ஞாயிறு, 31 மே, 2026

யாழ்ப்பாண பணிக்கர்களும் கேரள பணிக்கர்களும்

 ஒரு விளம்பரத்தில் யாழ்.திருநெல்வேலி பகுதியில் "பணிக்கர் வீதி"என்று உள்ளது ...இந்த "பணிக்கர்" பெயர் எங்கிருந்து வந்தது?..
Aiyoob Azmin
பணிக்கர், சோனகந்தோப்பு, காக்காக்கடை, அவுலியா வீதி
Maha Laxmi
பார்பனர்ல பணிக்கர் எனும் பிரிவு உள்ளது
Maha Laxmi
கேரளாவில் தான் பணிக்கர் பிரிவு பிரபலம்
 Annesley Ratnasingham
Maha Laxmi ...அதுதான் உண்மை - அதை தான் மற்றவர்களிடம் கேட்டிருக்கிறேன் ...."பணிக்கர்" என்பது கேரளாவில் உள்ள ஒரு சாதீய பிரிவு ..
Krishna Kannan
Annesley Ratnasingham யானை பராமரிக்கும் கேரளர்கள்
புகச்சோவ் புகச்சோவ்
பணிக்காரர். வேலைக்காரர்.
கேரளாவிலிருந்து குடியேறி ஈழமலையாளி என அறியப்பட்டவர்கள்.
கிபி 1138 லிருந்து சேரநாடு வேளாளர்களின் ஆட்சிக்கு மாறியது. அப்போதிருந்து கிபி 1729 வரையில் வேணாடாக பிரிந்நிருந்தபோதும் வேளிர் குடியாகவே இருந்ததால், இலங்கைத்தீவில் அதிகமாக குடியேறினர். அதனால்தான் ஈழத்தமிழுக்கும் மலையாளத்திற்கும் நெருங்கிய பேச்சுவழக்கு தமிழ் உச்சரிப்பு உண்டு.
பிரபாகரனின் தந்தையுடைய பூர்வீகமும் கேரளம்தான். வேலுப்பிள்ளை திருமேனி என்பதில் திருமேனி என்ற விழிச்சொல் கேரள நாடுவாழிகள் எனப்படும் தம்புரான்களுடையதாகும்

புகச்சோவ் புகச்சோவ் source?

புகச்சோவ் புகச்சோவ்
Kiruthigan Kuhendran புரொபசர் வெள்ளநாடு ராமச்சந்திரனோட ஆய்வுகள்.

Kulitalai Mano
மலையாளத்திலிருந்து

Annesley Ratnasingham
Kulitalai Mano ..yes.

Manivannan Manivannan
பணிக்கர் என்றால் என்ன?..

Annesley Ratnasingham
Manivannan Manivannan ..."பணிக்கர்" என்பது கேரளாவில் உள்ள ஒரு சாதீய பிரிவு ..

Sivananthan Muthulingam
Manivannan Manivannan பணி செய்பவர்கள். நாயர்களின் கீழ் வேலை செய்பவர்கள்.

Nagendhrann Nakha
கேரளாவை சார்ந்த ஒரு சமூகம் பணிக்கர். யானையை அடக்கியாள்வதில் இவர்கள் வல்லவர்கள்
தமிழர் பகுதிகளில் தமிழர்களாக வாழ்கிறார்கள்.
வேலப் பணிக்கர் மனைவி தான் அரியாத்தை (முல்லைத்தீவு மாவட்டத்தில் இவரது பெயரால்
பெண் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது)
இலங்கை முஸ்லிம்களிலும் பணிக்கர் சமூகம் உள்ளது யானை பாகனுடன் வெளியிடப்பட்டிருக்கும் இலங்கை ஆயிரம் ரூபாய் தாளில் உள்ளவர் ஒரு இஸ்லாமிய பணிக்கர் ( எழுத்தாளர் ஷர்மிளா சையத் பணிக்கரின் பேத்தி என்ற ஒரு நாவலை எழுதி இருக்கிறார்)
சிங்கள பணிக்கர்களும் இருக்கிறார்கள்

Valli Radha Mano
எனது மாமாவின் காணி உறுதி பத்திரத்தில் அந்த காணியின் பெயர் பணிக்கன் வளவு

Nagendhrann Nakha
May be an image of text that says "விருது விழா ប பெண் சாதனையாளருக்கான அரியாத்தை விருது 2026 Εξεάκί iii திகதி 19.05.2026 19.05. .2026 செவ்வாய்க்கிழமை முமை நேரம் 01:30 PM இடம் பண்டார பண்டாரவன்னியன் வன்னியன் மாநாட்டு மண்டபம் மாவட்ட் செயலகம், முல்லைத்திவு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்! Organized by: Distric DistrictSecretariat, Secretariat, Mullaitivu"

Valli Radha Mano
எனது மாமாவின் காணி உறுதி பத்திரத்தில் அந்த காணியின் பெயர் பணிக்கன் வளவு

 Nagendhrann Nakha
May be an image of money and text that says "BANKNOTEWORLD AUTHENTIC BANKNOTES BANKNOTE SPECIFICATIONS Central Bank: Central Bank of Sri Lanka Denomination: 1,000 Rupees Year Condition: 2006 /Uncirculated Serial Number: G/244 709316 TAP Trust-Authenticate-Protect Trust. Authenticate •Protect 1000 ලංකා මහා බැකු 244 709316 RUPEES රුපියල් දාහයි 0 ONN デカフッビ 1000 244 24709316 Prove ProveYourOwnership Your Ownership VERIFIED SECURITY FEATURES Dimensions: 157 57x7 x78m mm holding whip with electrotype sword; Cornerstones 3mm StarChrome windowed: security thread SRI LANKA RS 1000 canetbe pиBnapeBeo 34423425"


Nagendhrann Nakha
May be an illustration of ‎text that says "‎11:08 பணிக்கர் பேத்தி பமஜ் ப்ுத்தி ஊடர்மளாய்மித் ஊடர்மீளா செய்மித் நூலக எண் ஆசிரியர் 84378 நூல் வகை ஸர்மிளா ஸெய்யித் தமிழ் நாவல்கள் தமிழ் காலச்சுவடு 2018 108 மொழி வெளியீட்டாளர் வெளியீட்டாண்டு பக்கங்கள் வாசிக்க பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை :.د_ا_ان จค่าจรควาราใเร่ากล่ิกล่ามาคาใ ""سال__ا" ሀራጠበይ‎"‎

Manuel Mangalanesan
எங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ஆயிரம் (இலங்கை) ரூபாய் நாணயத்தாளில் பிரசுரிக்கப்பட்டுள்ள யானையுடன் பக்கத்தில் தொப்பி அணிந்து காணப்படுபவருக்கு பின்னால் ஒரு ஆச்சரியமான கதை உண்டென்று யாருக்காவது கற்பனை பண்ணமுடியுமா அந்த யானையும் அதனருகே தொப்பி அணிந்து நிற்கும் மனிதனும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்றும் அந்த மனிதன் ஒரு முஸ்லிம் என்றும் ஆம் அந்த கொம்பன் யானையும் மனிதனும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்களே. அந்த மனிதர் மாட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏறாவூர் என்ற இடத்தை சேர்ந்த உமறு லெப்பை பணிக்கர்; அந்த நாணயத்தாளிலுள்ள கொம்பன் யானை 1925ம் ஆண்டு ஏறாவூர் காட்டுபகுதியில் பிடிக்கப்பட்டு வளர்க்கப்பட்டதாகும்.
உமர் லெப்பை பணிக்கர் இந்த கொம்பன் யானையை தலதா மாளிகாவுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். சிறிது காலத்திற்குள் அந்த யானை அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் அது அங்கிருந்து ஏறாவூருக்கு அவரை (உமர் லெப்பை பனிக்கரை) தேடிச் சென்றதாக சொல்லப்படுகிறது. அந்த யானையை மீண்டும் அங்கிருந்து அவர் மீண்டும் தலதா மாளிகாவுக்கு கொண்டு வந்து கொடுத்தார்.
ஜனாதிபதி ஜே .ஆர். ஜெயவர்த்தனா அந்த கொம்பன் யானையின் நீண்ட கால சேவைக்காக அதனை கவுரவிக்கும் முகமாக யானையை தேசிய சொத்தாக பிரகடணப்படுத்தினார்.ராஜா என்று பெயரிடப்பட்ட இந்த கொம்பன் யானை கண்டியில் எசல பெரஹர பவனிகளின் போது அலங்கரித்தமைக்காக தேசிய பிரபலம் பெற்றதுடன் தேசிய ரீதியிலும் கவுரவிக்கப்பட்டது,
தலதா மாளிகாவையில் சேவையாற்றிய கொம்பன் யானை ராஜா தனக்கு மட்டுமல்ல தன்னை அன்பளிப்பு செய்த நபருக்கும் அவரது கிராமாமான ஏறாவூருக்கும் பிரபலத்தையும் கவுரவத்தையும் கொண்டு வந்து ஐம்பது வருடங்களுக்கு மாளிகாவையில் சேவையாற்றி 15 ஜூலை 1988ல் இறந்துபோனது.
அதன்பிறகு ஆட்சியிலுள்ள அரசு தலதா மாளிகாவுக்கு அந்த கொம்பன் யானையை தலதா மாளிகை பெற்றுக்கொள்ள காரன‌மான நபரை கவுரவிக்கவேண்டும் என்று தீர்மானித்தார்கள் , அதற்காக அந்த கொம்பன் யானையையும் அதற்கருகில் உமர் லெப்பை பணிக்கரையும் ஆயிரம் ரூபாய் தாளில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இதன் மூலம் ஏறாவூர் கிராமமும் கவுரமும் பெற்றது. இப்போதும் இவ்வாயிரம் ரூபாய் புழக்கத்தில் இருந்து வருகிற‌து.
காடுகளில் யானையை பிடித்து வளர்த்து பாரமான பொருட்கள் மூலப்பொருட்கள் என்பவற்றை எடுத்துச்செல்லும் அல்லது இடம் பெயரச் செய்யும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்கு விற்கின்றவர்களே பணிக்கர் எனப்படுகின்றனர் என்று சொல்லப்படுகிறது. அவர்களின் சந்ததியினர் இன்றும் “பணிக்கர் தத்தி” அல்லது “பணிக்கர் கத்தற” (பணிக்கர் குடும்பத்தினர் அல்லது பரம்பரை) என்று ஏறாவூரில் அடையாளப்படுத்தப்படுகின்றனர். ஏறாவூரில் அவர்களின் பெயரால் பணிக்கர் வீதி என்று ஒரு வீதி ஏறாவூரில் உள்ளது


Anthonypillay Ronyrajan
மலையாளம்

Balachandran Muthaiah
கேரளா மாநிலத்தில் பணிக்கர். இவர்கள் வியாபாரி. அந்தநாட்களில் வீடு வீடாக சென்று பொருட்களை விற்பr

Santhirapalan Saminathar
Annesley Ratnasingham யானை பிடித்து பழக்குபவர்களை பணிக்கர் என எமது கிராமத்தில் (முல்லைத்தீவு குமுளமுனை) நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்திருக்கிறார்கள். அந்த சாதியினர் பின்னர் பெரும்பாலும் ஏனைய சாதியுடன் கலந்து விட்டனர். அவர்களது வம்சத்தினர் தற்போதும் எமது அயல் கிராமத்தில் வசிக்கிறார்கள். பிற்காலத்தில் மீன் பிடித்தொழிலை செய்தார்கள். தற்போது விவசாயம் அரச உத்தியோகம் வியாபாரம் என பல துறையும் செய்கிறார்கள். இடைக்காலத்தில் மீன் பிடித்தமையால் கரையார் என்ற சொல் அவர்களுடன் ஒட்டிக்கொண்டது. தற்போது யாரும் பணிக்கர் சாதி எனக் கூறுவதில்லை.

Annesley Ratnasingham
Santhirapalan Saminathar
GIF by Red Bull

Sivananthan Muthulingam
Santhirapalan Saminathar "ஒருதலை ராகம்" என்ற தமிழ் படத்தின் நாயகன் சங்கர் தன்னை "சங்கர் பணிக்கர்" என்றே குறிப்பிடுவது வழக்கம்.

Shanmugalingam Jeyaseelan
யாழ்பாணத்தில் இருக்கும் மக்களில் நூற்றுக்கு எழுபத்தைந்து வீதம் இந்தியாவின் தெலுங்கு மக்களே

Annesley Ratnasingham
Shanmugalingam Jeyaseelan 👍

Kallar Velam
Shanmugalingam Jeyaseelan ஓரளவுதான் உண்மை.சீமோன் காசி செட்டியினால் ஆங்கில அரசுக்காக எடுக்கப்பட்ட குடிசன மதிப்பீட்டில் அப்படி ஒன்றும் இல்லை. தெலுங்கு வடுகர் உருமறைப்பு செய்து வெள்ளாளர் என்ற பேரில் இன்றும் வாழ்கிறார்கள்.

Shankar Lal
All Tamils in Sri Lanka are Malayalees, including Prabhakaran.
குமார் குமார்
கேரளா .. மலையாளம்
தமிழில் வேலைக் காரர்

Krish Marudhu
கேரளம்.

Ganeshalingam Kanapathipillai
பணிக்கர் என்பது ஒரு கடவுளின் பெயர்
அண்ணமார்...வைரவர் போல

Kingsley Ratnasingham
According to Governor Frederick North, a civilian governor appointed by the Crown in Ceylon, the Tamils of the North were branded "Malabaris" during his tenure. It's a pity that the written records in the from of many books were incinerated at the Jaffna library.

Charles J Forman
திருவனந்தபுரத்தில் ஒரு இடத்தின் பெயர் Pettah. (பேட்டா)

 
Thanam Vettivelu
”பணிக்கர்” என்பது ஒரு சாதியா? அல்லது ஒரு தனிநபரின் பெயரா?
"பணிக்கர்" (Panicker / Panikkar) என்பது ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகங்களின் பின்னணிப் பெயராகவும் (சாதி அல்லது பட்டப்பெயர்), அதே சமயம் பல தனிநபர்களின் பெயராகவும் விளங்குகிறது.
இதன் பின்னணியை சுருக்கமாக கீழே காண்போம்:
1. சாதி / பட்டப்பெயர் (Caste / Title)
வரலாற்று ரீதியாக, இது கேரளா மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் வாழ்ந்த சில சமூகங்களுக்கு வழங்கப்பட்ட ஒரு பட்டப்பெயர் (Title) ஆகும். பின்னர் இது ஒரு சாதிப் பெயராகவோ அல்லது குடும்பப் பெயராகவோ நிலைபெற்றது.
பொருள்: "பணி" (வேலை அல்லது கடமை) செய்பவர் என்று இதற்குப் பொருள். குறிப்பாக, களரிப்பயிற்று போன்ற போர்க்கலைகளைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கும், அரசப்படைகளில் தளபதிகளாக இருந்தவர்களுக்கும் இந்தப் பட்டம் வழங்கப்பட்டது.
சமூகங்கள்: கேரளாவில் நாயர் (Nair), ஈழவா (Ezhava) மற்றும் கிறித்தவ (Syrian Christian) சமூகங்களைச் சேர்ந்த சில குடும்பங்களுக்கும், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் சில சமூகத்தினருக்கும் இந்தப் பட்டப்பெயர் பாரம்பரியமாக இருந்து வருகிறது.
2. தனிநபர்களின் பெயர் (Personal Name)
இந்தப் பின்னணியில் இருந்து வந்தவர்கள் தங்களுடைய குடும்பப் பெயராக அல்லது அடைமொழியாக "பணிக்கர்" என்பதைப் பயன்படுத்துவதால், அது பல முக்கிய தனிநபர்களின் பெயராக அறியப்படுகிறது.
சில முக்கிய ஆளுமைகள்:
கே. எம். பணிக்கர் (K. M. Panikkar): இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர், ராஜதந்திரி மற்றும் எழுத்தாளர்.
ஞாநி பணிக்கர்: தமிழ்நாட்டின் முன்னணி எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் (ஞாநி சங்கரன்).
காவாலம் நாராயண பணிக்கர்: புகழ்பெற்ற மலையாள நாடக ஆசிரியர் மற்றும் கவிஞர்.
சுருக்கமாகச் சொன்னால்: "பணிக்கர்" என்பது அடிப்படையில் ஒரு வரலாற்றுப் பட்டப்பெயர் (சமூகம் சார்ந்த அடையாளம்). ஆனால், இன்று அது பல தனிநபர்களின் பெயரோடு இணைந்து, அவர்களின் அடையாளப் பெயராகவே பரவலாக அறியப்படுகிறது..... ஜெமினை


Satha Selvanandan
பணிக்கர் என்போர் யானை கட்டி வளர்க்கும் தொழில் செய்பவர்கள். முல்லைத்தீவு வரலாற்றுப் பதிவுகளில் விபரமாக உண்டு.

Manoharan Kanapathipillai
கேரளாவில் இருந்து என்று நினைக்கிறேன்.

Kallar Velam
பணிக்கர் என்பது பட்டம் என தெரிகிறது.இது தமிழ்நாட்டில் சாணார் என்ற நாடாருக்கும் தேவேந்திரகுலவேளாளர் எனும் பள்ளருக்கும்(அவர்களின் உட்பிரிவு ) உண்டு.மலையாளிகளுக்கும் உண்டு.சாணார்,பள்ளர் செல்வாக்குகள் யாழ்மாவட்டத்தில் ஒழிக்கப்பட்ட பின் அவர்கள் மூலம் வைத்திருக்க வாய்ப்பு உண்டு.யாழ்ப்பாண சரித்திரத்தில் கோட்டைவாயில் பள்ளர் என தனிப்படைப்பிரிவும்,அவர்களின் உரிமைகளும் கூறப்பட்டுள்ளது.இந்த மூன்றிலும் இருந்து பணிக்கர் என்ற பெயர் நிலைத்திருக்கிறது என துணிந்து கூறலாம்.

Rubasangary Veerasingam Gnanasangary
ஆசாரியன்
படைக்கலம் , கூத்து முதலியன பயிற்றுவோன்
தலைமைக் கொற்றன்
தச்சன்
யானைப்பாகன்
நாவிதர் தலைவன்
நச்சுத்தீர்க்கும் மருத்துவன்
8 படைத்தலைவன்
சாராயங் காய்ச்சுகிறவன்
களரி ஆசான் - In Kerala: Panicker is a prominent title used by members of the Nair community, originally tracing back to martial instructors or commanders under local kings.
In Tamil Nadu: It is used as a title or community identifier by certain groups in southern districts (like Kanyakumari and Tirunelveli) and among the Tamil diaspora in northern Sri Lanka (Jaffna and Batticaloa), often linked to traditional teaching, agriculture, or weaving trades.

Thiru Thiruchelvam
Malayalam connection.

Satha Selvanandan
வேழம் படுத்த வீராங்கனை அரியாத்தையின் கணவன் வேலப்பணிக்கன் எனவும் அரியாத்தையை அடைய ஆசைப்பட்டவன் நீலப்பணிக்கன் எனவும் அரியாத்தையால் கட்டப்பட்ட கொம்பன் யானை முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலய மாமரத்தில் கட்டி வைக்கப்பட்டது.இந்த பொறாமையில் வேலப்பணிக்கன் நஞ்சூட்டி கொலை செய்யப்பட அரியாத்தை உடன்கட்டை ஏறியதனால் யானையை மாற்றிக்கட்ட ஆளின்றி அந்த இடத்திலேயே யானையும் இறந்து போன வரலாறு உண்டு

Milton Mahen Masil Mani
Satha Selvanandan கரிபட்ட முறிப்பு, மணவாளன் பட்ட முறிப்பு ஏதாவது தொடர்பு உண்டா என அறியலாமா?

Sam Khrubha
பணிக்கர், நாயர், மேனன், குருப்பு, பிள்ளை எல்லாம் கேரள சாதிப் பெயர்கள்

Mubarak Muazzam
Rudane Zahir Mohamed Saakir Amjad Ahamed


Ganeshalingam Kanapathipillai
சாதி குறைந்த வேர்களின் காவற்தெய்வம் பணிக்கர்

Roger Srivasan
😀😀😀. Unequivocally, it would have been ‘ Paniyar veethi’
An inadvertent solecism crept into the text.

Thevarasha Pramilan
யாழ்ப்பாணக் குடாநாட்டில் பனிக்கர் என்பது பொதுவாக இரண்டு முக்கிய அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது:
​1. பாரம்பரியத் தொழில் சார்ந்த அடையாளம் (ஆனைப் பனிக்கர்)
​யாழ்ப்பாண வரலாற்றில் மற்றும் ஈழத்துச் சூழலில் "ஆனைப் பனிக்கர்" (யானைப்பாகர்கள் / யானை பிடிப்பவர்கள்) என்ற சொல் மிகவும் பிரசித்தி பெற்றது.
​வன்னி மற்றும் அடம்பன் காட்டுப் பகுதிகளில் யானைகளைப் பிடிப்பதிலும், பழக்குவதிலும், அவற்றைப் பராமரிப்பதிலும் நிபுணத்துவம் பெற்றவர்கள் "பனிக்கர்" என்று அழைக்கப்பட்டனர்.
​போர்த்துக்கேயர், டச்சுக்காரர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், யாழ்ப்பாணத்திலிருந்து யானைகள் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டன. அந்தப் பணிகளில் இந்த பனிக்கர்கள் முக்கியப் பங்காற்றினர்.
​2. சமூகப் படிநிலை மற்றும் சாதிப் பெயர்
​யாழ்ப்பாணத்துக்கே உரித்தான சமூகக் கட்டமைப்பில், பனிக்கர் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவின் பெயராகவும் நிலவி வருகிறது.
​இவர்கள் பாரம்பரியமாக மங்கலக் குடிமக்கள் (நாவிதர்) சமூகத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
​யாழ்ப்பாணத்துச் சமூக வழக்கின்படி, மங்கல காரியங்கள் (திருமணம் போன்ற சுபச் சடங்குகள்) மற்றும் மரணச் சடங்குகளில் இவர்களது பங்களிப்பு இன்றியமையாததாக இருந்தது. இதன் காரணமாக, இச்சமூகத்தின் பெரியவர்களை அல்லது தலைவர்களை மரியாதையின் நிமித்தமாக "பனிக்கர்" என்று அழைக்கும் வழக்கம் உருவானது.
​3. மருத்துவ மற்றும் கலைப் பாரம்பரியம்
​யாழ்ப்பாணத்து கிராமியச் சூழலில், பாரம்பரிய நாட்டு வைத்தியம் (சித்தா/பரம்பரை மருத்துவம்) செய்பவர்களையும், பறை மேளக் கலை மற்றும் பாரம்பரியக் கூத்துகளில் அண்ணாவியார்களாக (ஆசிரியர்களாக) விளங்கிய சிலரையும் மதிப்பளிக்கும் பொருட்டு "பனிக்கர்" என்ற பட்டப் பெயரால் அழைக்கும் வழக்கம் சில பகுதிகளில் இருந்தது.
​சுருக்கமாகச் சொன்னால், கேரளா போன்ற இடங்களில் இது ஒரு தற்காப்புக் கலை சார்ந்த அல்லது சோதிடப் பட்டமாக இருக்கும் வேளையில், யாழ்ப்பாணத்தில் இது யானை பழக்கும் கலை, நாட்டு மருத்துவம் மற்றும் சடங்கு சார்ந்த சமூகத் தொழில் ஆகியவற்றோடு தொடர்புடைய ஒரு பெயராகவே வரலாற்று ரீதியாகப் பார்க்கப்படுகிறது.

Mohamed Saakir
யானைகளை காட்டில் பிடித்து பணி செய்யப் பழக்குபவர்கள் பணிக்கர்கள்.
.
அதே வேளை காட்டு மாடுகளை பிடித்து பயிற்றுவிப்பவர்கள் மாட்டுப் பணிக்கர்கள் என்றும் அழைக்கப்படுவதுண்டு.
கிழக்கிலங்கையில் முஸ்லிம்களிடையேயுள்ள தாய்வழிக்குடிகளில் பணிக்கனார் குடி என்ற குடியும் காணப்படுகின்றது.
யாழ்ப்பாண ஆறாம் பராக்கிரமபாகுவின் சுவீகார புத்திரரான செண்பகப் பெருமாள் எனப்படும் சப்புமல் குமாரன் மலையாளத்தைச் சேர்ந்த பணிக்கர் குலத்தை சேர்ந்தவர். இவரே நல்லூர் கோவிலை புனருத்தாரணம் செய்ததாக அறியப்படுகின்றார்.
குறித்தவீதியில் பணிக்கர் படைவீரர்கள் அல்லது புகழ்பெற்ற பணிக்கர்கள் வாழ்திருக்கக்கூடும்

Yogarajah Kannan
அது பணிக்கர் லேன் அல்ல வளவு

Sancheevi Sivakumar
பணிக்கர் என்பது மட்டக்களப்பு முக்குகர் சாதியில் உள்ள ஒரு குடியாகும். பண்டைய யானை கட்டுதல், போர்வீரர் ஆகியவற்றில் இவர்கள் ஈடுபட்டவர்கள்.

Ebby SamRaj
மலையாள தேசியம் அமைக்க
குரல் கொடுக்க வேண்டும் 💯


Roger Srivasan
😀😀😀 Million Ganeshalingham presumably calls a Spade , a Spade…😀
For the life of me I can’t see anything wrong with that!

Kana Sivapragasam
மிகவும் ஆழமான பதிவுகள். எல்லோருக்கும் நன்றிகள.

Kalai AruviMs
யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் உள்ள "பணிக்கர் வீதி" (Panikkar Road) என்ற பெயர், வரலாற்று ரீதியாக ஒரு குறிப்பிட்ட தொழில்முறைப் பட்டம் அல்லது சாதிப் பட்டப் பெயரிலிருந்து உருவானதாகும். தமிழ் மற்றும் மலையாள (கேரள) வரலாற்றில் "பணிக்கர்" என்ற சொல்லுக்கு ஆழமான வரலாற்றுப் பின்னணி உண்டு.
பணிக்கர்" என்ற சொல் பழங்காலத்தில் ஆயுதப் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களைக் (Fencing Masters / Martial Arts Teachers) குறிக்கப் பயன்பட்டது.தென்னிந்தியாவில் (குறிப்பாக கேரளா மற்றும் தமிழகத்தின் தென் பகுதிகளில்) அரசர்களுக்குப் போர்ப் பயிற்சி மற்றும் களரி (Kalaripayattu) கற்றுக்கொடுத்த ஆசான்களுக்கு பாண்டிய மன்னர்களாலும் சேர மன்னர்களாலும் "பணிக்கர்" என்ற பட்டப் பெயர் வழங்கப்பட்டது.
யாழ்ப்பாண வரலாற்று ஆவணங்களின்படி, யாழ்ப்பாண அரசர்களின் படைகளில் "பணிக்கர்" எனப்படும் போர்வீரர்களும், படைத் தளபதிகளும் பணியாற்றினர்.குறிப்பாக, கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி, நல்லூர் கந்தசுவாமி கோயிலைப் புதுப்பித்துக் கட்டிய செண்பகப் பெருமாள் (சப்புமல் குமாரயா), பிறப்பால் கேரளாவைச் சேர்ந்த ஒரு பணிக்கர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று வரலாற்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இத்தகைய தளபதிகள் அல்லது ஆசான்கள் வாழ்ந்த இடங்கள் அவர்களின் பெயரால் அழைக்கப்படலாயின.
பணிக்கர்)இலங்கையின் வன்னி மற்றும் கிழக்கு மாகாணங்களில், அடர்ந்த காடுகளில் இருந்து காட்டு யானைகளைப் பிடித்து, அவற்றைப் போருக்கும் சுமை தூக்குவதற்கும் பழக்கும் நிபுணத்துவம் பெற்றவர்கள் "யானைப் பணிக்கர்" என்று அழைக்கப்பட்டனர்.அதேபோல, கால்நடைகளைப் பழக்குபவர்கள் "மாட்டுப் பணிக்கர்கள்" எனப்பட்டனர். இந்தத் தொழில்முறை நிபுணத்துவக் குடும்பங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் குடியேறியிருந்தனர்.
" என்றால் வேலை அல்லது சேவை. சமூகத்திற்குச் சேவை செய்த பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவர்கள் (வைத்தியர்கள்) மற்றும் சோதிட நிபுணர்களுக்கும் இப்பட்டப் பெயர் வழங்கப்பட்டது.
சுருக்கமாகக் கூறின்:திருநெல்வேலிப் பகுதியில் முற்காலத்தில் வசித்த போர்ப் பயிற்சி ஆசான்கள், அரச தளபதிகள் அல்லது பாரம்பரிய வைத்தியம்/யானை பழக்கும் தொழிலில் சிறந்த விளங்கிய "பணிக்கர்" பட்டம் கொண்ட முன்னோர்களின் நினைவாகவே இப்பகுதிக்கு "பணிக்கர் வீதி" (அல்லது பணிக்கர் ஒழுங்கை) என்ற பெயர் நிலைத்துவிட்டது.
யாழ்ப்பாணம் திருநெல்வேலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள நல்லூர், கோண்டாவில் ஆகிய பகுதிகள் யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாகவும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மையங்களாகவும் விளங்கியவை. இதனால் இப்பகுதிகளில் உள்ள பல வீதிகள் மற்றும் கிராமங்களின் பெயர்கள் இதுபோல் பல சுவாரசியமான வரலாற்றைக் கொண்டுள்ளன..
Arunan Meenachchisundaram.

Milton Mahen Masil Mani
பணிக்கர் (Panikkar/Panicker) என்பது வரலாற்று ரீதியாக கேரளாவில் சில சமூகங்களுடன் தொடர்புடைய ஒரு பட்டம் (title) அல்லது குடும்பப் பெயர் (surname) ஆகும். இது ஓரளவு சாதி சார்ந்த அடையாளமாக கருதப்பட்டாலும், ஒரே ஒரு குறிப்பிட்ட சாதியை மட்டும் குறிக்காது.
வரலாற்றில், களரிப்பயற்று (Kalaripayattu) ஆசிரியர்கள், போர்ப் பயிற்சியாளர்கள் மற்றும் மதிப்புமிக்க நபர்களுக்கு “பணிக்கர்” என்ற பட்டம் வழங்கப்பட்டது. பின்னர் அது குடும்பப் பெயராகப் பரவியது.
இன்றைய காலத்தில், “பணிக்கர்” என்ற குடும்பப் பெயரை வைத்திருப்பதால் மட்டும் ஒருவரின் சாதியைத் துல்லியமாகக் கூற முடியாது. அது பல குடும்பங்களில் மரபு வழியாக வந்த ஒரு பெயராகவே பயன்படுத்தப்படுகிறது.
எளிமையாகச் சொன்னால்:
“பணிக்கர்” என்பது வரலாற்றில் சில சமூகங்களுடன் தொடர்புடைய பட்டம்/குடும்பப் பெயர்; ஆனால் இன்று அது ஒருவரின் சாதியை உறுதியாக நிரூபிக்கும் அடையாளம் அல்ல.
இலங்கையில் “பணிக்கர்” (Panikkar/Panicker) என்ற பெயர் பெரும்பாலும் மலையாள வம்சாவளி அல்லது கேரளாவுடன் வரலாற்றுத் தொடர்புடைய குடும்பங்களில் காணப்படலாம். ஆனால் இலங்கையில் இது இந்தியாவின் கேரளா போல ஒரு பரவலான சாதிப் பட்டமாகப் பயன்படுத்தப்படுவதில்லை.
இலங்கைத் தமிழர் சமூகத்தில் “பணிக்கர்” என்ற சொல்லுக்கு சில சமயங்களில் ஆசிரியர், பயிற்சியாளர், தொழில்நுட்பத் திறமை கொண்டவர் போன்ற பொருள்களுடன் தொடர்புடைய வரலாற்றுப் பயன்பாடுகளும் இருந்துள்ளன. சில பகுதிகளில் இது ஒரு குடும்பப் பெயராகவும் காணப்படுகிறது.
எனவே, இலங்கையில் யாராவது “பணிக்கர்” என்ற குடும்பப் பெயரை வைத்திருந்தால்:
* அது கேரளா மரபுத் தொடர்பைக் குறிக்கலாம்.
* அல்லது பழைய பட்டம்/குடும்பப் பெயராக இருக்கலாம்.
* அந்தப் பெயரை மட்டும் வைத்து அவர்களின் சாதியை உறுதியாகக் கூற முடியாது.
* யாழ்ப்பாணம்: “பணிக்கர்” என்பது சில குடும்பங்களில் மரபுவழி குடும்பப் பெயராகக் காணப்படுகிறது. இதை மட்டும் வைத்து ஒரு குறிப்பிட்ட சாதியை அடையாளம் காண்பது சரியாகாது.
* மட்டக்களப்பு: வரலாற்று ரீதியாக சில தொழில், பயிற்சி அல்லது சமூகப் பொறுப்புகளுடன் தொடர்புடைய பட்டமாக இருந்திருக்கலாம். பின்னர் குடும்பப் பெயராக மாறியிருக்கலாம்.
* திருகோணமலை: தமிழ், மலையாள மற்றும் பிற சமூகங்களின் கலவையான வரலாற்று பின்னணி காரணமாக, “பணிக்கர்” என்ற பெயர் பல்வேறு குடும்பங்களில் காணப்படலாம். இதற்கும் ஒரு குறிப்பிட்ட சாதியுடன் நேரடி, உறுதியான தொடர்பு உள்ளது என்று கூற முடியாது.
நன்றி: ChatGPT

கருத்துகள் இல்லை: