புதன், 3 ஜூன், 2026

கடல் நீர் குடிநீரானது - அதிகமாக பேசப்படாத கலைஞரின் அரிய சாதனைகளில் ஒன்று.

May be an image of text that says "பல்வேறு துறைகளில் தொலைநோக்குப் பார்வையுடன். முத்தமிழறிஞர் கலைஞர் செயல்படுத்த த்திய திட்டங்கள், உருவாக்கிய கட்டமைப்புகள் கட்ட குறித்து இந்தப் பகுதியில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் குடிநீரான கடல்! ல்! குடிநீரான கடல்! தாகம் தணித்த தெற்காசியாவின் முன்னோடித் திட்டம்!"

 Muralidharan Pb  :  கலைஞர்  பக்கம் பதிவு 13 கடல் நீர் குடிநீரானது
கலைஞரிடம் உங்களுக்கு பிடித்தது என்ன என்று கேட்டால்?
நிலைமை இதுதான் இதற்கு மேல் நம்மிடம் சாத்தியங்கள் இல்லை,வசதிகள் இருக்காது. இதிலிருந்து எப்படி நமக்கு என்ன தேவையோ எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? என்று வினவினால்
நமக்குத் தேவையானதை நாம் எடுத்துக் கொண்டு அதனை வைத்து எவ்வாறு பயன் பெறுகிறோம் என்று சிந்திப்பதே அவருடைய பேராற்றல். 
ஆற்றல் மிக்க பகுத்தறிவுவாதிகளுக்கு Optimistic Rationlist மட்டுமே இப்படித் தோன்றும். அதனால் தான் அதை பலமுறை low resources இருந்தும் அதைவைத்து maximum output சாத்தியம் என அதை பல்வேறு முறை நடைமுறைப்படுத்தியவர் தலைவர் கலைஞர். 


தமிழ்நாட்டில் தண்ணியில்லாத காடு என்றால் அது ராமநாதபுரம். 
அந்த மாவட்டத்தில் கடல்சார்ந்த பகுதிகளில் குடி தண்ணீர் உடலுக்கு கேடாக இருக்கும். உப்பு மிகுதியாக இருக்கும். கடுமையான வயிறு சம்பந்தமான நோய்கள் மிகுந்து காணப்படும்.
தண்ணீர் என்பது அங்கு திரைப்படங்களில் பார்த்தால் தான் உண்டு. மழை என்பது எப்போதும் பெய்யாது. கடுமையான குடிநீர் தட்டுப்பாடுள்ள பகுதி என்றால் அது முகவை மாவட்டம். ஆறுகள் குறைவு.
ஆனால், கலைஞர் அந்த இடத்திலேயே தண்ணீரை கொண்டுவந்தது மக்களுக்கு அளித்தது எப்படி? இது அதிகமாக பேசப்படாத கலைஞரின் அரிய சாதனைகளில் ஒன்று. 
முதன்முதலாக ராமநாதபுரத்தில் 1999 ஆம் அண்டு இதைக் கொண்டுவந்தது கலைஞர் மு கருணாநிதி அவர்களது அரசு என்பதே அவரது தொலைநோக்கு திட்டத்திற்கு சான்று.
அதுவும் BEL துணையோடு(கவனிக்க அரசு நிறுவனம்) வரண்ட நிலத்தில் கூட தண்ணீரை கொண்டு வந்து சாதித்துள்ளார். 
கடல்நீரை குடி நீராக்கும் திட்டத்தை நாட்டிற்கே ஏன் தெற்கு ஆசியாவிலேயே அறிமுகப்படுத்திய முதன்முதலாக அறிமுகப்படுத்திய பெருமை நம் பெருவுடையார் தலைவர் கலைஞரை சேரும்.
ஆனால் என்றோ 50 வருடங்களுக்கு முன்பாக ரெலேகன் சித்தி என்ற ஊரில் சொட்டு நீரை கொண்டு வந்த அண்ணா அசாரே பற்றி அறிந்த நாம், கலைஞர் கொண்டு வந்த இதைப்பற்றி அறிந்திருக்கவில்லை. காரணம் என்ன என்பதை நாம் எல்லோருமே அறிவோம். அப்படிப்பட்ட ஊடக சொகுசு எப்போதும் இல்லாத ஒரு தலைவர் அவர். 
முகவையில்(ராமநாதபுரம்)அன்றே 55 கோடி செலவில் கடல் நீரை குடிநீராக்கியவர் கலைஞர். அப்போதே முதல் கட்டமாக சுமார் இரண்டு லட்சம் பேர் பயனுருவர். இரண்டாம் கட்டமாக சுமார் 7.75 லட்சம் பேர் பயன் பெறுவர் என எதிர்பார்க்கப்பட்டது. 
நிகழ்ச்சியை ரொம்ப எளிதாக நடத்திய அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த கோ.சி.மணி அவர்களை செல்லமாக கோவித்துக் கொண்டார் கலைஞர். நாட்டில் உள்ள பத்திரிகையாளர்களை அதிக அளவில் அழைத்திருந்தால் இதை நாட்டின் பிற மாநிலங்களுக்கும் உதவுமே என அவ்விழாவில் கலைஞர் பேசியது வரலாறு.
ஆனால் இந்த திட்டதின் வாயிலாக கலைஞருக்கு நற்பெயர் வந்துவிடக்கூடாது என இந்த செய்தியை, இந்த தண்ணீரால் நோய் வரும் என வதந்திகள் பரப்பிய நல்ல உள்ளங்களும் கூட நம்மோடு இருந்துள்ளன.
ஆனால் அதையெல்லாம் தவிடுப்பொடியாக்கி இன்று நாட்டின் மிகப்பெரிய கடல் நீர் சுத்திகரிப்பு ஆலையை சென்னைக்கு அருகே மீஞ்சூரில் 2010 ஆம் ஆண்டு திறந்து வைத்தவரும் அதே கலைஞர். வட சென்னையைப் போலவே நெமிலியில் தென்சென்னைக்கும் ஓர் ஆலையை திறந்தவர் கலைஞர்.
முகவை மாவட்டம், சென்னை மாவட்டம் உள்ளிட்ட பகுதிகள் இன்று நாள்தோறும் உபயோகிக்க தண்ணீர் பயன்படுத்தி வருகிறது என்றால் அது கலைஞர் என்ற பேரரசன் தந்த கொடை என்றால் அது மிகையாகாது

கருத்துகள் இல்லை: