வியாழன், 10 மார்ச், 2022

தமிழ்நாட்டை ஏற்கனவே பல ஒவைசிக்களும் மாயாவதிகளும் சீரழித்துவிட்டார்கள் - எல் ஆர் ஜெகதீசன்

May be an image of 4 people
May be an image of 5 people, people standing and indoor

LR Jagadheesan  : “தமிழ்நாட்டிலயும் ஒரு மாயாவதி ஒரு ஒவைஸி இருந்தா போதும் … சோலிய முடிச்சிர்லாம்” ஆதிஷா விநோத்.
தமிழ்நாட்டிலும் இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள். அவர்கள் ஏற்கனவே செய்யவேண்டிய சோலிகளை ஏறக்குறைய முடித்தும் விட்டார்கள்.

2001 தேர்தலில் தமிழ்நாட்டின் ஒவைசிகள் பாபர் மசூதியை இடிக்கும் கரசேவைக்கு ஆதரவாக அனைத்திந்திய அளவில் ஒன்றிய அரசின் கூட்டத்திலேயே கர்ஜித்த “பெண் சிங்கத்தை”
மதசார்பற்ற மாணிக்கம் என்று தலைமேல் தூக்கி கொண்டாடி
தேர்தலில் நிற்கவே நீதிமன்றத்தால் தடைவிதிக்கப்பட்ட குற்றவாளியை தமிழ்நாட்டின் முதல்வராக்கி
நம் சமகால தமிழ்நாட்டின் அரசியல்/சமூக/பொருளாதார சீரழிவை வேகப்படுத்தும்


 “எதிர் கரசேவையை” செய்தவர்கள் தமிழ்நாட்டின் ஒவைசிகள் தான்.
இவர்களின் தோள் மீதேறி கோட்டையில் கொலுவேறிய அந்த கோமளவள்ளி “மதசார்பற்ற மாதரசி” தமிழ்நாட்டின் மதமாற்ற தடை சட்டத்தை கொண்டுவந்ததோடு திமுக ஆட்சியில் சுறுபான்மையினர் அனுபவித்த சிறப்பு சலுகைகளையும் ஒரே நாளில் பறித்தார். முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு தருவதை கடைசி வரை எதிர்த்தார்.

2001 தேர்தலில் தமிழ்நாட்டின் ஒவைஸிகள் ஆரம்பித்துவைத்த அந்த “எதிர் கரசேவையை” தமிழ்நாட்டு ஆண் மாயாவதிகள் தம் பங்குக்கு 2016 தேர்தலில் அடுத்தகட்டத்துக்கு கொண்டு சென்றார்கள். அந்த தேர்தலில் திமுக வெல்லக்கூடாது கலைஞர் ஆறாம் முறை முதல்வராகி வரலாறு படைக்கக்கூடாது என்பதை விட இந்த தமிழ்நாட்டு ஆண் மாயாவதிகளுக்கு அந்த தேர்தலில் திமுக வென்றால் கலைஞருக்குப்பின் மு க ஸ்டாலின் முதல்வராவார். அப்படி நடக்கக்கூடாது; மு க ஸ்டாலின் முதல்வராகவே கூடாது என்கிற பொறாமை பொச்சரிப்பில் திமுகவை கலைஞரை அந்த தேர்தலில் தோற்கடிக்க விஜயகாந்த் என்கிற தமிழ்நாட்டின் ஆகச்சீரழிந்த அரசியல் வியாபாரிகளில் ஒருவரை கலைஞருக்கு மாற்றாக முதல்வர் வேட்பாளர் என்று கூச்சமே இல்லாமல் தோளில் சுமந்தார்கள். இவர்களின் இஷ்டதேவைதை படியளந்த போயஸ் தோட்டத்து பெருமாட்டி முதல்வரானார். அவரது ஆட்சிக்காலத்தில் தான் பட்டியலின மாணவர்களின் மேற்படிப்பு கட்டணங்கள் முதல் பலவித சலுகைகளும்ன்படிப்படியாக பறிக்கப்பட்டன. ஆனாலும் தமிழ்நாட்டு ஆண் மாயாவதிகளின் கல்லாக்கள் மட்டும் தொடர்ந்தும் நிரம்பின.

இது தான் தமிழ்நாட்டின் நம் கண் முன் நடந்த சமகால அரசியல் வரலாறு.
கடந்த கால்நூற்றாண்டு கால தமிழ்நாட்டு அரசியல் சமூக பொருளாதார வளர்ச்சி/வீழ்ச்சி அல்லது மேம்பாடு/சீரழிவு என்பதை சொந்த ஜாதிப்பற்று/கட்சிப்பற்று/கொள்கைப்பற்று இல்லாமல் ஒருவர் ஆராயப்புகுந்தால் 2001 மற்றும் 2016 தேர்தல்கள் ஏற்படித்திய மிக மிக மோசமான பாதிப்புகளை சீரழிவுகளை உணரமுடியும். அவை வெறும் ஒரு கட்சியின் வெற்றி அல்லது தோல்விகள் அல்ல. அதைவிட ஆழமானவை. தமிழ்நாட்டின் அரசியல், சமூகம் மற்றும் பொருளாதார நலன்களை மிகப்பெரிய அளவில் சீரழித்தவை. பின்னுக்குத்தள்ளியவை. நிலை குலைத்தவை. அதன் பாதிப்புகளில் இருந்து தமிழ்நாடு இன்னும் மீளவில்லை. மீள முடியும் என்று தோன்றவும் இல்லை. தற்போதைய முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சி ஒரு ஆசுவாசத்தை தந்திருக்கிறதே தவிர மீட்சியை தந்துவிடவில்லை.

இந்த 2001 மற்றும் 2016 தேர்தல்களில் தமிழ்நாட்டின் ஒவைஸிகள் மற்றும் ஆண் மாயாவதிகளோடு இன்னும் சொல்லப்போனால் அவர்களைவிட அதிவேகமாக திமுகவுக்கு எதிராகவும் தமிழ்நாட்டின் நலஙளுக்கு எதிராகவும் களமாடிய முற்போக்கு போராளிகள் “தோழர்கள்” என்று கொண்டாடப்படும் இடதுசாரிகள். தமிழ்நாட்டின் தனித்துவத்தை அழிப்பதில் ஐம்பதாண்டுகாலமாக அவர்கள் செய்த திராவிட இயக்க எதிர்ப்பு கரசேவையை சரியாய் வர்ணிக்க (திட்ட) தமிழில் சரியான வார்த்தை இல்லை என்பது தான் பெருஞ்சோகம். தமிழ்குடி கெடுத்த குடிலன்கள் என்பது தான் இப்போதைக்கு தோன்றும் ஒற்றைச்சொல்.

கருத்துகள் இல்லை: