![]() |
முறை கேடான காதலையும் ரசிப்பார்கள்
அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு கூட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டு முழங்கி விட்டு
அடுத்த நாளே ஊழலை விலாவாரியாக காட்டும் மங்காத்தாவையும் விழுந்து விழுந்து ரசிப்பார்கள்
ஓவராக பண்பு குடும்ப ஒழுக்கம் தூய்மையான காதல் அரசியல் நேர்மை கொள்கை என்றெல்லாம் வாய் வலிக்க வகுப்பெடுப்பார்கள். மனைவியையும் இரு பிள்ளைகளையும் அம்போ என்று விட்டு விட்டு ஊர் அறிந்த திரை மகளோடு பொதுவெளியில் பிலிம் காட்டுவதையும் ரசிப்பார்கள்
போனால் போகட்டும் ரசித்து விட்டு போகட்டும்
ஆனால் இப்படி பட்ட ஒரு ஓடுகாலியிடம் நாட்டை ஒப்படைத்தது மட்டுமல்லாமல் அவனுக்காக உருகி உருகி வழிவதை எந்த ரகத்தில் சேர்ப்பது
இவனின் அத்தனை சீர்கேட்டையும் ரசிப்பவர்களோடு கூடவே வாழும் மனிதர்கள் உண்மையிலே பரிதாபத்திற்கு உரியவர்கள்தான்
இவனை ரசிப்பது கூட ஏற்று கொள்ளலாம் இவனை ஒரு மீட்பனாக கருதுவோர் எப்படிப்பட்ட மனிதர்கள்?
நிச்சயமாக இவர்களிடம் அறிவு நாணயமும் இருக்காது
வாழ்வியல் நேர்மையும் இருக்காது .
இதை தான் கேடுகெட்ட சங்கித்தனம் என்று கூறுகிறோம்
மீள்பதிவு :
நடிகர் விஜய்க்கு வெறும் ரசிகர் பட்டாளம் மட்டும் வாக்கு போடவில்லை
திமுகவுக்கு எதிராக தமிழ் தேசியர்களும் பல முகமூடிகளோடு உலா வரும் சங்கிகளும்
செய்து வந்த ஏராளமான பொய் பிரச்சாரங்களும் நடிகர் விஜய்க்கு வாக்குகளாக கிடைத்துள்ளன
சீமான் திருமுருகன் காந்தி நெடுமாறன் வைகோ திருமாவளவன் போன்ற பலர் கட்டி எழுப்பிய திராவிட ஒவ்வாமை வாக்குகளை மொத்தமாக நடிகர் விஜய் ஈ வி எம் EVM உதவியோடு திருடி விட்டார்
திமுகவினரோ இந்த திராவிட ஒவ்வாமையை மிகவும் அலட்சியக எதிர்கொண்டு விட்டார்கள் என்று தோன்றுகிறது
பச்சை பொய்களை யார் அள்ளிவீசினாலும் அவற்றிற்கு பதிலடி கொடுப்பதில்லை என்ற திமுகவின் அடிப்படை கொள்கைதான் திமுகவின் மிக பெரிய குறைபாடு
தானாக உண்மை வெளிவரும் என்ற சாமியார்தன நடைமுறையை யார் திமுகவிற்குள் கொண்டு வந்தார்கள் என்று தெரியவில்லை
கலைஞர் உடனுக்கு உடன் பதிலடி கொடுப்பார்
கலைஞருக்கு பின்பு திமுகவின் தலைமை பீடம் மக்களிடம் இருந்து கொஞ்சம் விலகி இருக்கும் போக்கையே கடைபிடித்தது
சாதாரண தொண்டர்கள் குறிப்பாக பல திமுக குடும்பங்கள் அரசியல் பொதுவெளியில் இருந்து தூரம் சென்று விட்டது.
திமுக வாக்காளர்கள் என்பதை தாண்டி திமுக குடும்பங்கள் என்ற ஒரு பெரிய கூட்டம் முன்பு இருந்தது.
இப்போதெல்லாம் அப்படி பட்ட குடும்பங்கள் இருப்பதாக தெரியவில்லை,
அந்த குடும்ப அங்கத்தவர்களுக்கு நாம் திமுக குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்ற உணர்வு sense of belonging இருந்தது.
அந்த திமுக குடும்ப அமைப்பு என்பது கடந்த ஐந்து ஆண்டுகளில் மெதுவாக காணாமல் போய்விட்டன என்று தோன்றுகிறது.
இதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என்று சிந்தித்து பார்க்கவேண்டும்.
ஒரு வகை பண்ணையார்தனம் பற்றி கொண்டது என்றெண்ணுகிறேன். இதை மிகவும் வருத்தத்தோடு குறிப்பிட வேண்டி உள்ளது
எஸ் வி சேகரும் வாஸந்திகளும் இலகுவில் சந்திக்க கூடிய கோபாலபுரம் அறிவாலயம் எல்லாம்
கிராமத்து திமுக தொண்டர் குடும்பங்களுக்கு வெகுதூரமாகி வெகு நாட்களாகி விட்டன
அவர்களின் அடுத்த தலைமுறைகளுக்கு சீமானும் விஜய்யும் கொஞ்சம் நெருக்கமாக தெரிந்தது ஒரு விபத்துதான்.
நடிகர் விஜய் அரசியலுக்கு மட்டுமல்ல பொதுவாக ஒரு மனிதன் என்ற அளவிலேயே மிகவும் தோற்று போன மனிதர்தான்
ஒரு நல்ல மனைவி இரு வளர்ந்த பிள்ளைகள் போதிய அளவு செல்வம் நல்ல ஆரோக்கியம் என எல்லாம் இருந்தும் மகிழ்வாக வாழ முடியாத ஒரு மனிதன் நாட்டுக்கு என்ன செய்துவிட முடியும்?
இவனொரு வீண் மனிதன்தான்
இவனின் இந்த குறைபாடுகள் விரைவில் இவனை ஒரு வழிப்பண்ணும்
இவன் மீது இப்போது உள்ள பிம்பம் என்பது ஒரு வெறும் பலூன் போன்றதுதான்
ஒருநாள் இவனும் இவனின் கட்சியும் ஆட்சியும் காணாமல் போகும்.
ஏதோவொரு கோபத்தில் சொல்வதாக கருதவேண்டாம்
இவனோடு எனக்கென்ன வாய்க்கால் வரப்பு தகராறா?
இவனை சுற்றி தெரிவதெல்லாம் பொய்யும் புரட்டுமாகதான் எனக்கு தெரிகிறது
சுருக்கமாக சொன்னால் இவனின் வெற்றி என்பது தமிழக அரசியலின் தோல்வி என்றுதான் தெரிகிறது
தமிழக அரசியலின் தோல்விக்கு உரிய அடையாளமாகதான் நடிகர் விஜய்யின் வரவு அமைந்திருக்கிறது
இது நடிகர் விஜயின் வெற்றியே கிடையாது
இந்திய மக்களின் தோல்வியான இ வி எம் EVM மோசடியின் வெற்றி இது.
ஆட்சி இயல் என்ற கணக்கு பாடத்தில் ஏறக்குறைய தொண்ணூறு புள்ளிகள் பெற்ற திமுக,
மனித மனம் என்ற கெமிஸ்ட்ரி பாடத்தில் கோட்டை விட்டது.
இதில் பலருக்கும் புரிதல் இல்லை
வயதான பெரும் தலைகளின் பண்ணையார்தனம் ஒருபுறம்,
அவர்களின் அரைவேக்காட்டு வாரிசுகளின் கைகளில் பெரும் பொறுப்புக்கள்.
ஆனாலும் இப்போது கிடைத்திருப்பது ஒரு வாய்ப்பு
இப்போதும் தமிழ்நாட்டின் பலமான கட்சி திமுகதான்
நேர்மையாக தேர்தல் நடந்தால் நிச்சயம் 150 தொகுதிகளுக்கு குறையாமல் திமுகவே வெற்றி பெறும் என்றெண்ணுகிறேன்.
தேவை துணிவான நேர்மையான சுயசிந்தனை - சுய சுத்திகரிப்பு
இனி வரும் தேர்தல்களில் திமுக பெரும் வெற்றிகளை பெறும்
அதன் மூலம் திமுக நிறைவேற்றிய நலத்திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.
தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தைகள் குறைந்தால் தொண்டர்கள் ஒருவரோடு ஒருவர் சிறு சிறு விடயங்களில் எல்லாம் மோதிக்கொண்டு தேர்தல் வெற்றிகளை தகர்த்து விடுவார்கள்.
சாதாரண மக்களோடு பேசிப்பழக-
மக்களை நேசிப்பவர்கள் ஏராளமாக உள்ளனர் - திமுவில் உள்ளனர்
அவர்களை பேசவிடுங்கள் See less See less

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக