செவ்வாய், 24 ஜனவரி, 2012

உக்ரைன் பெண்கள் மேலாடையின்றி போராட்டம்!இந்தியாவின் விசா கட்டுப்பாட்டை எதிர்த்து



கீவ்: இந்திய தூதரகம் உக்ரைன் நாட்டுப் பெண்களுக்கு விதித்துள்ள விசா கட்டுப்பாடுகளைக் கண்டித்து, உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள இந்திய தூதரக அலுவலக கட்டடத்தில் ஏறி மேலாடைகளைக் கழற்றி விட்டு நான்கு உக்ரைன் பெண்கள் நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்களது மேலாடைகளைக் கழற்றி விட்டு இவர்கள் நடத்திய போராட்டத்தால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இவர்கள் பெமென் எனப்படும் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

நக்கீரன் கோபால், இந்து ராமைத் தண்டியுங்கள்-ஜெ. வழக்கு


Nakkeeran Gopal
சென்னை: முதல்வர் ஜெயலலிதா குறித்தும், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். குறித்தும் அவதூறாக செய்தி வெளியிட்ட நக்கீரன் இதழின் ஆசிரியர், இணை ஆசிரியர், நிருபர் மற்றும் இதே செய்தியை எடுத்துப் பிரசுரித்த இந்து நாளிதழின் ஆசிரியர் ராம், செய்தியாளர் கோலப்பன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்துத் தண்டிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சசிகலா அண்ணன் மகன் மகாதேவன் வீட்டில் போலீஸார் திடீர் ரெய்டு

Mahadevan
தஞ்சாவூர்:சசிகலாவின் 2வது அண்ணன் வினோதகனின் மகனான மகாதேவன் வீட்டில் போலீஸார் திடீர் ரெய்டு நடத்தி வருகின்றனர். எதற்காக இந்த ரெய்டு என்பது தெரியவில்லை.
சசிகலாவின் 2வது அண்ணன் வினோதகனின் மூத்த மகன்தான் மகாதேவன். ஒரு காலத்தில் போயஸ் தோட்டத்தில் சர்வ அதிகாரத்துடன் தனது அத்தை சசிகலாவின் துணையுடன் வலம் வந்தவர் மகாதேவன். ஜெ. பேரவை மாநிலச் செயலாளராகவும் இருந்துள்ளார். பின்னர் ஜெயலலிதாவால் ஓரம் கட்டப்பட்டு சமீபத்தில் ஒரேயடியாக விரட்டப்பட்டவர்.

கேரளா-தமிழகத்திலிருந்து போன கோழியை திருப்பி அனுப்பியது!

தேனியிலிருந்து அனுப்பப்பட்ட 10 டன் இறைச்சிக் கோழியை திருப்பி அனுப்பியுள்ளது கேரளா. கோழிகள் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி அனுப்பப்பட்டிருந்தாலும், வேண்டும் என்றேதான் இவ்வாறு கோழியை அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறு.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்துடன் மோதிக் கொண்டுள்ளது. தமிழர்களைத் தாக்குவது, தமிழர்களின் கடைகளைத் தாக்குவது, தமிழர்களின் வாகனங்களைத் தாக்குவது என அட்டகாசம் செய்து வருகின்றனர். இன்று வரை தாக்குதல்கள் நடந்து கொண்டுதான் உள்ளது.

1,075 கோடி செலவில் சென்னை வெளிவட்ட சாலை இரண்டாம் கட்ட பணிகள்

: சென்னை நகரின், வெளிவட்டச் சாலை இரண்டாம் கட்ட பணிகளை, 1,075 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது.
முதல் கட்ட பணி: சென்னை நகருக்குள் நெரிசலை குறைப்பதற்காக, வண்டலூரில் துவங்கி, நசரேத்பேட்டை, நெமிலிச்சேரி வழியாக மீஞ்சூர் வரை வெளிவட்ட சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக, வண்டலூரில் இருந்து நெமிலிச்சேரி வரை, 29.65 கி.மீ., சாலை பணி, தனியார் பங்களிப்போடு நடந்து வருகிறது. வரும் நவம்பர் மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாம் கட்ட பணி : இதன் தொடர்ச்சியாக, நெமிலிச்சேரியில் இருந்து, திருவொற்றியூர், பொன்னேரி, பஞ்சட்டி வழியாக மீஞ்சூர் வரையிலான, 32 கி.மீ., சாலை 1,075 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

திங்கள், 23 ஜனவரி, 2012

கையில ரிமோட் வேற கிடையாது...நண்பனாக இல்லாத நண்பன்


இன்றைய கல்வி அமைப்பு வெற்றுக் கெடுபிடிகள் நிறைந்ததாக இருக்கிறது. அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பது மட்டுமே இலக்காக இருக்கிறது. புரிந்து படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; உயர் கல்வி மையங்கள் புதிதாக எதையும் கண்டுபிடிக்க ஊக்குவிப்பதில்லை. புத்தகத்தில் இருப்பதை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்பிப்பதையே திறமை என்று சொல்கிறார்கள்; பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மீது திணிக்கிறார்கள். அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்பதில்லை. இவையெல்லாம் மிகவும் தவறு என்ற செய்தியை மிகவும் வேடிக்கையான முறையில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர்.
த்ரீ இடியட்ஸ் என்ற பெயரில் ஹிந்தியில் வெளியாகி அனைத்து பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டுகளையும் ஆம்ப்ளிஃபையர்களையும் தகர்த்த படத்தின் அப்பட்டமான நகல்தான் நண்பன். சொந்தமாக எடுக்கப்படும் சமூக அக்கறை இல்லாத படங்களுக்கு மத்தியில் நகல் என்றாலும் நல்ல செய்தியைச் சொல்கிறது என்பதால் இந்தப் படத்துக்கு அனைத்து தரப்பிலும் பெரும் வரவேற்பு கிடைத்துவருகிறது.

சௌதி ஓஜர்: தொழிலாளர்களை கொடுமைப்படுத்தும் அல்லாவின் தேசம்!


மன்னர் காலித் சர்வதேச விமான நிலையம் (கேகேஐஏ-KKIA)” சௌதி அரேபியாவின் தலைநகர் ரியாத்திற்கு வெளியே 40 கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் இந்த விமான நிலையம் தான் பரப்பளவில் உலகின் மிகப் பெரிய விமான நிலையம். இங்கு வெகுசில நிர்வாக வேலைகளைத் தவிர ஏனைய அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்களின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் துப்புறவு, பாதுகாப்பு, பராமரிப்பு உள்ளிட்ட விமான நிலையத்தின் பெரும்பாலான பணிகளை ‘சௌதி ஓஜர்’ எனும் தனியார் நிறுவனம் செய்து வருகிறது.

திருமணத்துக்குப் பின் நடிப்பாரா சினேகா...? என்ன சொல்கிறார் பி்ரசன்னா?


காதலை நேர்மையாக ஒப்புக் கொண்ட சினிமா ஜோடி என்ற பெருமை (அவர்களின் பிஆர்ஓ புண்ணியத்தில்!) யைப் பெற்ற சினேகாவும், பிரசன்னாவும், தங்களின் திருமணம் மற்றும் திருமணத்துக்குப் பிந்தைய வாழ்க்கை திட்டம் குறித்து பத்திரிகை - தொலைக்காட்சிகளில் பேட்டிகள் அளித்து வருகிறார்கள்.
அடுத்தமாதம் தங்களின் திருமணத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போவதாக பிரசன்னா தெரிவித்துள்ளார்.
திருமணம் முடிந்த பிறகு, சினேகா நடிப்பாரா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம், அடுத்தடுத்து தமிழ்ப் படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகி வருகிறார்.

Tamilnadu: 892 நர்ஸ்கள் திடீர் கைது

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவ கல்லூரிகளில் செவிலியர் பட்டய படிப்பு முடித்த 1861 மாணவ, மாணவியருக்கு அரசு பணியில் சேர்வதற்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி 2010ம் ஆண்டு நடைபெற்றது.
இதையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரியில் 969 பேருக்கு அரசு மருத்துவமனைகளில் பணி வழங்கப்பட்டது. மீதமுள்ள 892 பேர் அரசு பணிக்காக காத்திருந்தனர்.

நடிகர் விஷால் மீது நடிகை ராதிகா ரூ 9 கோடி மோசடி புகார்!!


Radhika and Vishal
சென்னை: வெடி பட விவகாரத்தில் ரூ 9 கோடி செக் மோசடி செய்து விட்டதாக நடிகர் விஷால் மீது புகார் கொடுத்துள்ளார் நடிகை ராதிகா.
விஷால் - சமீராரெட்டி ஜோடியாக நடித்த படம் வெடி. ஜிகே பிலிம் கார்ப்பொரேஷன் சார்பில் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தயாரித்தார். பிரபுதேவா இயக்கினார்.
இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் ரிலீசானது. இதனை விநியோகம் செய்யும் பொறுப்பை நடிகை ராதிகாவின் ராடான் டி.வி. நிறுவனம் ஏற்றது. இதற்காக அந் நிறுவனத்துக்கு ரூ.12 கோடி தருவதாக விஷால் உறுதி அளித்து ஒப்பந்தம் போட்டு கொடுத்ததாகவும். அதில் ரூ. 9 கோடியை தற்போது தர மறுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

13,000 மக்கள் நலப் பணியாளர்கள் டிஸ்மிஸ் ரத்து-உடனே பணியில் சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களையும் உடனியாக பணியில் சேர்க்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்த நீக்கத்தையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
திமுக ஆட்சிக்காலத்தின்போது ஒவ்வொரு பஞ்சாயத்திலும் மக்கள் நலப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 13,500 மக்கள் நலப் பணியாளர்கள் இதுபோல பணியாற்றி வந்தனர். பஞ்சாயத்தால் மேற்கொள்ளப்படும் பணிகளை இவர்கள் செய்து வந்தனர். இவர்கள் உள்ளாட்சித் துறையின் கீழ் வருவார்கள்.

கனிமொழிக்கு கட்சியில் 'கனமான' பதவி கிடைக்குமா?

திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுக்குழுவில் கனிமொழிக்கு கட்சியில் முக்கியப் பதவி அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் அவரது ஆதரவாளர்களிடையே ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது.
தி.மு.க. பொதுக்குழு வருகிற 3-ந்தேதி கூடுகிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க.வின் 14-வது உள்கட்சி தேர்தல், பாராளுமன்ற தேர்தல், சங்கரன்கோவில் சட்டசபை இடைத்தேர்தல், வருங்கால கூட்டணி உள்பட கருத்துக்கள் குறித்தும் பொதுக்குழுவில் விவாதிக்கப்படுகிறது.

வெளிநாட்டு நடிகையை ஏமாற்றிய டைரக்டர்


“சொன்ன நேரத்திற்கு வராமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்களே” என்று சரோஜாவிடம் கேட்டால், “நான் என்ன வெளிநாடுவரை போயாஏமாற்றிக் கொண்டிருக்கிறேன்?” என்று பதில் கேள்வி கேட்டார். “இதென்ன புதுக்கதை? ” என்றதும் சொல்லத் தொடங்கினார். “விண்ணைத் தாண்டும் இயக்குநர் வெளிநாட்டுக்குச் சென்றிருந்த போது பழைய சென்னைப் படத்தில் நடித்த நடிகையைப் பார்த்து, ‘ என் படத்தில் நடிக்க வேண்டும்’ என்று கேட்டாராம். அவரும் சம்மதித்திருக்கிறாராம்” என்றார். “இதில் ஏமாற்றுவதற்கு என்ன இருக்கிறது?” என்று நாம் கேட்டதும், “அடுத்து சூரிய நடிகரை வைத்து இயக்கப்போகும் படத்தில் நாயகியாக நடிக்க வேண்டும் என்று கேட்டதும் நடிகை ஒப்புக்கொண்டாராம். சிறிது நாட்கள் கழித்து, ‘நான் சொன்ன படம் தொடங்க இன்னும் சிறிதுகாலம் பிடிக்கும். அதற்குள், நான் இயக்கும் இந்திப்படத்தில் நடிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாராம். நடிகை அதற்கும் சம்மதித்திருக்கிறார்.

நண்பன்.. விஜய் நடித்த படங்களில் மெச்சக்கூடியது இதுதான்


 கடைசியாக வந்த சில படங்களில் விஜய் ஒரே மாதிரியாக நடித்திருந்ததால், இந்த மாறுபட்ட நடிப்பு ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி அளித்துள்ளது. இயக்குனர் ஷங்கர் ரசிகர்களை இருக்கையில் கட்டிப் போட்டுவிட்டார். ஏற்கனவே பார்த்த படத்தை பார்க்க வரும் ரசிகர்களை உச்சு கொட்ட வைக்காமல் இருக்க வைக்க வேண்டும் என்ற முயற்சியில் வெற்றி பெற்றார் இயக்குனர்.
ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவா நண்பர்கள். இவர்களின் மற்றொரு நண்பனான சத்யன் போன் செய்து ஜீவா, ஸ்ரீகாந்தின் மிக முக்கிய நண்பனான விஜய் வந்திருப்பதாக அழைக்கும் போது அவசரமாக தங்களது பழைய கல்லூரிக்கு வருகிறார்கள். ஆனால் விஜய் அங்கு இல்லை, விஜய்யின் இருப்பிடம் தெரியுமென்று சத்யன் கூறுவதால் அங்கு செல்கிறார்கள்.
பின்னோக்கி பிளாஷ்பேக் செல்கிறார்கள்.

சசிகலாவின் தம்பி திவாகரனை காணவில்லை

சசிகலாவன் தம்பி திவாகரன் மீது கொலை மிரட்டல் புகார் வந்துள்ளதைத் தொடர்ந்து போலீஸார் அவரை விசாரிக்கவும், கைது செய்யவும் தேடுதலில் இறங்கியுள்ளனர். இதையடுத்து திவாகரன் தலைமறைவாகி விட்டார்.
திவாகரன் மீது ரிஷியூரைச் சேர்ந்த கஸ்தூரி என்பவர் கொலை மிரட்டல் புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக திருவாரூர் போலீசில் புகார் அளித்த கஸ்தூரி, கடந்த ஆண்டு நவம்பர் 28ந் தேதி, அரசு வழங்கிய தொகுப்பு வீட்டை திவாகரன் இடித்து தரைமட்டம் ஆக்கி விட்டதாகவும், நிலத்தை சுற்றி வேலி அமைத்து தங்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்து வருவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை, திவாகரன் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

விதிமீறி கட்டப்பட்ட வணிக வளாகம் இடிப்பு: உரிமையாளர்கள் முன்வந்து நடவடிக்கை

சி.எம்.டி.ஏ.,வின் அதிரடியை அடுத்து, சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில், விதிகளை மீறி கட்டப்பட்ட வணிக வளாகத்தை அதன் உரிமையாளர்களே இடிக்கும் பணியை துவக்கியுள்ளனர்.
சென்னையில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் மீதான நடவடிக்கையை சென்னை ஐகோர்ட் நேரடியாக கண்காணித்து வருகிறது. இதன் காரணமாக, தி.நகர், ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை ஆகிய இடங்களில் உள்ள 64 அடுக்குமாடி கட்டடங்களில் அதிகளவில் விதிமீறல் இருப்பதாக கண்டறியப்பட்டன. இதில் ஆறு கட்டடங்களுக்கு சி.எம்.டி.ஏ., அதிகாரிகளும், 19 கட்டடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகளும் கடந்த அக்டோபர் 31ம் தேதி சீல் வைத்தனர். ஐகோர்ட்டின் கிடுக்கிப்பிடியால் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்தனர். இதில் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் சுப்ரீம் கோர்ட்டை அணுகி, ஆறு வாரங்களுக்கு தற்காலிகமாக கடைகளை திறக்க இடைக்கால நிவாரணம் பெற்றனர். இதனால், 71 நாள்கள் மூடப்பட்டிருந்த பிரபல வணிக வளாகங்கள் கடந்த 10ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டன.

கேரளாவுக்கு பதிலடி கொடுக்க பாண்டியாறு புன்னம்புழா திட்டம்?

ஊட்டி: "முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் முரண்டு பிடிக்கும், கேரள அரசுக்கு "செக்' வைக்க, பாண்டியாறு புன்னம்புழா திட்டத்துக்கு, தமிழக அரசு செயல்வடிவம் கொடுக்க வேண்டும்' என, அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
பாண்டியாறு புன்னம்புழா நீர்மின் திட்டம், 1969ம் ஆண்டில் முழு வடிவம் பெற்றது. நீலகிரி மாவட்டம், கூடலூரில் இருந்து மரப்பாலம் பகுதி வரை, இதற்கான பணிகளை செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, கூடலூர் சுற்றுப்புற பகுதிகளில் ஓடும், 10க்கும் மேற்பட்ட சிறு ஆறுகளை இணைத்து, பாண்டியாறு புன்னம்புழா நீரை, மின் உற்பத்திக்குப் பயன்படுத்த அணைகள் கட்ட திட்டமிடப்பட்டன. மரப்பாலம் பகுதியில், 42 மீ., உயரத்திலும், பாண்டியாறு பகுதியில், 62 மீ., உயரத்திலும், சோலாட்டி புழா பகுதியில், 65 மீ., உயரத்திலும், மூன்று அணைகள் கட்ட உத்தேசிக்கப்பட்டது. இந்த அணைகள் கட்டப்படும் போது தேக்கி வைக்கப்படும் தண்ணீர், நீர்மின் திட்ட பணிகளுக்காக, மாயாருக்கு திருப்பி விடவும் திட்டமிடப்பட்டது. மின் உற்பத்தி பணிகளை, மசினகுடி அருகேயுள்ள சீகூர் மேற்கொள்ளவும், மின் உற்பத்திக்குப் பின் தண்ணீரை, கீழ் பவானி திட்டத்தின் கீழ், தமிழக விவசாயிகளின் பாசனத்திற்கு பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

யு.எஸ். ஜெர்மனியிலிருந்து கேரளா வழியாக கூடங்குளம் போராட்டக் குழுவுக்கு நிதி வருவது கண்டுபிடிப்பு!


Udayakumar
நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவுக்கு வெளிநாட்டிலிருந்து பெருமளவில் நிதி வந்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா, ஜெர்மனியிலிருந்து இந்த நிதி அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிதியை கேரளாவில் உள்ள மீனவர் சங்கம் மூலம் கூடங்குளம் போராட்டக் குழுவுக்கு விநியோகித்துள்ளனர். இதன் மூலம் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் கேரளாவின் பங்கும் முக்கியமாக அமைந்திருப்பது தெரிய வந்து அனைவரையும் அதிர வைத்துள்ளது.

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

நைஜீரியாவில் பயங்கர தீவிரவாதத் தாக்குதல்- இந்தியர் உள்பட 160 பேர் பலி

அபுஜா: நைஜீரியாவில் நடந்த பயங்கர தீவிரவாதத் தாக்குதலில் ஒரு இந்தியர் உள்பட 160 பேர் கொல்லப்பட்டனர். 6 இந்தியர்கள் படுகாயமடந்தனர்.
நைஜீரியாவின் 2வது பெரிய நகரான கானோ என்ற நகரில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அடுத்தடுத்து தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகளும், துப்பாக்கிச் சூடுகளும் அந்த நகரையே சுடுகாடாக்கி விட்டது. இதுவரை 160 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பூஜா காந்தி நிர்வாணமாக நடித்த படம்-பெங்களூரில் ஆர்ப்பாட்டம்!


Pooja Gandhi
தண்டுபாளையா என்ற கன்னடப் படத்தில் தனது முழு முதுகையும் துணி இல்லாமல் காட்டி நடித்துள்ள நடிகை பூஜா காந்தியைக் கண்டித்து பெங்ளூரில், திரைப்பட வர்த்தக சபை முன்பு கர்நாடக அம்பேத்கர் கிராந்தி சேனா என்ற அமைப்பின் சார்பி்ல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழில் கொக்கி, திருவண்ணாமலை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூஜா காந்தி. தற்போது கன்னடத்தில் பிரபல நடிகையாக உள்ளார். சமீபத்தில் தேவகவுடாவை ரோல் மாடலாக அறிவித்து அவரது மகன் குமாரசாமி தலைமையில் இயங்கி வரும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

பசுபதி பாண்டியனைக் கொல்ல உத்தரவிட்டது சுபாஷ் பண்ணையார்- எஸ்.பி.


Pasupathi Pandian
திண்டுக்கல்: தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்புத் தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் துப்பு துலங்கி விட்டது. தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார்தான் இந்த கொலையைத் தூண்டி கூலிப்படையை ஏவி விட்டவர் என்று திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். மொத்தம் 14 பேர் கொண்ட கும்பல் இந்த கொலைச் சதியில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன்,

வன்னியர்கள் அதிகாரிகளாக வலம் வர திராவிட இயக்கமே காரணம்

"வன்னியர்கள் கலெக்டராக, பேராசிரியர்களாக வலம் வர, திராவிட இயக்கம் தான் காரணம்,'' என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
பா.ம.க., மாநில துணைத் தலைவர் ஏழுமலை தலைமையில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பா.ம.க.,வினர், தி.மு.க.,வில் இணைந்தனர்.
இதில் தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது:பா.ம.க.,வுடன், கடந்த பல ஆண்டுகளாக தி.மு.க., தோழமையோடு இருந்துள்ளது. இடையில் ஏற்பட்ட வேறுபாடு காரணமாக இப்போது பிரிந்து நிற்கிறது. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் என் இயக்கத்தையே இழித்துப் பேசியுள்ளார். என்னுடைய தலைவர்களை இழிவுபடுத்தினால் கூட பொறுத்துக் கொள்வேன். ஆனால், என் சமூகத்தை உருவாக்கிய திராவிட இயக்கத்தை இழிவுபடுத்தினால், நான் என்ன செய்வேன்.இதற்காக, நான் பெரும் மன உளைச்சலுக்கும் உள்ளாகியிருக்கிறேன்.

tamil directors ஜாதி இந்துக்களின் குடியிருப்புகளான ஊரை மட்டுமே கிராமங்களாக காட்டுகிறார்கள்.

முந்தைய இயக்குநர்களைவிடவும், இன்றைய இளம் இயக்குநர்களின் எதார்த்த திரைப்படங்கள் மிகவும் மேம்பட்ட நிலையில் இருப்பதாக நான் கருதுகிறேன்.
-கே.எஸ். சிவபாலன், திருநெல்வேலி.
பழைய, புதிய இயக்குநர்கள் அனைவருமே, சோற்றுக்குள் பூசிணிக்காயை அல்ல, இமயமலையையே மறைக்கிற அளவிற்கு பெரிய கில்லாடிகள்.
இந்திய, தமிழக கிராமங்கள் ஊரு வேறு சேரி வேறு என்ற பாகுபாட்டோடுதான் இருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் ஊருக்குள் குளம், பொது சுடுகாடு, கிணறு, ஊர் கோயில் இப்படி பொது தளங்களுக்குள் இன்றுவரை அனுமதிக்கப்படுவதில்லை.

நண்பன் வசூல் பற்றி விஜய்....அதையெல்லாம் நம்பாதீர்கள்...எஸ் ஏ சந்திரசேகரன்

Vijay At a Press Meet
கொஞ்ச நாட்களாக கேட்காமலிருந்து 'ரஜினி படத்துக்கு ஈக்குவலா...' என்ற சுயபுராணத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளது விஜய் தரப்பு.
எல்லாம், நண்பன் படம் நன்றாகப் போகிறது என்று வரும் செய்திகள் மற்றும் பேச்சுக்களின் விளைவு!
இதுவரை வந்த விஜய் படங்களிலேயே இதுதான் நல்லாருக்கு என்று பலரும் நண்பன் படத்தைப் பாராட்டி வருகின்றனர். காரணம், நிச்சயமாக விஜய் இல்லை!

பொன்னுத்தாய் எழுப்பிய நாதஸ்வர ஓசை.... ஆணாதிக்கமிக்க சமுதாயத்தில் சாதித்திருக்கிறார்

தனது நாதஸ்வர இசையால் பல கோடி உள்ளங்களைக் கட்டிப்போட்டவர் பொன்னுத்தாய். அறுபது ஆண்டுகளுக்கு மேலாக விடாது இவர் எழுப்பிய நாதஸ்வர ஓசை இப்போது நிரந்தரமாக ஓய்வெடுத்துவிட்டது.
‘ஆண்களால் மட்டுமே நாதஸ்வரம் வாசிக்க முடியும்... நாதஸ்வரத்தின் எடை, அதைக் கையாளும் ஆற்றல், அனைத்தும் ஆண்களுக்கே சாத்தியம்’ என்ற எண்ணத்தை முதன்முதலாக தகர்த்தவர் பொன்னுத்தாய்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகேயுள்ள புது ஆயக்குடிதான் பொன்னுத்தாயின் சொந்த ஊர். சிறுவயதிலேயே தாயை இழந்தவர்.