வியாழன், 4 ஜூன், 2026

ஆட்டோ மீது மரம் முறிந்து விழுந்து மாணவன் உட்பட மூவர் மரணம்! - நாவலப்பிட்டியில் அதிகாரிகளின் அலட்சியம்

 ceylonmirror.net :  ஆட்டோ மீது மரம் முறிந்து விழுந்து மாணவன் உட்பட மூவர் மரணம்! – நாவலப்பிட்டியில்.
கண்டி, நாவலப்பிட்டி, மாப்பாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஓட்டோ மீது பிரதான வீதிக்கு அருகில் இருந்த பெரிய மரமொன்று முறிந்து விழுந்ததில், பாடசாலை மாணவன் உட்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை 6:45 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதுடன், இதில் ஒரு பாடசாலை மாணவன், அவரது தாய் மற்றும் மற்றொரு பெண்ணே உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த விபத்திலிருந்து ஓட்டோவின் சாரதி அதிர்ஷ்டவசமாக எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளார்.



விபத்து நிகழ்ந்ததைத் தொடர்ந்து, நாவலப்பிட்டி பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மரத்தின் இடிபாடுகளுக்குள் சிக்குண்டிருந்த மூவரின் சடலங்களையும் மீட்டு, நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு சேர்த்துள்ளனர்.

நெடுங்காலமாக மக்கிப்போயிருந்த குறித்த யூக்கலிப்டஸ் மரத்தை வெட்டி அகற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பலமுறை அறிவித்தும், அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாததாலேயே இந்தத் துயரமான விபத்து நேரிட்டுள்ளது என்று பிரதேச மக்கள் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இந்த விபத்துத் தொடர்பாக நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Video Player

கருத்துகள் இல்லை: