tamil.oneindia.com - Shyamsundar :சென்னை: கிட்டத்தட்ட 10 அல்லது 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக 3ம் இடம் செல்வதற்கான சூழ்நிலைகள் இருப்பதாக தெரிகிறது என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார். அதிமுக சரியாக வேட்பாளர் போடவில்லை, என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுக்க லோக்சபா தேர்தல் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கியது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை 2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடந்தது.
Huge problem for AIADMK in 10 seats in Tamil nadu Lok Sabha Elections 2024
மொத்தமுள்ள 534 லோக்சபா தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடந்தது. தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
பேட்டி: அதில், திமுக அவரவர் தொகுதிகளில் தீவிரமாக வேலை பார்த்து இருக்கிறது. சென்னை தவிர திமுக நேரடியாக போட்டியிட்ட இடங்களில் நன்றாக பர்பார்ம் செய்து இருக்கிறது. சென்னையில் வாக்குப்பதிவு குறைவது வழக்கம். நகரங்களில் இருப்பவர்கள் ஏனோ வாக்களிப்பதை விரும்பவில்லை. இது சென்னைக்கு மட்டுமல்ல. மற்ற மாநிலங்களிலும் நடக்கிறது. கிராமங்களில் தேர்தல்கள் திருவிழா போல நடக்கும்.
சென்னையில் நிலைமை அப்படி இல்லை. அதனால் மக்கள் வாக்களிப்பதில் பெரிதாக ஆர்வம் காட்டுவது இல்லை. தர்மபுரியில் தொடர்ந்து வாக்கு சதவிகிதம் அதிகரிக்க காரணம் வன்னியர்கள். வன்னியர்கள் அங்கே அதிகம் உள்ளனர். அப்படி இருக்க வன்னியர்கள் வாக்குகள் விழுந்தால் வன்னியர்கள் இல்லாத வாக்குகள் அதிகம் விழும். வன்னியர்கள் வாக்குகள் விழுகிறது என்பதால் அதை முறியடிக்க வன்னியர்கள் அல்லாதவர்கள் அதிகம் வாக்களிப்பார்கள்.
வன்னியர்கள் ஒன்று திரள்வதால் நான் வன்னியர்கள் அங்கே ஒன்று திரள்கிறார்கள். இதனால்தான் அங்கே வாக்குகள் அதிகம் பதிவாகிறது. தேர்தல் முடிவுகளும் அதிகம் மாறுகிறது. கடந்த முறை லோக்சபா தேர்தலில் திமுக ஜெயிக்க இப்படி நான் வன்னியர்களும் வாக்களித்ததே காரணம். நான் சொல்கிறேன். இந்த முறை பாமகவிற்கு வாக்குகள் கன்சாலிடேட் ஆகவில்லை.
ஸ்டாலினின் வீட்டுகிட்டயே இந்த அக்கிரமம்.. திமுக போட்ட கள்ள ஓட்டு? புட்டு புட்டு வைத்த தமிழக பாஜகஸ்டாலினின் வீட்டுகிட்டயே இந்த அக்கிரமம்.. திமுக போட்ட கள்ள ஓட்டு? புட்டு புட்டு வைத்த தமிழக பாஜக
10 ஆண்டு பாஜக ஆட்சிக்கு எதிரான மனோபாவமும் இங்கே இருக்கிறது. அது பாஜகவிற்கு எதிராக இருக்கும். மோடி வேண்டுமா? வேண்டாமா? என்பதே நிலைமை. பாஜகவின் வேட்பாளர் தேர்வு சிறப்பாக இருந்தது. அவர்கள் எல்லோரும் பிரபலம். ஆனால் அது முடிவுகளை மாற்றுமா என்பது சந்தேகம்தான். பாஜகவின் அந்த 10 வேட்பாளர்கள் காரணமாக அதிமுக 3ம் இடத்திற்கு கூட சில இடங்களில் செல்லும். அது ஓரளவிற்கு உண்மையும் கூட.
மத்திய சென்னை, அரக்கோணம், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சை, கடலூர், ஸ்ரீபெரும்புதூர், புதுச்சேரி, நெல்லை,திருவண்ணாமலை, ஆகிய இடங்களில் அதிமுக 3ம் இடத்திற்கு செல்ல வாய்ப்புகள் உள்ளன. கள்ளக்குறிச்சி, பொள்ளாச்சி, வேலூர், திருச்சி, தேனியில் திமுக சந்தேகம் அடையும் தொகுதிகளாக உள்ளன. இங்கே எல்லாம் வெற்றி சாத்தியமா என்ற சந்தேகம் திமுகவிற்கு உள்ளது. ஆனால் தோல்வி அடையும் என்று உறுதியாக நினைக்கவில்லை, என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக