒரு சர்வதேச குற்றவாளி. சைக்கோ. இவரை எந்த நாட்டிற்குள்ளும் வர அனுமதி அளிக்க மறுக்கின்றனர். தன்னுடைய வளர்ச்சிக்காக அனைத்து மதத்தினரையும் கொல்கிறார். இவருடைய தூண்டுதலால்தான் குஜராத் பல போலீஸ் அதிகாரிகள் தவறுகள் செய்துவிட்டு சிறையில் உள்ளனர். ஆனால் இதுவரை மோடி மீது எந்த ஒருபுகாரும் பதிவு செய்யப்படவில்லை. அவர் செய்யும் ஒவ்வொரு குற்றத்திலிருந்தும், திட்டம் போட்டு தப்பிக்கிறார்.