புதன், 27 பிப்ரவரி, 2013

கள் இறக்க அனுமதி கோரி : சென்னையில் யாகம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

ஈரோடு: தமிழக அரசு கள் இறக்க விதித்துள்ள தடையை நீக்க வலியுறுத்தி தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் நாளை மறுநாள்(28ம் தேதி) சென்னையில் அஸ்வமேத யாகம் நடத்த அனுமதி வழங்க கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அஸ்வமேத யாக குதிரை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து கிளம்பி புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமை செயலகம் வரை கொண்டு செல்ல அனுமதி வழங்கவும், அவ்வாறு செல்லும்போது குதிரையை தடுத்து நிறுத்தி வாதிடுவோர்கள் இயக்க கோரிக்கையில் நியாயம் இல்லை என்பதை நிரூபித்தால்கள் இறக்குவதற்கான அனுமதி கோருவதையே கள் இயக்கம் கைவிடும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. சட்டம்  ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதாலும், நகரின் போக்குவரத்தின் முக்கியத்துவம் கருதியும் யாகத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து கள் இயக்கம் சார்பில் மாற்று இடத்தில் அஸ்வமேத யாகம் நடத்த அனுமதி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறியதாவது: அஸ்வமேத யாகம் திட்டமிட்டபடி நாளை மறுநாள் காலை 11 மணியளவில் சென்னையில் மாற்று இடத்தில் நடத்தப்படும். ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் இருந்து தெற்கு கூவம் சாலை வரை அஸ்வமேத யாக குதிரை அணிவகுத்து செல்லும். அப்போது வழிமறித்து கள் இயக்கத்தின் கோரிக்கையில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து யார் வேண்டுமானாலும் விவாதிக்கலாம். இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதால் கள்ளுக்கு விதித்துள்ள தடை நியாயம் தான் என்று வாதிட நினைப்பவர்கள் முன்வரலாம்.
tamilmurasu.org
கள் இறக்க அனுமதி கோரி : சென்னையில் 28ல் அஸ்வமேத யாகம் ; குதிரையை மறித்து விவாதிக்க சவால்

- See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=40699#sthash.oU8fLhFB.dpuf

கருத்துகள் இல்லை: