Khaleel Syed: என்னவோ புள்ளைங்க, நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்துறாங்க போல, னு ஒரு யோசனையுடன் தான் கிளம்பினேன்.
கலைஞர் அரங்கத்தை அடையும் போதே உள்ளிருந்து பறந்த கைதட்டல்களும் ஆராவாரமும் நடையை வேகமாக்கியது.
போன பிறகு தான் இது வழக்கமான “தீர்மானம் வாசிப்பு கூட்டம் இல்ல, Political Reboot Event மாதிரியான சந்திப்பு என்பது புரிந்தது.
நாங்க தான்டா இன்னும் இப்பவும் கேம்ல இருக்கோம் என்று உறுதியோட இருந்தது அத்தனை பேருடைய கண்களும்.
இளைஞர்களிடம் நம் கருத்துக்களை டிஜிட்டல் யுகத்துக்கு ஏற்ற வகையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே இந்த முயற்சியின் நோக்கம் அத்தனை பேச்சிலும் வெளிப்பட்டது.
நாம் எதில் கோட்டை விட்டோம் என்பதை, ஒரு பக்கம் நக்கலாக TED Talk மாதிரியும் இன்னொரு பக்கம் College Culturals Chief Guest Speech மாதிரி நாசூக்காகவும், நடுவுல Political Recharge Camp மாதிரியும் இளைஞர்கள் பேசப் பேச அரங்கம் அமைதியாக நேரமெடுத்தது.
இத்தனை வீரியமான இளைஞர்கள் திமுகவில் மட்டுமே காணக் கிடைப்பார்கள் என்று உங்களை நீங்களே தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்கள் நட்புக்களே..
Law & Order, Governance, Policy Execution போன்ற விஷயங்களில் தற்போதைய அரசை விமர்சித்த பேச்சுகளுடன்,Achievements + Current Government Criticism + GenZ Engagement”
இந்த மூன்றையும் கலவையாக தந்துக் கொண்டிருந்த இளைஞர்களின் பேச்சுகளுக்கும் அமோக வரவேற்பு.
திமுகவை இளைஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் மைய மெசேஜ்.
டிஜிட்டல் அரசியல், மீம்ஸ், ரீல்ஸ், ஆன்லைன் நரேட்டிவ் பற்றிய பேச்சுகள் அதிகம் கவனம் பெற்றது.
தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுகவின் கதை முடிந்துவிட்டது என்று நினைக்காதீர்கள்; மீண்டும் எழும் என்ற எழுச்சி டோன் எல்லாரிடமும் இருந்தது.
இளைஞர்கள் அரசியலில் நேரடியாக பங்கேற்க வேண்டும், வெறும் சமூக வலைதள போராளிகளாக இருக்கக்கூடாது என்பதையும் பேச்சாளர்கள் வலியுறுத்தினர்
திமுகவின் வழக்கறிஞர் அணி செயலாளர் அண்ணண் என்ஆர் இளங்கோ, "அரசியலை வேடிக்கை பார்க்கும் தலைமுறையா இருக்காதீங்க; அரசியலை உருவாக்கும் தலைமுறையா இருங்க என்ற போதும், கண்ணியம் கட்டுப்பாட்டுகளோட களத்தில் அடித்து ஆடுங்கள், கழகமும் வழக்கறிஞர் அணியோடு உங்களோட நிற்கும் என்ற போதும் உபிக்கள் தங்கள் கால்களில சலங்கை கட்டியதை உணர்ந்தார்கள்.
Gen Z வாக்காளர்கள் இன்று வெறும் ரசிகர் மனநிலையில இல்லை; கேள்வி கேட்கும், ஒப்பிடும், கண்காணிக்கும் தலைமுறையினர் என்ற டிஆர்பி ராஜா அண்ணனின் கருத்து வந்து இருந்தவர்களால் அதிகம் உணரப்பட்டது
மொத்தத்தில் கலைஞர் அரங்கத்தில் நடந்த இன்றைய DMK GENZ MEET UP உபயோகமானது, ஒவ்வொரு மாவட்டத்தாலும் நடத்தப்பட வேண்டிய நிகழ்ச்சி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக