புதன், 27 பிப்ரவரி, 2013

முழு உடலும் மறைக்கும் வகையில் அணியூம் பர்தா மத பயங்கரவாதமாகும் -மொஹமட் முஸ்ஸாமில்-

முழு உடலும் மறைக்கும் வகையில் அணியூம் பர்தா மத பயங்கரவாதமாகும் -மொஹமட் முஸ்ஸாமில்-
முஸ்லிம் பெண்கள் முழு உடலும் மறைக்கும் வகையில் அணியூம் பர்தா ஆடை மத பயங்கரவாதத்தை வெளிப்படுத்துவதாக கொழும்பு மாநகர சபையின் உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல்சபை உறுப்பினருமான மொஹமட் முஸ்ஸாமில் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளில் கூட இந்த ஆடைகள் பயன்படுத்தப்படுவதில்வை எனவூம் அவர் சுட்டிக் காட்டியூள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவோ, பங்களாதேஷ் பிரதமரே, பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஹீனா ரப்பானியோ இப்படியான ஆடைகளை அணிவதில்லை எனவூம் அவர் கூறியூள்ளார். சில மத அடிப்படைவாதிகளின் தேவைக்காகவே இலங்கையில் உள்ள முஸ்லிம் பெண்கள் இவ்வாறான ஆடைகளை அணிந்து வருவதாகவூம் முஸ்ஸாமில் குற்றம் சுமத்தியூள்ளார்.

சினேகா: நான் நடித்த படத்தைப் பார்த்து நானே அழுதது

ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் கிஷோர், சினேகா, குழந்தை நட்சத்திரம் பிருத்விராஜ் தாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ஹரிதாஸ். திரையிடப்பட்ட இடங்களிலெல்லாம் அரங்குநிறைந்த காட்சிகளாக, தமிழ்த் திரையுலக ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் ஹரிதாஸ் படத்தில் சினேகா நடிப்பும் பேசப்படும் ஒன்றாக இருக்கிறது.ஹரிதாஸ் திரைப்படத்தைப் பார்த்தவர்கள்  அனைவரும், சினேகா அமுதவல்லி டீச்சராகவே வாழ்ந்திருக்கிறார் என்று பாராட்டுகின்றனர். இத்தகைய    பாராட்டுக்குறிய   சினேகா சமீபத்தில் அளித்த பேட்டியில் “ யதார்த்தமான கதைகளில் நடிப்பது சாதாரணமானது அல்ல. முதல்முறையாக நான் மேக்-அப் போடாமல் நடித்திருக்கிறேன். அமுதவல்லி டீச்சர்  கதாபாத்திரமாகவே மாறி நடித்தது மறுக்கமுடியாத உண்மை. இதுவரை மற்றவர்கள் படங்களைப் பார்த்து;அழுதிருக்கிறேன். ஆனால் நான் நடித்த படத்தைப் பார்த்து நானே அழுதது இது தான் முதல் முறை.ஹரிதாஸ் சிறந்த படம். நான் கலங்கிய கண்களுடன் தியேட்டரை விட்டு வெளியேறியது கிஷோர், பிருத்துவி நடிப்பப் பார்த்துதான்” என்று கூறினார். மேலும் பேசிய போது “ நானும் பிரசன்னாவும் தினமும் தலைப்புச் செய்திகளில் வந்துகொண்டிருந்த்தால் தான், பொது நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்ளாமல் பேட்டிகளை தவிர்த்துவந்தோம்” என்று கூறினார்.cinema.nakkheeran.in

தமிழ்நாடு தகவல் ஆணையம் மிகவும் வேதனை தரக்கூடியது.”

Right-To-Information

மூடுமந்திரம் : தமிழ்நாடு தகவல் ஆணையம்


பகலில் கிடைத்த இரண்டாவது சுதந்தரம் என்றும் காங்கிரஸ் அரசாங்கத்தின் சாதனையாகவும்  சொல்லப்படுவது 2005ல் நடைமுறைக்கு வந்த தகவல் உரிமைச் சட்டம் ஆகும்.  இந்தச் சட்டம் இயற்றப்பட்ட நோக்கம் அரசாங்கம், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதன் நிர்வாக அதிகார அமைப்புகள் வெளிப்படைத் தன்மையுடையதாக இருக்க வேண்டும். அதன் வாயிலாக பொதுமக்களின் வேண்டுகைகள், கோரிக்கைகள் ஊழலின்றி, லஞ்சமின்றி நிறைவேற்றப்படுவதை மக்கள் அறியச் செய்ய வேண்டும் என்பதாகும்.
அந்தச் சட்டத்துக்கு இணங்க நடுவண் தகவல் ஆணையமும் மாநிலம் தோறும் மாநில தகவல் ஆணையங்களும் நிறுவப்பட்டன. இதில் துவக்கம் முதலே நடுவண் தகவல் ஆணையம் முன்மாதிரியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

Jeyamohan அசடுகளும் மகாஅசடுகளும்

நான் தமிழகத்தின் உண்மையான சமூகசேவகர்களில் ஒருவராக, அறிஞராகக் கருதும் மனிதர்களில் ஒருவர் ஒத்திசைவு ராமசாமி. விஜய் டிவியின் மாணவர்கள் – களப்பணியாளர்கள் என்ற நிகழ்ச்சியைப்பற்றி அவர் எழுதியிருந்ததை வாசித்தேன்.

அந்நிகழ்ச்சியைத் தரவிறக்கிப் பார்த்தேன். [நானும் இருபது வருடங்களாக வீட்டில் தொலைக்காட்சி இணைப்பு இல்லாதவன்] எனக்கும் அதே எண்ணம்தான் ஏற்பட்டது. களப்பணியாளர்கள் என்று ஒரு கூட்டத்தைக் கொண்டு வந்து அமரச்செய்திருக்கிறார்கள்.
அவர்களில் முக்கால்வாசிப்பேரை எனக்கு நேரடியாகவே தெரியும். அவர்கள் என்ன களப்பணி செய்கிறார்கள் என்று கேட்டால் நான் சங்கடப்படுவேன்.பெரும்பாலானவர்கள் திராவிடக்கட்சிகள் அல்லது இடதுசாரிக்கட்சிகளின் ஏதேனும் அணிகளில் ஒட்டிக்கொண்டு எதையாவது செய்துகொண்டிருப்பவர்கள். அல்லது தன்னார்வக்குழு வைத்துக் காசு பார்ப்பவர்கள். அல்லது ஆங்கிலச்செய்தி இதழ்க் கட்டுரைகளை ஒட்டித்தமிழில் அபத்தமாக எதையாவது எழுதுபவர்கள். ஒருவர் கூட , ஆம் ஒருவர் கூட, எதையாவது வாசிப்பவர்கள் அல்ல

கள் இறக்க அனுமதி கோரி : சென்னையில் யாகம்


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper


ஈரோடு: தமிழக அரசு கள் இறக்க விதித்துள்ள தடையை நீக்க வலியுறுத்தி தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் நாளை மறுநாள்(28ம் தேதி) சென்னையில் அஸ்வமேத யாகம் நடத்த அனுமதி வழங்க கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அஸ்வமேத யாக குதிரை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து கிளம்பி புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமை செயலகம் வரை கொண்டு செல்ல அனுமதி வழங்கவும், அவ்வாறு செல்லும்போது குதிரையை தடுத்து நிறுத்தி வாதிடுவோர்கள் இயக்க கோரிக்கையில் நியாயம் இல்லை என்பதை நிரூபித்தால்கள் இறக்குவதற்கான அனுமதி கோருவதையே கள் இயக்கம் கைவிடும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. சட்டம்  ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதாலும், நகரின் போக்குவரத்தின் முக்கியத்துவம் கருதியும் யாகத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு - மறு ஏலமும் தோல்வியடைகிறது!

டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மறு ஏலமும் மீண்டும் பயனில்லாமல் போகப் போகிறது.2014-ம் ஆண்டு தொலைதொடர்பு லைசென்ஸ்களைப் புதுப்பித்தல் மற்றும் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் விற்கப்படாமல் இருந்த பகுதிகளையும் சேர்த்து மத்திய தொலைதொடர்புதுறை இரண்டாவது ஏலத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.இந்த ஒதுக்கீட்டுக்கான ஏலம் மார்ச் மாத இறுதியில் நடைபெற இருக்கிறது. இதர்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நேற்று கடைசி நாள். ஆனால் இந்த ஏலத்தில் கலந்து கொள்ள சிஸ்டெமா என்ற நிறுவனம் மட்டுமே விண்ணப்பித்துள்ளது. வேறு எந்த ஒரு நிறுவனமும் ஏலத்தில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை.இதனால் ஸ்பெக்ட்ரம் ஏலம் மீண்டும் பயனில்லாமல் போகப் போகிறது.

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

கடல் திருட்டு VCD கூடபெரும் தோல்வி

கடல் திரைப்படம் கிருத்துவ மதத்தை மோசமாக காட்டியது அதைப்பற்றி உங்கள் கருத்து?
-கே. மணிகண்டன், திருநெல்வேலி.
  படத்தை அதிக விலை கொடுத்து வாங்கிய வினியோகிஸ்தர்கள் மட்டுமல்ல, பொண்டாட்டி தாலிய அடகு வைத்து, போலிசுக்கு பயந்து, தன் வாழ்க்கையையே பணயம் வைத்து திருட்டு விசிடியில் கடல் படத்தை கொண்டுவந்தவங்க கூட நடுத்தெருவுல நிக்கிறாங்களாம்; அதுதான் வருத்தமா இருக்கு.
கடல் கிறிஸ்த்துவ மதத்தை உயர்வாகத்தான் காட்டியது. குறிப்பாக கிறிஸ்த்துவ பாதிரியார்களை தியாகிகளாகவும் கிறிஸ்த்துவ நிறுவனங்கள்; ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்பவையாகவும், ஒழுக்கக் கேடான நபர் பாதிரியாராக ஆக முடியாது, பாதிரியாக உள்ளவர் மீது பாலியல் குற்றச்சாட்டு வந்தாலும் அவர்களை உடனே அந்தப் பதவியிலிருந்து நீக்கிவிடுவார்கள் என்ற புனித பிம்பங்களோடுதான் ‘கடல்’ கிறிஸ்த்துவ நிறுவனங்களை கவுரப்படுத்தியிருந்தது.

கீதிகா ஷர்மா – அனுராதா: மகள் வழியில் தாய் தற்கொலை!

அனுராதா ஷர்மாவினவு
ஆள் பலம், பணம் பலம் இருபவர்களை எதிர்ப்பதே இமாலய காரியமாக இருக்கும் இவ்வுலகில், அரசியல் பலத்தையும் கொண்ட ஒரு ஆளை, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இறங்கி எதிர்க்க முடியுமா?
ரியானாவை சேர்ந்த விமானப் பணிப்பெண் கீதிகா ஷர்மாவின் தற்கொலைச் சம்பவத்தை இவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்திருக்க முடியாது. அவர் இறந்து 6 மாத காலத்திற்குள் 51 வயதான அவருடைய தாயார் அனுராதாவும், கீதிகா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட அதே அறையில், அதே முறையில் சென்ற பிப்ரவரி 15 ஆம் தேதி தன் உயிரையும் போக்கிக்கொண்டுள்ளார். அவரின் மறைவு கீதிகாவின் தந்தை தினேஷையும் தம்பி அங்கித்தையும் கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
கீதிகா மற்றும் அவருடைய தாயார் இறப்பதற்கு முன் எழுதி வைத்துள்ள வாக்குமூலங்களின்படி, அவர்கள் சாவிற்கு ஹரியானா மாநில முன்னாள் அமைச்சராக இருந்த கோபால் கோயல் கண்டாவும் அவரது உதவியாளர் அருணா சத்தா என்பவரும் கொடுத்த தொடர்ச்சியான தொல்லைகளும் அதனால் ஏற்ப்பட்ட மன உளைச்சலுமே காரணம் என்று பதிவாகியுள்ளது.
ஆள் பலம், பணம் பலம் இருபவர்களை எதிர்ப்பதே இமாலய காரியமாக இருக்கும் இவ்வுலகில், அரசியல் பலத்தையும் கொண்ட ஒரு ஆளை, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இறங்கி எதிர்க்க முடியுமா?
‘பெற்ற மகளை தற்கொலைக்கு தள்ளிய கண்டாவையும் அருணாவையும் தண்டித்தே தீரவேண்டும்’ என்று இறுதிவரை போராடியிருக்கிறார் அனுராதா. மகளை இழந்த மனவேதனை ஒரு பக்கம் இருக்க, கோர்ட், கேஸ் என்ற அலைச்சல்கள் ஒரு பக்கம், மகளைப் பற்றிய கிசுகிசுப்புகள், அவதூறுகள் இன்னொரு பக்கம் என்று எல்லாம் சேர்ந்து அந்த குடும்பத்தின் நிலையை முற்றிலுமாக திருப்பிப் போட்டுள்ளன.

பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்டு ரயிலில் வந்த பெண்ணின் பிணம்

டெல்லி ரயில் நிலையத்திற்கு வந்த ரயில் ஒன்றில் பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்ட ஒரு பெண்ணின் பிணம் இருந்தது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லி ரயில் நிலையத்திற்கு ஞாயிறு இரவு அரியானா மாநிலம் பானிபட்டிலிருந்து வந்த ரயிலின் இருக்கைக்கு அடியில் பிளாஸ்டிக் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 35 வயதுடைய ஒரு பெண்ணின் பிணம் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது .>அந்த பெண்ணின் கைகள், கால்கள், கழுத்துடன் இணைத்து பிளாஸ்டிக் க‌யிரா‌ல் சுற்றப்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி லோக்நாயக் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர். கொல்லப்பட்ட அந்த பெண் யார், கொலை ரயிலில் நடந்ததா போன்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.மருத்துவ மாணவி கற்பழிப்பு, போலீஸ் உதவி மையத்திற்கு எதிரே பீன் சுட்டு கொலை போன்ற சம்பவங்களை தொடர்ந்து டெல்லி ரயிலில் ஒரு பெண்ணின் பிணம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது, இவை அனைத்தும் தலைநகரில் பெண்களின் பாதுகாப்பை குறித்து மீண்டும் கேள்வி எழுப்புகின்றன  tamil.webdunia.com

உறைய வைத்த ரத்தத்தில் ஜெயலலிதா சிலை! கிடுகிடு நடுக்கத்தில் நாஞ்சில் சம்பத்!!

“அமலாபால் போட்டோவை குதிரை என்னா பண்ணிச்சு?”

Viruvirupu


முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை விதம்விதமாக கொண்டாடுவதில் அ.தி.மு.க.வினர் போட்டி போட்டுக்கொண்டு செயலாற்றி வருகையில், தமது ரத்தத்தை எடுத்து உறைய வைத்து, உறைந்த ரத்தத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் சிலையினை செய்துள்ளார், கராத்தே வீரர் ஹுசைனி.
முதல்வர் ஜெயலலிதாவின் 65-வது பிறந்த நாளை அ.தி.மு.க.வினர் சிறப்பாக கொண்டாடினர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் 65 கிலோ கேக் வெட்டி ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
புரட்சித் தலைவிக்காக சாதனைகள் எதையும் படைக்க திராணியற்றவர்கள், கேக் சாப்பிடுவதுடன் முடங்கிக் கொண்டனர்.
ஆனால், சாதனையாளர்கள் பொங்கி வழியும் கட்சியல்லவா, அ.தி.மு.க.? எனவே, புரட்சித் தலைவியின் பிறந்தநாளை முன்னிட்டு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாதனைகள் புரிந்து வருகின்றனர் அ.தி.மு.க.வினர்.
கோட்டையில் காலில் செருப்பு அணியாமல் நடப்பது, அம்மா முன் 45 பாகை கோணத்தில் நடப்பது, இடது கையால் வாயை பொத்திக்கொண்டு, வலது கையால் சல்யூட் அடித்தல் போன்ற ட்ரில்களில் அமைச்சர்கள் ஈடுபட…
மற்றையவர்கள் தத்தமது திறமைகளுக்கு ஏற்ப, தீச்சட்டி ஏந்துதல், கையில் சூடம் ஏற்றி மூன்று தடவை அம்மா படத்தை சுற்றி வருதல், அமலா பால் படத்தை கொள்ளுக்கு பதிலாக குதிரைக்கு போடுதல் என்று என்னென்னவே எல்லாம் செய்கிறார்கள்.
இந்நிலையில் கராத்தே வீரர் ஹுசைனி, முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு 11 லிட்டர் ரத்தத்தை உறைய வைத்து அதில் ஜெயலலிதாவின் சிலையை உருவாக்கியுள்ளார்.
இது குறித்து ஹுசைனி செய்தியாளர்களிடம் கூறுகையில், “முதல்வர் ஜெயலலிதாவின் சிலையினை உருவாக்குவதற்காக 8 ஆண்டுகள் எனது உடலில் இருந்து 24 பாட்டில் ரத்தம் எடுத்து அதைப் பாதுகாத்து வந்தேன். அத்துடன் வில்வித்தை வீரர்கள், வீராங்கனைகள் 32 பேரும் ரத்தம் கொடுத்து உதவியுள்ளனர்.
ஆண்டுக்கு 100 மில்லி லிட்டர் வீதம், முதல்வரின் 65-வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் எனது 6½ லிட்டர் ரத்தத்தையும், வில்வித்தை மாணவ, மாணவியரின் 4½ லிட்டர் ரத்தத்தையும் சேர்த்து மொத்தம் 11 லிட்டர் ரத்தத்தை உறைய வைத்து இந்த சிலையை உருவாக்கியுள்ளேன். உறைய வைத்த ரத்தத்தில் உருவச் சிலையை படைத்திருப்பது உலகில் இதுவே முதல் முறையாகும்” என்றார்.
கேட்கும்போதே ரத்தம் உறைவது போல இல்லையா?
உங்களுக்கு உறைகிறதோ, இல்லையோ… பகுத்தறிவுவாதியாக இருந்துவிட்டு தற்போது புதிதாக அ.தி.மு.க.வுக்கு வந்துள்ள நாஞ்சில் சம்பத், திகிலுடன் இருப்பார்.
“சம்பத் அண்ணே…  நாக்கை வெட்டி கோயில் உண்டியலில் போடுங்க” என்று யாராவது சொன்னால் என்ன செய்வது?

தமிழக நெடுஞ்சாலைகளில் 500 மதுபானக் கடைகள் மூடப்படும்

சென்னை: "தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கி வரும், மதுபானக் கடைகளை, அடுத்த மாதத்துக்குள் அகற்ற வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட் உத்தரவின்படி, 500, மதுபானக் கடைகள் மூடப்படும். தமிழகத்தில், 6,654 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் மது அருந்தி விட்டு, வாகனம் ஓட்டுவோரால் விபத்துகள் அதிகரித்து வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் வாகனங்களை இயக்குவோரை, குஷிப்படுத்தும் வகையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த சாலைகளில், நீண்ட தூர பயணம் செய்யும் பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், "தாக சாந்தி' செய்து விட்டு, வாகனத்தை இயக்குகின்றனர். இதனால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.

helicopter இடைத்தரகர்கள் முன்னாள் தலைமை தளபதியை 6 அல்லது 7 முறை சந்தித்துப் பேசியுள்ளனர்

எஸ்.பி.தியாகிஇந்தியாவின் பிரதமரும், ஜனாதிபதியும், மற்ற மிக முக்கியமான நபர்களும் வசதியாக பயணம் செய்தவற்காக தலா ரூ 300 கோடி விலையில் 12 ஹெலிகாப்டர்களை மொத்தம் ரூ 3,600 கோடி செலவில் வாங்குவதற்கு ரூ 360 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு தொடர்பான சில நபர்களையும் தனியார் நிறுவனங்களையும் பற்றிய விபரங்களை பார்க்கலாம்.
இந்தியா வாங்கும் இந்த ஹெலிகாப்டர் இத்தாலிய-ஆங்கில கூட்டு நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் பின்மெக்கானிக்கா என்ற இத்தாலிய நிறுவனத்திற்கு சொந்தமானது. பின் மெக்கானிக்காவின் முதன்மை செயல்பாட்டு அதிகாரி (CEO) கியூசெப் ஒர்சி லஞ்சம் கொடுத்த குற்றத்துக்காக இத்தாலிய புலனாய்வு துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இத்தாலியில் மாஃபியா, பெருநிறுவனங்கள், அரசு அமைப்புகள் இவர்களுக்கிடையேயான தொடர்புகளை விசாரணை செய்த நேப்பிள்ஸ் நகரின் நீதித் துறை அதிகாரிகள் பின்மெக்கானிக்கா நிறுவனத்தின் ‘நிறுவன தொடர்புகள்’ துறையின் தலைமை மேலாளர் லொரன்சோ பொர்கோகினி என்பவரின் வாக்குமூலத்தை பதிவு செய்தார்கள்.

சென்னை பெங்களூரு புதிய இரட்டை தட்டு ரயில்

double decker train would run between Bangalore and Chennai South India’s first double-decker AC train ––between Bangalore and Chennai––is likely to be commissioned in about a month.

இளம்பெண் சுட்டு கொலை வேடிக்கை பார்த்தது போலீஸ்

புதுடெல்லி : டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவி இறந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்கும் முன்பே மற்றொரு கொடூரம் அரங்கேறியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் இளம் பெண் ஒருவரை சுட்டுக் கொன்றனர். டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பஸ்சில் இருந்து வீசப்பட்ட மருத்துவ மாணவி இறந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக டெல்லி மாறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியதோடு, நீதிமன்றமும் கவலை தெரிவித்தது.

இத்தாலி ஹெலிகாப்டர் ஊழல் former Air chief Shashi P Tyagi..CBI names

சோனியா, மன்மோகன் சிங் உட்பட வி.வி.ஐ.பி.களுக்கு ஹெலிகாப்டர் வாங்கியதில் நடைபெற்ற ஊழல் விவகாரம் தொடர்பாக, இத்தாலி சென்ற அதிகாரிகள் குழுவுக்கு, சில ஆவணங்கள் கிடைத்துள்ளன. இந்த ஆவணங்களில் விசாரணையைத் தொடங்க போதுமான முகாந்திரங்கள் உள்ளன என்று கூறப்படுகிறது.
ஹெலிகாப்டர் பேர முறைகேடு புகார் தொடர்பாக இத்தாலி சென்ற இந்தக் குழுவில், சி.பி.ஐ., பாதுகாப்பு அமைச்சு, மற்றும் மத்திய வெளியுறவு அமைச்சு அதிகாரிகள் உள்ளனர். விமானப்படை கொள்முதல் மேலாளர் அருண்குமார் பால் இந்தக் குழுவுடன் இத்தாலி சென்றிருந்தார்.
இவ்வழக்கு தொடர்பான சில ஆவணங்களை இத்தாலிய அதிகாரிகளிடம் இருந்து அதிகாரிகள் பெற்றுள்ளனர். அந்த ஆவணங்கள் சி.பி.ஐ.-யிடம் தற்போது உள்ளன. இன்னும் இரு தினங்களில் முதல் கட்ட விசாரணை தொடங்கவுள்ளது.

வரலாற்றுக்கு முந்தைய சிறிய கண்டம் இந்தியப் பெருங்கடலில் கண்டுபிடிப்பு

For ages now, Mauritia has been hiding. The small, precambrian continent once resided between Madagascar and India, before splitting off and disappearing beneath the ocean waves in a multi-million-year breakup spurred by tectonic rifts and a yawning sea-floor. But now, volcanic activity has driven remnants of the long-lost continent right through to the Earth's surface. After millions of years, and some incredible geologic sleuthing, it seems Mauritia has been foun
இந்தியாவில் இருந்து Madagascar நாடு பிரிவதற்கு முன்பு, சுமார் 61 மில் லியனிலிருந்து 83 மில் லியன் ஆண்டுகளுக்கு முந்தைய மொரிசியா என்று பெயரிடப்பட் டுள்ள ஒரு சிறிய கண் டத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது இந்தியப் பெருங் கடலில் மொரிசியஸ் நாட்டுக்கு அருகில் கட லுக்கு அடியில் உள்ள தாக கூறியுள்ளனர்.
மொரிசியஸ் கடற்கரை மணலில், 660 மில்லிய னிலிருந்து, கிட்டத்தட்ட 200 கோடி ஆண்டுகள் வயதான சிர்கோன்ஸ் எனப்படும் மினரல், இருப்பதை ஆராய்ச்சி யாளர்கள் பகுப்பாய்ந்து உள்ளனர். இந்த சிறிய தாதுத் துகள்கள் குறிப் பிடத்தக்க ஒரு கண்டு பிடிப்பு என்று சொல்லப் படுகிறது. இந்த சிர்கோன் துகள் கள், மொரிசியஸ் தீவின் அடியில் உள்ள, இந்த சிறிய மொரிசியா கண் டத்தின் பிளவு பற்றி குறிப்பிடுகிறது.
பின்னர் இந்தியப் பெருங்கடல் சுற்றி வளைத்து அப்பகுதி நிலங்களை மறைத்து விட்டன என்றும் கூறி யுள்ளனர். இங்கிருந்து 200 மில்லியன் ஆண்டு களுக்கு முன்பு பிரிந்த பேங்கீ என்ற ஒரு பாறை அடுக்கு, தெற்கில் கோண்டு வானாவாகவும் வடக் கில் லாரேசியா எனவும் பிரிந்துள்ளது என்று சொல்லப்படுகிறது.
இந்த கோண்டுவானா 80 -130 மில்லியன் ஆண்டு கள் இடைப்பட்ட காலங் களில், பிரிந்து மதகாஸ் கர், இந்தியா, ஆஸ்திரே லியா மற்றும் அண்டார் டிகா என மாறி இருக் கலாம் என்று சொல்லப் படுகிறது.viduthalai.in

Facebook 'கில் குரியனின் குற்றத்தை எதிர்த்தவர்கள் மீது வழக்கு: போலீஸ்

திருவனந்தபுரம்: ராஜ்யசபா துணை தலைவர் குரியனுக்கு, வக்காலத்து வாங்கிய கேரள மாநில மகளிர் காங்., தலைவர் பிந்து கிருஷ்ணாவை, சமூக வலை தளத்தில் விமர்சித்த, 140 பேர் மீது, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ், கேரள போலீசார், வழக்கு பதிவு செய்துள்ளனர். கேரள மாநிலம், சூரியநெல்லி கிராமத்தைச் சேர்ந்த, ஒன்பதாம் வகுப்பு மாணவி, 1996ல், ஒரு கும்பலால் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில், தற்போதைய ராஜ்யசபா துணை தலைவரும், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவருமான, குரியன் சிக்கினார். ஆனாலும், சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணையில், இவர் விடுவிக்கப்பட்டார். குரியனை குற்றச்சாட்டிலிருந்து விடுவித்ததை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக, பாதிக்கப்பட்ட பெண் கூறியதை அடுத்து, இந்த விவகாரம், மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. "குரியன், தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன. ஒன்பதாம் வகுப்பே படிக்கக்கூடிய ஒரு பள்ளி மாணவியின் பெண்மைக்கு இழுக்கு ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவரை ஆதரிக்க அவதரிப்பதே பெண்மைக்குப் பேரிழுக்கு. சமூக வலைத்தளங்களால் அரசியல்வாதிகள் மத்தியில் பெரும் புயல் சின்னமொன்று நிலைகொண்டிருப்பது மட்டும் உண்மை. நாளடைவில் இதுமாதிரியான வலைத்தளங்களை முற்றிலும் தடைசெய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. விமர்சனங்களுக்கு இடமளிக்காத நடத்தையைப் பற்றி ஏன் ஒருவன் கருத்தெழுதனும்? கார்டூன் வரையனும்? இப்பவெல்லாம் கிறுக்குறவன் ஏதோ ஒரு மூலைல கிறுக்கிட்டு போறான்னு அப்டியே உட்டுறமுடியலைல? காரணம் சிம்பிள், எப்போதும்போலத்தான் "கத்தி முனையை விட பேனா முனை கூர்மையானது" ஆனால் அதவிட கூர்மையானது கணினியின் கீபேட் முனை

திங்கள், 25 பிப்ரவரி, 2013

தி.மு.க. மத்திய அரசுக்கு நெருக்கடி தர தயாராகிவிட்டது .

புதுடில்லி: "2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக, விசாரணை நடத்தும், பார்லிமென்ட் கூட்டுக் குழு முன் ஆஜராகி, பல உண்மைகளை வெளிச்சமிட்டு காட்டுவேன்' என, முன்னாள் அமைச்சர் ராஜா, குட்டையை குழப்பியுள்ளார். ராஜாவின் இந்த மிரட்டல் கோரிக்கை குறித்து, ஐ.மு.கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பேசுவோம் என, தி.மு.க.,வும், மத்திய அரசுக்கு நெருக்கடி தர தயாராகிவிட்டது ."2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இதன் அறிக்கையை, நடப்பு பார்லிமென்ட் தொடருக்குள் தாக்கல் செய்யும் வகையில், இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் இக்குழு, முன் ஆஜராகி விளக்கம் அளித்த, அட்டர்ஜி ஜெனரல் வாகன்வதி, மத்திய தொலைத்தொடர்பு துறையின் முன்னாள் அமைச்சர், ராஜாவின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்து இருந்தார்.இதையடுத்து, தன் தரப்பு கருத்தையும், பார்லிமென்ட் கூட்டுக் குழு முன் தெரிவிப்பதற்கு, அனுமதிக்க கோரி, லோக்சபா சபாநாயகர் மீரா குமாருக்கும், குழுவின் தலைவர் பி.சி.சாக்கோவுக்கும், ராஜா கடிதம் எழுதியுள்ளார். இதில், "2ஜி விவகாரத்தில் உள்ள பல முரண்பாடுகளையும், இதில் பல தகவல்களையும் விளக்க முடியும்' என, ஏற்கனவே கூறியிருந்தார். பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் தலைவரான, சாக்கோவுக்கு, ராஜாவை மீண்டும் அழைக்க விரும்பவில்லை.

ஜெயலலிதா நினைத்தால் சீனாவின் வல்லரசு கனவு டமால் வைகை செல்வன் DAMN SERIOUS!

Viruvirupu “இந்தியா வல்லரசு நாடாக மலர வேண்டும் என்றால், இந்தியாவின் பிரதமராக ஜெயலலிதா வரவேண்டும்” என்று முகத்தை சீரியசாக வைத்துக்கொண்டு பேசியிருக்கிறார், தமிழக அரசு தலைமை கொறடா வைகைச்செல்வன். “ஒட்டு மொத்த இந்திய மக்களும், ஜெயலலிதா பிரதமராக வருவதை தான் ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றார்கள்” என்றும் ஒரே போடாக போட்டிருக்கிறார் இவர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா 65-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அரியலூர் ஒற்றுமை திடலில் இளைஞர் இளம் பெண்கள் பாசறை சார்பில் கபடி போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை செயலாளரும், தமிழக அரசு தலைமை கொறடாவுமான வைகைச்செல்வன் இதில் கலந்துகொண்டு பேசியபோதே, இந்தியாவுக்கு இருக்கும் அரிய பெரிய வாய்ப்பு பற்றி தெரிவித்தார்.
வைகைச்செல்வன் பேசும்போது, “விளையாட்டு மூலம் பல சாதனை புரிய முடியும். விளையாட்டு துறை மூலம் இளைஞர்களை கவர்ந்து ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார் சரத்பவார். தமிழகத்தில் விளையாட்டு துறைக்கு தான் அதிக அளவு நிதி ஓதுக்கிடு செய்து சாதனை புரிந்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

பாலியல் பலாத்கார சிறுவர்களைசிறாராக பார்க்க கமிட்டி எதிர்ப்பு

மும்பை: "பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளி, 15 வயதுடையவராக இருந்தாலும், அவரை சிறாராக கருதக்கூடாது' என, மகாராஷ்டிரா மாநில அரசு நியமித்த, விசாரணை கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய, நீதிபதி, சந்திரசேகர் தர்மாதிகாரி கமிட்டியை, மகாராஷ்டிரா அரசு நியமித்தது. விசாரணை நடத்திய கமிட்டி, முதல் இடைக்கால அறிக்கையை, 2010ம் ஆண்டு டிசம்பரிலும், இரண்டாவது அறிக்கையை, 2011, செப்டம்பரிலும் தாக்கல் செய்தது. மூன்றாவது அறிக்கையை, இம்மாதம், 16ம் தேதி தாக்கல் செய்தது.இந்த அறிக்கையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, எடுக்க வேண்டிய பல்வேறு நடவடிக்கைகளை சுட்டி காட்டியிருந்தது.இந்நிலையில், மும்பை ஐகோõர்ட்டில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து, தொடரப்பட்ட பொது நல மனு மீதான விசாரணையின் போது, மேற்கண்ட கமிட்டியின் பரிந்துரை அறிக்கையின் பிரதி தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி சந்திரசேகர் கமிட்டி தன் பரிந்துரையில் கூறியிருப்பதாவது:

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

மாற்று கருத்து போராளி தோழர் சண்முகலிங்கம்

தோழர் சண்முகலிங்கம் அவர்கள் மிகவும் நேர்மையான ஒரு மனிதர். தனது கொள்கைகளை ஒரு போதும் விட்டு கொடுக்காதவர் . எந்த வித சுய லாபமும் இல்லாத ஏராளமான பொது காரியங்களில் இவர் சிரத்தையோடு ஈடுபடுவதை எப்போதும் காணலாம் . . இவர் நடந்து வந்த பாதை சரித்திர மகத்துவம் வாய்ந்தது . இளமையில் இடது சாரி கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு  மிக சிறு பிராயத்திலேயே சம சமாஜ கட்சியில் முழு நேர தொண்டனாக தன்னை இணைத்து கொண்டவர் தனது பிறந்த ஊரான கரவெட்டியை விட்டு வெளியேறி மலையகத்தில் இடது சாரி கொள்கைகளுக்காக தனது வாழ்வின் பெரும் பகுதியை செலவிட்டார் .இனப்பிரச்சனை பூதாகரமான வடிவை எட்டியபோது டாக்டர் ராஜசுந்தரம் போன்றவர்களுடன் இணைந்து காந்தியத்தை ஸ்தாபித்தார் . இவரது முழு வரலாறும் ஒழுங்கான முறையில் எழுதப்பட வேண்டிய ஒன்றாகும் ஏராளமான போராட்டங்களை சந்தித்த இவர்  இறுதி வரை உண்மையிலேயே ஒரு புரட்சி வாதியாகவே வாழ்ந்தார் . மாற்று கருத்தாளர்களை ஈவு இரக்கம் இன்றி வேட்டையாடிய  பாசிச கும்பல்களிடம் இருந்து தனது சுயத்தை விட்டு கொடுக்காது தான் நினைப்பதை நெற்றி அடியாக நேருக்கு நேர் சொல்லி விடுவது இவரின் தனி பண்பாகும் . விழுந்த பாட்டுக்கு குறி சுடும் சமுகத்தில் சுயமாக சிந்தித்து இறுதி வரை சுயம் இழக்காமல் வாழ்ந்த தோழர் shan எமக்கு ஒரு ஒளி விளக்காக திகழ்கிறார்

சில ஆண்டுகளுக்கு முன்பாக எனது பாலிய நண்பர் ஜெயகுமார் (பாரதி பாலன்) சமரச பூமி என்ற நாவலை கனடாவில் வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் .அவர் அச்சடித்த புத்தகங்களுடன் டென்மார்க்கில் இருந்து கனடா வந்து தனது உறவினர்கள் வீட்டில் தங்கி இருந்தார் . அப்பொழுது அவருக்கு புத்தக வெளியீடு தொடர்பாக உதவி செய்வதாக வாக்குறுதி அளித்தவர்கள் பின்பு வழக்கமான அடாவடி  கலாசாரத்தின் பின் விளைவுகளை எண்ணி ஜெயகுமாரின் புத்தக வெளியீட்டுக்கு உதவி செய்ய வில்லை .

பெண்ணுக்கு பெண்மீது LOVE வர காரணம் என்ன?

இயல்பாக ஒரு ஆண் மீது பெண்ணுக்கோ, பெண் மீது ஆணுக்கோ ஈர்ப்பு ஏற்பட்டு இருவரும் ஒருவருக்கொருவர் காதல் வயப்பட்டு, காம ஆட்டம்  ஆடுவது என்பது இயல்பானது. ஆனால் மாறாக இரு பெண்களுக்கு ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு ஏற்பட்டு காதல் வயப்பட்டு செக்ஸ் உறவில் ஈடுபடும்  லெஸ்பியன் கலாச்சாரம் இன்றைக்கு பெருகிவிட்டது. இன்றைய காலகட்டங்களில் 2 ஆண்கள் ஒருவருக்கொருவர் இணைவதும், பெண்ணும்  பெண்ணும் இணையும் கலாச்சாரம் இன்றைக்கு அதிகரித்து வருகிறது. பெண்கள் பிற பெண்களிடம் இருந்து 10 லிருந்து 15 சதவிகிதம் வரை உணர்ச்சி  பெற்றிருக்கின்றனராம்.வெளிநாட்டில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பிற பெண்களின் மீது ஈடுபாடு  கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் பங்கேற்ற பெண்களில் 45 சதவிகித பெண்கள் பிற பெண்களை முத்தமிட்டுள்ளனராம். 50 சதவிகித  பெண்கள் பிற பெண்களுடன் உறவில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். போய்சே பல்கலைக்கழகத்தின் உளவியல்துறை பேராசியர் எலிசபெத் மோர்கன்  மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.பெண்கள் 'லெஸ்பியன்' உறவை நாடிச் செல்வதற்கான காரணம்

Maldives இந்திய ஆசிரியை பலாத்காரம் மாலத்தீவில் 3 பேர் கைது

 A 24-year-old Indian computer teacher was brutally raped in Maldives and is in “very serious condition”, prompting India to take up the matter with Maldivian government. The young Indian teacher working on the island of Dhangethi in Alif Dhaal Atoll has been hospitalised after a group of people broke into her home on Sunday night and allegedly raped her, Minivan News reported
மாலத்தீவில் இந்திய ஆசிரியை பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக வங்கதேசத்தை சேர்ந்தவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மாலத்தீவின் அலிப்தால் அடோல் தங்கேதி என்ற இடத்தில், இந்திய கம்ப்யூட்டர் ஆசிரியை ஒருவர் கடந்த 11ம் தேதி வீட்டில் மர்ம கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்ற போது, அங்கு ரத்த வெள்ளத்தில் மயக்க நிலையில் ஆசிரியை இருந்தார். இதுதொடர்பாக வங்கதேசத்தை சேர்ந்த ஒருவர், மாலத்தீவை சேர்ந்த 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இதுகுறித்து குற்றப்பிரிவு தலைவர் முகமது தாவூத் கூறியதாவது: இந்திய ஆசிரியையை ஒரு கும்பல் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளது.

ஹைதராபாத் குண்டு வெடிப்பு: ஏன் மதானியை விசாரியுங்கள் என்கிறது மத்திய உளவுத்துறை?


மதானி: இவருக்கு இதில் என்ன கனெக்ஷன்?
மதானி: இவருக்கு இதில் என்ன கனெக்ஷன்? viruviruppu,com
ஹைதராபாத் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பெங்களூரூ சிறையில் இருக்கும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானியிடம் விசாரணை நடத்த ஆந்திர போலீஸ் முடிவு செய்துள்ளது. மத்திய உளவுத்துறை உத்தரவின்பேரில் இந்த விசாரணை நடத்தப்பட உள்ளது.
ஹைதராபாத் குண்டு வெடிப்பின் பின்னணியில் இந்திய முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு இருப்பதாகவே போலீஸ் உறுதியாக நம்புகிறது. வெடிகுண்டு வைக்கப்பட்ட விதம், அது தயாரிக்கப்பட்ட முறை ஆகியவை இந்திய முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தொடர்பை உறுதி செய்துள்ளன.
டில்லி போலீசால் கைது செய்யப்பட்ட இந்திய முஜாகிதீன் தீவிரவாதிகள் மக்பூல், இம்ரான்கான் ஆகியோர், போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ஐதராபாத்தில் எங்கெங்கு குண்டு வைக்கலாம் என பைக்கில் சென்று ஒத்திகை பார்த்ததாக ஏற்கனவே கூறியுள்ளனர். எனவே, ஹைதராபாத் குண்டுவெடிப்பு குறித்து அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கும் இந்திய முஜாகிதீன் அமைப்பின் தலைவர் ரியாஸ் பட்கலுக்கும் ஹைதராபாத் குண்டுவெடிப்பில் முக்கிய பங்கு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

வித்யா மரணமடைந்தார்! ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட சென்னை

சென்னை:சென்னையில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட வித்யா இன்று அதிகாலையில் மரணமடைந்தார்.திருமணம் செய்ய மறுத்த வித்யா மீது கடந்த ஜனவரி 30ல் விஜயபாஸ்கர் என்பவர் ஆசிட் வீசினார்.இதனால் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலையி்ல் சிகிச்சை பலனளிக்காததால் வித்யா மரணமடைந்தார்.கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அமில வீச்சினால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாணவி விநோதினி கடந்த 12-ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் அதே போன்று அமிலவீச்சினால் வித்யா உயிரிழந்‌துள்ளார். இதன் மூலம் அமில வீ்ச்சில் பலியானவர்களின் எண்ணி்‌க்கை 2 ஆக அதி்கரித்துள்ளது. விஜயபாஸ்கர் தற்போது சிறையில் உள்ளார்.
வினோதினி:காதலிக்க மறுத்ததற்காக முகத்தில் ஆசிட் வீசப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வரும் வினோதினி என்ற இளம் பெண், மருத்துவ செலவிற்கு கூட பணமின்றி கஷ்டப்பட்டார்.