ஞாயிறு, 6 மார்ச், 2022

யாழ்ப்பாணத்தில் 1961இல் நடந்த சத்தியாக்கிரக போராட்டத்தில் பங்கேற்ற இலங்கை தி மு க தோழர்கள் .. வரலாறு


செல்லபுரம் வள்ளியம்மை
:  1961 இல்  யாழ்ப்பாணத்தில் நடந்த சத்தியாகிரக போராட்டத்தின்  முதல் நாள் நிகழ்வை தலைமையேற்று நடத்திய இ தி மு க தோழர் இளஞ்செழியன்!
1961 ஜனவரி 20 ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் நடக்க இருக்கும் சத்தியாகிரக போராட்டத்தில் இலங்கை திராவிட முன்னேற்ற கழகமும் கலந்து கொள்வதென்று தீர்மானிக்க பட்டது.
இது பற்றிய ஆய்வுக்காக  1960 டிசம்பர் 19 ஆம் தேதி  பண்டாரவளை நகரசபை மண்டபத்தில் இலங்கை திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஒரு கலாச்சார மாநாடு நடத்தப்பட்டது
இந்த மாநாட்டில் தமிழரசு கட்சியின் தலைவர்களான திரு மு திருச்செல்வம் (முன்னாள் அமைச்சர் - நீலன் திருச்செல்வத்தின் தந்தை)   
மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் சாம் தம்பிமுத்து ,
தமிழரசு கட்சியின் செனேட்டர் மாணிக்கம்,
அகில இலங்கை இஸ்லாமிய முன்னணியின் தலைவர் எம் எஸ் அமீது போன்றோரும் மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்
இம்மாநாட்டில் யாழ்ப்பாணத்தில் நடக்க இருக்கும் போராட்டத்தில் மலையக மக்களும் கலந்து கொள்ளவேண்டும் என்ற தீர்மானம் ஏற்கப்பட்டது
மலையகத்தில் இருந்து இ தி மு க வினர் யாழ்ப்பாணம் செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது
தமிழரசு கட்சியின் இப்போராட்டம் வடக்கு கிழக்கும் மக்கள் மாத்திரம் நடத்தும் போராட்டம் என்று அறியப்பட்டிருந்தது.
மலையகத்தில் இருந்து இலங்கை திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களும் இதர தொழிற்சங்க தொண்டர்களும் ஏராளமானோர் யாழ் அரசு செயலகத்தின் முன்பு குவிந்தனர்
முதல் நாள் போராட்டத்தை இலங்கை திராவிட முன்னேற்ற கழகத்தினர் தலைமை ஏற்று நடத்துமாறு இலங்கை தமிழரசு கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்
இக்கோரிக்கையை ஏற்று முதல் நாள் போராட்டம் தோழர் இளஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது.
தோழர்கள் ஏ எப் செல்வராசன். பா. இசைநாவரசன் ,.மு ஆ. வேலழகன் . திருமதி வசந்தா அப்பாதுரை . ஆ ம. அந்தோணிமுத்து. இரா சந்திரன் . குறட்செல்வன் .   குமாரசாமி . எம் ஏ செல்லமுத்து . எம் மயில்வாகனம் மற்றும் பலர் இப்போராட்டத்தில் பங்கெடுத்தனர்    

(சத்தியாகிரக போராட்டத்தில் காயமடைந்தவர்கள் யாழ் மருத்துவமனையில்)


கருத்துகள் இல்லை: