ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

ஹைதராபாத் குண்டு வெடிப்பு: ஏன் மதானியை விசாரியுங்கள் என்கிறது மத்திய உளவுத்துறை?


மதானி: இவருக்கு இதில் என்ன கனெக்ஷன்?
மதானி: இவருக்கு இதில் என்ன கனெக்ஷன்? viruviruppu,com
ஹைதராபாத் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பெங்களூரூ சிறையில் இருக்கும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானியிடம் விசாரணை நடத்த ஆந்திர போலீஸ் முடிவு செய்துள்ளது. மத்திய உளவுத்துறை உத்தரவின்பேரில் இந்த விசாரணை நடத்தப்பட உள்ளது.
ஹைதராபாத் குண்டு வெடிப்பின் பின்னணியில் இந்திய முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு இருப்பதாகவே போலீஸ் உறுதியாக நம்புகிறது. வெடிகுண்டு வைக்கப்பட்ட விதம், அது தயாரிக்கப்பட்ட முறை ஆகியவை இந்திய முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தொடர்பை உறுதி செய்துள்ளன.
டில்லி போலீசால் கைது செய்யப்பட்ட இந்திய முஜாகிதீன் தீவிரவாதிகள் மக்பூல், இம்ரான்கான் ஆகியோர், போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ஐதராபாத்தில் எங்கெங்கு குண்டு வைக்கலாம் என பைக்கில் சென்று ஒத்திகை பார்த்ததாக ஏற்கனவே கூறியுள்ளனர். எனவே, ஹைதராபாத் குண்டுவெடிப்பு குறித்து அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கும் இந்திய முஜாகிதீன் அமைப்பின் தலைவர் ரியாஸ் பட்கலுக்கும் ஹைதராபாத் குண்டுவெடிப்பில் முக்கிய பங்கு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதற்குள் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி எப்படி வருகிறார்?
பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, அங்குள்ள அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் அப்துல் நாசர் மதானி. பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக ஹைதராபாத்தை சேர்ந்த நுரிஷா தரிகத் மதரஸா அமைப்பு உறுப்பினர்கள் பலரை போலீசார் கைது செய்தனர். அவர்களும் தற்போது மதானியுடன் அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் நுரிஷா தரிகத் மதரஸாவின் தலைவர் அபு உஸ்தாத்தால் தயார் செய்யப்பட்டவர்கள். மதானிக்கு அபு உஸ்தாத் மிகவும் நெருக்கமானவர். அவரது அழைப்பை ஏற்று பலமுறை ஹைதராபாத் மதரஸாவில் மதானி உரை நிகழ்த்தியுள்ளார்.
இதனால்தான், ஹைதராபாத் குண்டுவெடிப்பு தொடர்பாக மதானியிடம் விசாரணை நடத்த உளவுத்துறை ஆந்திர போலீஸூக்கு ஐடியா கொடுத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உளவுத்துறை ஆந்திரா, மற்றும் கர்நாடகா மாநில போலீசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. ஆந்திரா போலீஸ் வந்து விசாரிப்பதில் தமக்கு ஆட்சேபணை ஏதுமில்லை என கர்நாடகா போலீஸ் தெரிவித்து விட்டது.
அபு உஸ்தாத்தின் ஆட்களுக்கும், தற்போது நடந்த ஹைதராபாத் குண்டு வெடிப்புக்கும் தொடர்பு இருக்க சான்ஸ் இல்லை. இந்திய முஸ்லீம் மொஹமதின் முஜாஹிதீன் (IMMM) அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம். மத்திய உளவுத்துறை ஏன் நுரிஷா தரிகத் மதரஸா பக்கமாக போகிறது என்பது புரியவில்லை.

கருத்துகள் இல்லை: