மூடுமந்திரம் : தமிழ்நாடு தகவல் ஆணையம்
பகலில்
கிடைத்த இரண்டாவது சுதந்தரம் என்றும் காங்கிரஸ் அரசாங்கத்தின்
சாதனையாகவும் சொல்லப்படுவது 2005ல் நடைமுறைக்கு வந்த தகவல் உரிமைச் சட்டம்
ஆகும். இந்தச் சட்டம் இயற்றப்பட்ட நோக்கம் அரசாங்கம், மக்கள்
பிரதிநிதிகள் மற்றும் அதன் நிர்வாக அதிகார அமைப்புகள் வெளிப்படைத்
தன்மையுடையதாக இருக்க வேண்டும். அதன் வாயிலாக பொதுமக்களின் வேண்டுகைகள்,
கோரிக்கைகள் ஊழலின்றி, லஞ்சமின்றி நிறைவேற்றப்படுவதை மக்கள் அறியச் செய்ய
வேண்டும் என்பதாகும்.
அந்தச் சட்டத்துக்கு இணங்க நடுவண் தகவல் ஆணையமும் மாநிலம் தோறும் மாநில தகவல் ஆணையங்களும் நிறுவப்பட்டன. இதில் துவக்கம் முதலே நடுவண் தகவல் ஆணையம் முன்மாதிரியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்தச் சட்டத்தின்படி அரசுப் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அலுவலர்கள் மற்றும் சமூகப் பணிகளில் முன்னணியாக அறியப்பட்ட பிரபலங்கள் ஆணையர்களாக நியமிக்கப்பட்டனர். இந்தச் சட்டம் 31 ஷரத்துக்கள் மட்டுமே கொண்ட சிறப்பான சட்டம் என்பதுடன், ஒவ்வொரு ஷரத்தும் சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாக அமைக்கப்பட்டிருப்பதால் இதுவரை பணியாற்றிய பல தகவல் ஆணையர்கள் மிகச் சிறப்பாக இது குறித்த தாவாக்களை தீர்த்து வைத்துள்ளனர்.
குறிப்பாக நடுவண் தகவல் ஆணையம் உயர்நீதிமன்றங்களுக்கு இணையாக இரு ஆணையர்கள் அமர்வு, முழு அமர்வு என்றெல்லாம் அமர்ந்து விசாரித்து தீர்வுகள் கண்டிருக்கிறது. பொது அதிகார அமைப்புகளின் தரப்பில் கற்றறிந்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டிருக்கிறார்கள். அத்தகைய சூழலிலும் சட்டத்தின் குறிப்பிட்ட அதிகார வரம்பில் நின்று பல ஆணையர்கள் நல்ல தீர்வுகளை தந்துள்ளனர்.
ஆனால் கடந்த ஆண்டு தகவல் ஆணையம் குறித்த வழக்கு ஒன்றின் தீர்வில் இந்திய உச்ச நீதிமன்றம் (பார்க்க பெட்டியில் குறிப்பிட்டுள்ள தீர்வு) தகவல் ஆணையர்களாக ஓய்வு பெற்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் இடம் பெறும் வகையில் சட்டக்கல்வியில் தேறி அதில் அனுபவம் பெற்றவர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும், இரு ஆணையர்கள் அமர்வு எனில் அதில் ஒரு ஆணையர் சட்டம் பயின்றவராக இருக்க வேண்டும் என்றும் தீர்வளித்தது. அந்த தீர்ப்பு நாடு முழுவதும் அந்த சட்டத்தை பயன்படுத்துபவர்கள், ஆணையர்களாக இருந்தவர்கள், இருப்பவர்கள் மத்தியில் கருத்து முரண்களை, விவாதங்களை உருவாக்கியது. அது குறித்த நடுவண் அரசின் மேல்முறையீடு / சீராய்வு மனு உச்ச நீதிமன்றம் முன்பாக நிலுவையிலுள்ளது.
7. It will be just, fair and proper that the first appellate authority (i.e. the senior officers to be nominated in terms of Section 5 of the Act of 2005) preferably should be the 104 persons possessing a degree in law or having adequate knowledge and experience in the field of law….
8. The Information Commissions at the respective levels shall henceforth work in Benches of two members each. One of them being a ‘judicial member’, while the other an ‘expert member’. The judicial member should be a person possessing a degree in law, having a judicially trained mind and experience in performing judicial functions. A law officer or a lawyer may also be eligible provided he is a person who has practiced law at least for a period of twenty years as on the date of the advertisement. Such lawyer should also have experience in social work. We are of the considered view that the competent authority should prefer a person who is or has been a Judge of the High Court for appointment as Information Commissioners. Chief Information Commissioner at the Centre or State level shall only be a person who is or has been a Chief Justice of the High Court or a Judge of the Supreme Court of India.
9. The appointment of the judicial members to any of these posts shall be made ‘in consultation’ with the Chief Justice 105 of India and Chief Justices of the High Courts of the respective States, as the case may be….
நாடு முழுவதிலும் மற்றும் தமிழகத்திலும் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி பலர் தங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டுள்ளனர். மறுபுறம் நாட்டின் வட மாநிலங்களில் கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஊழல்களை, தவறுகளை, ஆக்கிரமிப்பு போன்றவைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவருவதற்கான முயற்சியில் ஈடுபட்ட பல தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்ட நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளது.
இத்தகைய சூழ்நிலையின் பின்னணியில் தமிழக தகவல் ஆணையம் எவ்வாறு செயல்படுகிறது? சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 8 ஆண்டுகள் கடந்துவிட்டன. பொதுமக்களில் பலர் இந்தச் சட்டத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால் அரசு அலவலகங்கள்? ஆய்வு செய்தால் அதிர்ச்சியான விவரங்களே கிடைக்கின்றன.
நடுவண் தகவல் ஆணையத்தைப் பொறுத்தவரை ஆரம்பம் முதலே பல வழக்குகளில் தகவல் தருவதில் உள்ள தாமதத்தை ஆணையம் கண்டித்திருக்கிறது. தகவல் அளிக்கப்பட்டிருந்தாலும் தாமதத்துக்கு அபராதம் விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால் அத்தகைய அபராத விதிப்பு நடவடிக்கைகள் அல்லது பொது அதிகார அமைப்புகளான அரசு அலுவலர்களைக் கண்டிப்பது என்பது தமிழகத்தைப் பொருத்தவரை அதிகமில்லை.
அரசு அலுவலகங்கள் துறை சார்ந்த தகவல்களை தாமாகவே முன்வந்து தமது இணையதளத்தில் வெளியிடவேண்டும் என்றும், அரசாணைகள், உத்திரவுகள், பதிவுகள் போன்றவற்றை ஆவணப்படுத்தக் கூடிய விவரங்களை மின்மயப்படுத்தி அந்தந்த துறையின் இணையதளத்தில் வெளியிட வேண்டுமெனவும் சொல்லப்பட்டுள்ளது. நடுவண் தகவல் ஆணையமும் பல மாநில தகவல் ஆணையங்களும் சட்டத்தின்படி முன்மாதிரியாக செயல்பட்டு வருகிறது.
சில தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்களைத் தொடர்பு கொண்டு தமிழக ஆணையம் தற்போது எவ்வாறு செயல்படுகிறது என கேட்டேன். சென்னை பத்திரிகையாளர் சங்க தலைவரும், த.அ.உ.சட்டத்தை மிக அதிக அளவில் பயன்படுத்தி வருபவருமான திரு வி.அன்பழகனின் (அன்பு) மறுமொழி இது. “எனது தரப்பு இரண்டாவது மேல்முறையீடுகள் ஏறக்குறைய 36 எண்ணம் ஆணையம் முன்பாக விசாரிக்கப்படாமல், விசாரணைக்கு பட்டியலிடப்படாமல் நிலுவையிலுள்ளது.” இன்றும் தலைமை தகவல் ஆணையர் (ஸ்ரீபதி) காவல்துறை சார்ந்த த.அ.உ. சட்ட வழக்குகளைத் தானே விசாரிக்கும் வகையில் பட்டியலிட்டுக் கொண்டு பொது தகவல் அலுவலர்களுக்கு ஆதரவாக பல வழக்குகளை தள்ளுபடி செய்துவிடுகிறார் என்றும் அவர் தெரிவிக்கிறார். மேலும், பல வழக்குகளை விசாரிக்காமலேயே யார் மீது புகார் சொல்லப்பட்டுள்ளதோ அந்தப் பொது தகவல் அலுவலருக்கே புகாரை அனுப்பி தகவல் கொடுக்கப்பட்டிருந்தால் அதனை தபாலில் அனுப்பிய ஆதாரத்தை சமர்ப்பிக்கவும் என்ற வகையில் 3 – 4 வரி உத்திரவுகளாக ஆணையம் பல வழக்குகளை தீர்வு செய்து வருகிறது. இது சட்டம் இயற்றிய நோக்கத்தையே சிதறடிப்பதாக உள்ளது என்கிறார்.
அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்று 76 வயதாகும் இன்றைய நிலையிலும் இந்தச் சட்டத்தை பயன்படுத்தி பலரின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு முயற்சித்து வரும் மற்றொரு ஆர்வலர் பொள்ளாச்சி திரு பாஸ்கரன். அவரிடம் இது பற்றிக் கேட்டபோது,
தமிழகத் தகவல் ஆணையம் ஏறக்குறைய செயல்படாத நிலையில் உள்ளது என்றார். “சட்டம் என்பது அனைத்து மாநிலங்களுக்கும் – நடுவண் அரசுக்கும் பொதுவானது என்ற அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட சட்டப்பிரிவின் கீழ் கொண்டு செல்லும் வழக்கில் முந்தைய மத்திய தகவல் ஆணைய தீர்வுகள், அல்லது தமிழக தகவல் ஆணைய தீர்வுகளை சுட்டியாக (Citation) தெரிவித்து மனுதாரர்கள் தரப்பில் வாதிட்டோம். ஆனால், தற்போது புதிதாக பதவியேற்றுள்ள ஆணையர்களில் இருவர் அது முந்தைய ஆட்சி கால தீர்வு என்றும் தற்போது எங்கள் ஆட்சியின் தீர்வை கேளுங்கள் என்றும் சொல்லிவிட்டார். தங்கள் நியமனத்தையே ஏதோ ஆளுங்கட்சி சார்ந்த மாவட்டச் செயலாளர் நியமனம் போல் கருதி ஓப்பன் கமெண்ட் செய்தது எனது நண்பர்களின் வழக்கில் நிகழ்ந்துள்ளது. இது மிகவும் வேதனை தரக்கூடியது.”
நமக்கு அருகிலுள்ள கேரள- ஆந்திர- கர்நாடக மாநில அரசுகளின் தகவல் ஆணைய இணையளங்களைப் பார்வையிட்டால், அவர்கள் அவ்வப்போது தகவல்களை – ஆணைகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருப்பதும், 4 – 5 ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கைகளை பதிவேற்றம் செய்திருப்பதையும் காண முடிகிறது. இன்னும் ஒரு படி மேலே போய், தகவல் ஆணையர்களின் சொத்து விவரங்களையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள்.
அய்யன் வள்ளுவர் குறள் வழிநின்று ஆட்சி நடைபெறும் நமது மாநிலத்தில்,
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி
என நடுவுநிலைமை தவறாது, வெளிப்படைத்தன்மையுடன் நமது தகவல் ஆணையம் செயல்படவேண்டுமென்பது ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் அவா. சீர்படுமா ஆணையம்? பொறுத்திருந்து பார்ப்போம்.
0
எஸ். சம்பத்.tamilpaper.net

IN THE SUPREME COURT OF INDIA
CIVIL ORIGINAL JURISDICTION
WRIT PETITION (CIVIL) NO. 210 of 2012
Namit Sharma … Petitioner
Versus
Union of India … Respondent
J U D G M E N T
Swatanter Kumar, J.
2. … Thus, we hold and declare that the expression ‘knowledge and
experience’ appearing in these provisions would mean and include a basic
degree in the respective field and the experience gained thereafter.
Further, without any peradventure and veritably, we state that
appointments of legally qualified, judicially trained and experienced
persons would certainly manifest in more effective serving of the ends
of justice as well as ensuring 102 better administration of justice by
the Commission. It would render the adjudicatory process which involves
critical legal questions and nuances of law, more adherent to justice
and shall enhance the public confidence in the working of the
Commission. This is the obvious interpretation of the language of these
provisions and, in fact, is the essence thereof…..CIVIL ORIGINAL JURISDICTION
WRIT PETITION (CIVIL) NO. 210 of 2012
Namit Sharma … Petitioner
Versus
Union of India … Respondent
J U D G M E N T
Swatanter Kumar, J.
7. It will be just, fair and proper that the first appellate authority (i.e. the senior officers to be nominated in terms of Section 5 of the Act of 2005) preferably should be the 104 persons possessing a degree in law or having adequate knowledge and experience in the field of law….
8. The Information Commissions at the respective levels shall henceforth work in Benches of two members each. One of them being a ‘judicial member’, while the other an ‘expert member’. The judicial member should be a person possessing a degree in law, having a judicially trained mind and experience in performing judicial functions. A law officer or a lawyer may also be eligible provided he is a person who has practiced law at least for a period of twenty years as on the date of the advertisement. Such lawyer should also have experience in social work. We are of the considered view that the competent authority should prefer a person who is or has been a Judge of the High Court for appointment as Information Commissioners. Chief Information Commissioner at the Centre or State level shall only be a person who is or has been a Chief Justice of the High Court or a Judge of the Supreme Court of India.
9. The appointment of the judicial members to any of these posts shall be made ‘in consultation’ with the Chief Justice 105 of India and Chief Justices of the High Courts of the respective States, as the case may be….
நாடு முழுவதிலும் மற்றும் தமிழகத்திலும் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி பலர் தங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டுள்ளனர். மறுபுறம் நாட்டின் வட மாநிலங்களில் கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஊழல்களை, தவறுகளை, ஆக்கிரமிப்பு போன்றவைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவருவதற்கான முயற்சியில் ஈடுபட்ட பல தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்ட நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளது.
இத்தகைய சூழ்நிலையின் பின்னணியில் தமிழக தகவல் ஆணையம் எவ்வாறு செயல்படுகிறது? சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 8 ஆண்டுகள் கடந்துவிட்டன. பொதுமக்களில் பலர் இந்தச் சட்டத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால் அரசு அலவலகங்கள்? ஆய்வு செய்தால் அதிர்ச்சியான விவரங்களே கிடைக்கின்றன.
நடுவண் தகவல் ஆணையத்தைப் பொறுத்தவரை ஆரம்பம் முதலே பல வழக்குகளில் தகவல் தருவதில் உள்ள தாமதத்தை ஆணையம் கண்டித்திருக்கிறது. தகவல் அளிக்கப்பட்டிருந்தாலும் தாமதத்துக்கு அபராதம் விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால் அத்தகைய அபராத விதிப்பு நடவடிக்கைகள் அல்லது பொது அதிகார அமைப்புகளான அரசு அலுவலர்களைக் கண்டிப்பது என்பது தமிழகத்தைப் பொருத்தவரை அதிகமில்லை.
அரசு அலுவலகங்கள் துறை சார்ந்த தகவல்களை தாமாகவே முன்வந்து தமது இணையதளத்தில் வெளியிடவேண்டும் என்றும், அரசாணைகள், உத்திரவுகள், பதிவுகள் போன்றவற்றை ஆவணப்படுத்தக் கூடிய விவரங்களை மின்மயப்படுத்தி அந்தந்த துறையின் இணையதளத்தில் வெளியிட வேண்டுமெனவும் சொல்லப்பட்டுள்ளது. நடுவண் தகவல் ஆணையமும் பல மாநில தகவல் ஆணையங்களும் சட்டத்தின்படி முன்மாதிரியாக செயல்பட்டு வருகிறது.
- ஆனால் தமிழக தகவல் ஆணையத்தின் இணையத்தளத்தில் ( http://www.tnsic.gov.in) நுழைந்தால் அரசாணை எண் 136, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை, நாள் 31/08/2012ன் படி நியமனம் செய்யப்பட்ட ஆணையர்களின் பெயர்கள் இன்னும் பதிவேற்றப்படவில்லை.
- புள்ளி விவரங்கள் எனும் இணைப்பைத் தொட்டால் Under Construction என்று வருகிறது. சட்டம் இயற்றி 8 ஆண்டுகளாக புள்ளி விவரங்களை வெளியிடாத ஆணையம், எவ்வாறு மற்ற அதிகார அமைப்பின்மீது தீர்வளிக்க தார்மீக உரிமை பெறும்?
- ஆணையர்களின் பணி ஒதுக்கீடு என்று பார்த்தால் இரண்டு ஓய்வு பெற்ற ஆணையர்களுக்கு முன்னதாக பணி ஒதுக்கீடு செய்த விவரம் பட்டியலிடப்பட்டுள்ளது.
- வழக்கு தீர்வுகள் டிசம்பர் 2012 வரை மட்டுமே பதிவேற்றப்பட்டுள்ளது. மேற்படி சட்டத்தின்படி ஆண்டு அறிக்கைகள் பதிவேற்றப்பட வேண்டும் என்பது தமிழ்நாடு ஆணையத்தால் மட்டும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.
- சுற்றறிக்கைகள், உத்திரவுகள் என்ற வகையில் எந்த உத்திரவும் இணையத்தில் பதிவேற்றப்படவில்லை.
சில தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்களைத் தொடர்பு கொண்டு தமிழக ஆணையம் தற்போது எவ்வாறு செயல்படுகிறது என கேட்டேன். சென்னை பத்திரிகையாளர் சங்க தலைவரும், த.அ.உ.சட்டத்தை மிக அதிக அளவில் பயன்படுத்தி வருபவருமான திரு வி.அன்பழகனின் (அன்பு) மறுமொழி இது. “எனது தரப்பு இரண்டாவது மேல்முறையீடுகள் ஏறக்குறைய 36 எண்ணம் ஆணையம் முன்பாக விசாரிக்கப்படாமல், விசாரணைக்கு பட்டியலிடப்படாமல் நிலுவையிலுள்ளது.” இன்றும் தலைமை தகவல் ஆணையர் (ஸ்ரீபதி) காவல்துறை சார்ந்த த.அ.உ. சட்ட வழக்குகளைத் தானே விசாரிக்கும் வகையில் பட்டியலிட்டுக் கொண்டு பொது தகவல் அலுவலர்களுக்கு ஆதரவாக பல வழக்குகளை தள்ளுபடி செய்துவிடுகிறார் என்றும் அவர் தெரிவிக்கிறார். மேலும், பல வழக்குகளை விசாரிக்காமலேயே யார் மீது புகார் சொல்லப்பட்டுள்ளதோ அந்தப் பொது தகவல் அலுவலருக்கே புகாரை அனுப்பி தகவல் கொடுக்கப்பட்டிருந்தால் அதனை தபாலில் அனுப்பிய ஆதாரத்தை சமர்ப்பிக்கவும் என்ற வகையில் 3 – 4 வரி உத்திரவுகளாக ஆணையம் பல வழக்குகளை தீர்வு செய்து வருகிறது. இது சட்டம் இயற்றிய நோக்கத்தையே சிதறடிப்பதாக உள்ளது என்கிறார்.
அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்று 76 வயதாகும் இன்றைய நிலையிலும் இந்தச் சட்டத்தை பயன்படுத்தி பலரின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு முயற்சித்து வரும் மற்றொரு ஆர்வலர் பொள்ளாச்சி திரு பாஸ்கரன். அவரிடம் இது பற்றிக் கேட்டபோது,
தமிழகத் தகவல் ஆணையம் ஏறக்குறைய செயல்படாத நிலையில் உள்ளது என்றார். “சட்டம் என்பது அனைத்து மாநிலங்களுக்கும் – நடுவண் அரசுக்கும் பொதுவானது என்ற அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட சட்டப்பிரிவின் கீழ் கொண்டு செல்லும் வழக்கில் முந்தைய மத்திய தகவல் ஆணைய தீர்வுகள், அல்லது தமிழக தகவல் ஆணைய தீர்வுகளை சுட்டியாக (Citation) தெரிவித்து மனுதாரர்கள் தரப்பில் வாதிட்டோம். ஆனால், தற்போது புதிதாக பதவியேற்றுள்ள ஆணையர்களில் இருவர் அது முந்தைய ஆட்சி கால தீர்வு என்றும் தற்போது எங்கள் ஆட்சியின் தீர்வை கேளுங்கள் என்றும் சொல்லிவிட்டார். தங்கள் நியமனத்தையே ஏதோ ஆளுங்கட்சி சார்ந்த மாவட்டச் செயலாளர் நியமனம் போல் கருதி ஓப்பன் கமெண்ட் செய்தது எனது நண்பர்களின் வழக்கில் நிகழ்ந்துள்ளது. இது மிகவும் வேதனை தரக்கூடியது.”
நமக்கு அருகிலுள்ள கேரள- ஆந்திர- கர்நாடக மாநில அரசுகளின் தகவல் ஆணைய இணையளங்களைப் பார்வையிட்டால், அவர்கள் அவ்வப்போது தகவல்களை – ஆணைகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருப்பதும், 4 – 5 ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கைகளை பதிவேற்றம் செய்திருப்பதையும் காண முடிகிறது. இன்னும் ஒரு படி மேலே போய், தகவல் ஆணையர்களின் சொத்து விவரங்களையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள்.
அய்யன் வள்ளுவர் குறள் வழிநின்று ஆட்சி நடைபெறும் நமது மாநிலத்தில்,
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி
என நடுவுநிலைமை தவறாது, வெளிப்படைத்தன்மையுடன் நமது தகவல் ஆணையம் செயல்படவேண்டுமென்பது ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் அவா. சீர்படுமா ஆணையம்? பொறுத்திருந்து பார்ப்போம்.
0
எஸ். சம்பத்.tamilpaper.net
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக