ஞாயிறு, 6 மார்ச், 2022

பிளாட்ஃபார்முக்கு வந்த எஸ்.ஏ. சந்திரசேகர்.. வெற்றி போதை கண்ணை மறைச்சிடுமாம்.. யாருக்கு சொல்றாரு?

Mari S  - tamil.filmibeat.com :  சென்னை: இயக்குநரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் புதிதாக யார் இந்த SAC எனும் யூடியூப் சேனலை ஆரம்பித்துள்ளார்.
இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரின் முதல் யூடியூப் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
முதல் வீடியோவிலேயே தனது மகன் விஜய்க்கு மறைமுகமாக சொல்வது போல எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியுள்ளார் என நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
விஜய் மக்கள் இயக்கத்தில் திட்டமிடல் இல்லையா?
எஸ்.ஏ. சந்திரசேகருக்கு அந்த வருத்தம் இருப்பது ஏன்?
யார் இந்த SAC யார் இந்த SAC?


பிரபல இயக்குநரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் தனக்கென தனி யூடியூப் சேனல் ஒன்றை உருவாக்கி உள்ளார்.
இந்த யூடியூப் சேனலின் பெயரே Yaar Indha SAC தான். தான்
செய்த சாதனைகளையும், தனது வேதனைகளையும் கொட்டித் தீர்க்க முடிவு செய்த எஸ்.ஏ. சந்திரசேகர் தனது முதல் வீடியோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

சமுத்திரகனி வெளியீடு எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகி வரும் நான் கடவுள் இல்லை எனும் படத்தில் சமுத்திரகனி ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில், எஸ்.ஏ. சந்திரசேகரின் யூடியூப் லிங்கை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார் சமுத்திரகனி. அதில், "ஒரு உண்மையான உழைப்பு உச்சம் தொட்ட கதை.. வாழ்த்துக்கள் சார்.. இன்னும் வெல்வோம்.." எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிளாட்ஃபார்மில் எஸ்.ஏ.சி பிளாட்ஃபார்மில் எஸ்.ஏ.சி 60 ஆண்டுகளுக்கு முன்னதாக சினிமா கனவோடு சென்னை வந்த எஸ்.ஏ. சந்திரசேகர் பாண்டி பஜாரில் உள்ள பிளாட்ஃபார்மில் தான் 47 நாட்கள் தங்கியிருந்தாராம்.
காரில் வந்து இறங்கிய எஸ்.ஏ. சந்திரசேகர் ஃபிளாட்ஃபார்மில் படுக்க ஒரு பாயை எடுத்துக் கொண்டு விரித்து அதில் உட்கார்ந்தபடி தனது முதல் யூடியூப் வீடியோவை போட்டுள்ளார்.

தனது ஆரம்ப கால வாழ்க்கை பற்றிய சுவாரஸ்ய சம்பவங்களை இந்த யூடியூப் சேனலில் வெளியாகும் ஒவ்வொரு வீடியோவிலும் சொல்லப் போகிறாராம். வெற்றி போதை வெற்றி போதை இந்த வீடியோவை இப்போ எதுக்கு போடுகிறேன்,
இந்த யூடியூப் சேனலை இப்போ எதுக்கு ஆரம்பிச்சேன் என்கிற கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக பேசிய எஸ்.ஏ. சந்திரசேகர் வெற்றி போதை ஒரு கட்டத்தில் நம் கண்ணை மறைச்சிடும்.. காதை செவிடாக்கிவிடும்.. டேய் எஸ்.ஏ.சி நீ இங்கே இருந்து தான் வந்த.. உன்னை இவர் தான் தூக்கி விட்டது,
இவர் தான் உனக்கு உதவி செய்தது என பேசியுள்ளார். மறைமுகமாக மகனுக்கு மறைமுகமாக மகனுக்கு எஸ்.ஏ. சந்திரசேகர் இந்த யூடியூப் சேனலை ஆரம்பித்ததே விஜய்க்கு எதிரான தனது மன வருத்தங்களை பதிவு செய்யவே என ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில்,

முதல் வீடியோவிலேயே மறைமுகமாக வெற்றி போதை விஜயின் கண்ணை மறைத்து விட்டதாக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் சொல்லியிருக்கிறார் என நெட்டிசன்கள் குறிப்பிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.
புண்படுத்த அல்ல புண்படுத்த அல்ல எஸ்.ஏ. சந்திரசேகர் வீடியோவை ஆரம்பிக்கும் முன்னதாகவே இது தனது வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியை பற்றிய வீடியோ தான் என்றும் யார் மனதையும் புண்படுத்த அல்ல என்றும் குறிப்பு போட்டிருப்பதே தெள்ளத் தெளிவாக தனது விஜய்க்கு அவர் சொல்ல விரும்புவதை இந்த வீடியோக்கள் வழியாக பேச போகிறார் என்பதை புரிய வைப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

சமுத்திரகனி வெளியீடு

கருத்துகள் இல்லை: