சனி, 6 ஜூன், 2026

ரஞ்சித் முன்னெடுக்கு பறையர் ஜாதி பெரும்பான்மை ஆதிக்க அரசியல்

 Amudhan R P   : சென்னை மேயர்  - திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதற்காக மட்டும் தாக்கப்படவில்லை.  
அவர் கறாராக, வழக்கமான, இயல்பான அரசாங்க நடைமுறையைக் கடைபிடித்தார் என்பதற்காக மட்டுமல்ல. 
சென்னை மேயர் மாதிகா எனும் தெலுங்கு பேசும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தான் விசிக தலைவர்களாலும் தாக்கப்படுகிறார்.
எது நடக்கக்கூடாது என்று நினைத்தோமோ அதுவே நடந்துவிட்டது. 
பா ரஞ்சித் போன்றோர்கள் ஆசைப்பட்டது நடந்துவிட்டது.


தலித் அடையாளத்தை ஆதிதிராவிடர் (பறையர்) அடையாளமாக, சுயமரியாதையை தற்பெருமையாக, சென்னையே நாங்கள் தான் என்ற மெஜாரிடியேரியன் (majoritarian) குரலாக, நாங்கள் தான் அறிவாளிகள் மற்றவர்கள் முட்டாள்கள் என்ற இனவாத குரலாக, விடுதலைச் சிறுத்தைகள் தங்களைப் போன்று செயல்படவேண்டும் என்று ஆசைப்பட்டவர்களில் ரஞ்சித் முக்கியமானவர். 
இதுவரை அதற்குள் சிக்காத திருமாவை, லாட்டரி மஃபியாவின் பணமும், ரஞ்சித் போன்றோர்களின் எக்ஸ்க்ளூசிவ் (exclusive) அரசியலும் எங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது பாருங்கள்.
விசிகவிற்கு மற்ற சமூகத்தினரும் வரவேண்டும் என்று, அதை யாரும் தலித் கட்சி என்று சொல்லக்கூடாது என்று போராடிய திருமாவிற்கு இது பெரிய இழுக்கை ஏற்படுத்தியிருக்கிறது. 
விசிக தலைவர்கள் தேர்தலில் போட்டி போடத்தொடங்கியபோது பிற ஜாதியில் பிறந்த பல முற்போக்குத் தோழர்கள் தாமாக முன்வந்து பரப்புரை செய்தனர் என்பதை இந்த எக்ஸ்க்ளூசிவ் கோஷ்டியினருக்கு நினைவிருக்குமா?
மாதிகாவைத் தாக்கும் ஜாதியவாத தலித்தை நாம் எப்படி ஆதரிக்க முடியும்?
அவர்கள் யாராக இருந்தால் என்ன? 
..
அமுதன் ஆர் பி 
ஆவணப்பட இயக்குநர் 
சென்னை See less

கருத்துகள் இல்லை: