சென்னை:சென்னையில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட வித்யா இன்று அதிகாலையில்
மரணமடைந்தார்.திருமணம் செய்ய மறுத்த வித்யா மீது கடந்த ஜனவரி 30ல்
விஜயபாஸ்கர் என்பவர் ஆசிட் வீசினார்.இதனால் சென்னை கீழ்ப்பாக்கம்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலையி்ல்
சிகிச்சை பலனளிக்காததால் வித்யா மரணமடைந்தார்.கடந்த இரு வாரங்களுக்கு
முன்னர் அமில வீச்சினால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாணவி விநோதினி கடந்த
12-ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் அதே போன்று அமிலவீச்சினால் வித்யா
உயிரிழந்துள்ளார். இதன் மூலம் அமில வீ்ச்சில் பலியானவர்களின் எண்ணி்க்கை 2
ஆக அதி்கரித்துள்ளது. விஜயபாஸ்கர் தற்போது சிறையில் உள்ளார்.
வினோதினி:காதலிக்க மறுத்ததற்காக முகத்தில் ஆசிட் வீசப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வரும் வினோதினி என்ற இளம் பெண், மருத்துவ செலவிற்கு கூட பணமின்றி கஷ்டப்பட்டார்.
சென்னையில் சாப்ட்வேட் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தவர் காரைக்காலைச் சேர்ந்த வினோதினி (23). இவர் மீது ஒருதலையாக காதல் வயப்பட்ட இவரதுநண்பர் சுரேஷ் (24) என்பவர், தனது காதலை மறுத்த ஆத்திரத்தில், கடந்த நவம்பர் 14ம் தேதி, வினோதினி முகத்தில் ஆசிட் வீசினார். இதில் முகம், கழுத்து, கைகள் மற்றும் மார்பு பகுதி முழுவதும் கருகிய நிலையில், பார்வையை முற்றிலுமாக இழந்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வினோதினி. பார்வை முற்றிலும் பறிபோன நிலையிலும், கண்ணில் அவருக்கு பல கட்ட பிளாஸ்டிக் சர்ஜரி ஆபரேஷன்கள் செய்யப்பட்டன. அவரது கால் பகுதியிலிருந்து தசை எடுக்கப்பட்டு, கண்ணில் பொருத்தப்பட்டது.பின்னர் சிகிச்சை பலனின்றி கடந்த பிப்.,12 ஆம் தேதி மரணமடைந்தார்.தற்போது வித்யாவும் மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக