Vasu Sumathi : நேற்று ராஜஸ்தானில், இஸ்லாமியர்கள் பற்றி அவதூறு கருத்துகளை பரப்பிய மோடியை சமூக வலைத்தளங்களிலும், பத்திரிக்கைகளிலும் மக்கள் வச்சு வெளுத்து விட்டார்கள்…!
ஒரே நாளில் 17,400 பேர், மோடியின் வெறுப்பு பேச்சுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஈமெயில் அனுப்பியுள்ளார்கள்.
காங்கிரஸ் தரப்பில் அபிஷேக் சிங்வி உட்பட ஒரு குழு நேரில் சென்று 16 விதிமீறல்கள் அடங்கிய புகாரை இன்று சமர்ப்பித்தனர்.
மோடியின் வெறுப்பு பேச்சு, பாஜகவின் தேர்தல் வெற்றியை வெகுவாக பாதிக்கும் என்று பல கருத்து கணிப்பாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் உண்மையிலேயே பயந்த மோடி, இன்று துளியும் வெட்கமில்லாமல் உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அப்படியே ஒரு அந்தர்பல்டி அடித்தார்.
நேற்று இஸ்லாமியர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று அழைத்துவிட்டு இன்று இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்காக தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் என்று வாய் கூசாமல் சொல்லுகிறார்.
மேலும் முத்தலாக்கை ரத்து செய்தோம், ஹஜ் கோட்டா அதிகரித்துள்ளோம், சவூதி இளவரசரிடம் பேசி பெண்கள் தனியாக ஹஜ் பயணம் மேற்கொள்ள அவர்தான் ஏற்பாடு செய்தார் எனும் மிகப்பெரிய வடையை சுட்டார்.
இதற்கும் மோடிக்கும் துளியும் சம்மந்தம் இல்லை. சவூதி அரேபியாவில் பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 2022லிருந்து பெண்கள் துணையின்றி பயணம் செய்யலாம் என்ற சட்டம் அந்த நாட்டு இளவரசரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
பாஜக மீது கடுப்பில் இருக்கும் ராஜ்புட் இன மக்கள் வசிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் இஸ்லாமியர் வெறுப்பை உமிழ்ந்து அவர்களிடம் ஓட்டு பிச்சை.
அடுத்த நாள் இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் அலிகாரில் இஸ்லாமியர்களிடம் பொய் பேசி ஓட்டு பிச்சை.
பச்சோந்தி இவரிடம் பிச்சை தான் எடுக்க வேண்டும்.
எப்படிபட்ட மனுசன் இவர்…?!
Vasu Sumathi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக