![]() |
Dev JB : நான் திரு DKS, இப்போதைய கர்நாடகா முதலமைச்சரை 4-5 முறை நேரில் பார்த்திருக்கிறேன். பேசியிருக்கிறேன். பேசுவதை கேட்டிருக்கிறேன்.
பேசும் போது அனைவரையும் கேட்க வைக்கும் ஆற்றல் உள்ளவர். பொம்மையின் போன அரசை 40% கமிஷன் அரசுனு கூட சொல்லியிருக்கிறார்.
ஆனால் யாரையும் இன்சல்ட்லாம் செய்து நான் பார்த்ததில்லை.
எதுக்கு ஓப்பனாக ரோஸ்ட் பண்றார்னு கூட சொல்லமுடியாமல் கேவலமாக பேசறார்னு தெர்ல. சென்னையிலிருப்பவர் இதுவரை கர்நாடகாவில் இருக்கும் க வையோ அல்லது காங்கிரஸில் இருக்கும் கா வையோ கூட சொல்லாத போது... இம்மெஸ்சூர்டுங்கிறார். அதுவும் காங்கிரஸுக்கும் இன்றைய தமிழ்நாடு அரசுக்கும் சம்பந்தம் இல்லைங்கிறார்.
அவருடைய பொலிடிக்கல் ஸ்ட்ரேட்டஜி டீம் நமக்கு ஓரளவுக்கு தெரிந்தவர்கள்தான். கர்நாடகா தமிழர்களிடம் திமுகவுக்கு அதிக செல்வாக்கு இருப்பதாக ரிப்போர்ட் இருக்கு. திரு சித்தராமையா மீதான RSSன் தனியாத எரிச்சலை காதுபடவே கேட்டிருக்கிறேன். அவர் ஒரு வெளிப்படையான பகுத்தறிவுவாதி. திரு DKS மடத்துக்கு மடம் போகக்கூடியவர். மடாதிபதிகளையெல்லாம் வணங்கும் கேட்டகிரியில்தான் வருகிறார். ஆனால் 2023 தேர்தலில் மடாதிபதிகளை பிஜெபியை விட்டு பிரித்ததில் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார். அமித்ஷாவே வந்து கேம்ப் போட்டு மடம், மடமா போய் காலில் விழுந்தும் ... விரட்டி விட்டுட்டாங்க. அதாவது பா.பனர் அல்லாத மடங்கள் RSSலிருந்து தங்களை வேறுபடுத்தி காட்ட விரும்புகிறார்கள்னு எனக்கு தோணுது. மடங்களிலிருக்கும் ஆட்களோடு முற்றிலும் தொடர்பில்லாததால் எனது அனுமானம் மட்டுமே.
RSS, BJPயிடமிருந்து கர்நாடகா மக்களும், கர்நாடகா தமிழர்களும் தங்களை வேறுபடுத்தி காட்ட நினைக்கிறார்கள் என்பது கிரௌன்ட் ரிப்போர்ட்டாக திரு DKSக்கு போயிருக்கலாம். மாறாக இப்போதைய தமிழ்நாடு அரசை RSS மற்றும் பிஜெபியின் கொத்தடிமைகளாகத்தான் பார்க்கிறார்கள்னு நினைக்கிறேன்.
மோதிப்பார்க்க ரெடினு முதல் நாளே மேகதூது மூலமாக சவால் விட்டுட்டார். அங்கிருக்கும் ஆள்வோருக்கு இதெல்லாம் புரியுமானே எனக்கு தெர்ல. திமுக ஆண்ட 5 ஆண்டுகளும் இங்கு சின்னப் பிரச்சினை கூட இல்ல. நிலைமை இப்படியே தொடருமானு தெர்ல. ராகுல் காந்தி நேரடியாக தமிழ்நாட்டுக்கு வந்திருந்தாலும், அரசை ஆதரித்தாலும்.. 4-5 சில்லுண்டிகளைத்தவிர மீதி யாருக்கும் அதில் விருப்பமில்லைனு தெளிவாக சொல்கிறார்களா அல்லது இவ்வளவெல்லாம் யோசிக்கத்தேவையில்லை. தமிழ்நாடு தற்குறிகள் இப்போதைய சட்டம் & ஒழுங்கு சர்வநாசமோடு தமிழ்நாட்டையும் நாசப்படுத்துவதை மக்கள் பேசுவதை தவிர்க்க டைவர்சனா... பார்ப்போம்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக