ஞாயிறு, 6 மார்ச், 2022

திமுகவின் பாட்ஷாக்களும், யாசீன்களுமே இன்றைய சமூக சூழலுக்கான சமுதாய தலைவர்கள்!!

May be an image of standing

Bilal Aliyar  : திமுகவில் கட்சி பதவியாக இருந்தாலும், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பதவிகளாக இருந்தாலும்,
திமுகவின் அடிப்படை கட்டமைப்பை அறிந்து கட்சிப் பணியாற்றுபவர்களுக்கு நிச்சயாக வாய்ப்புகள் உண்டு என்பதை திமுக தலைவர் அவர்கள் தொடர்ந்து உறுதிபடுத்துகின்றார்.
இஸ்லாமியர்களுக்கு மேயர் பதவிகள் இல்லையா?
என்று விமர்சனம் வைப்பவர்கள் யாரும், பலம் பொருந்திய திமுக கூட்டணியில் நின்றும் கூட, முஸ்லிம் லீக்கின் மூன்று வேட்பாளர்களுமே, (சிதம்பரம், கடையநல்லூர், வாணியம்பாடி போன்ற முஸ்லிம்கள் நிறைந்த தொகுதியில் ஏன் தோற்றார்கள் என பேசுவதே இல்லை?


ஹிஜாப் பிரச்சனை நடந்த மேலூர் 8 வது வார்டில் வெற்றிபெற்ற திமுக நகரச் செயலாளர் யாசீன் அவர்கள் நகர்மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பின்னால் கடந்த பத்து வருடங்களாக நகர செயலாளராக திமுக தலைமையின் கீழ் நின்று, தன் செயல்பாடுகளை சாதி, மதம், இனம், மொழி கடந்து செயல்பட்டாதாலேயே சாத்தியமானது என்பதை நாம் மறுக்க முடியாது.
மேலூர் போன்ற கிராமமுமற்ற, நகரமுமற்ற அனைத்து சமூக மக்களும் இணைந்து வாழும் நிலப்பரப்பில் ஒரு சிறுபான்மை இஸ்லாமியர் அதிகாரத்தின் நிழலில் இளைப்பாறுவது என்பதையும், ஒட்டுமொத்த பெரும்பான்மை சமூகமும் அவரை ஏற்றுக் கொண்டு போட்டியின்றி தேர்த்தெடுத்திருப்பதையும் குறித்து,
அடையாள அரசியலும், தனித்த பிரதிநிதித்துவமும் வேண்டி இயங்குபவர்கள் பகுப்பாய்வு செய்ய வேண்டும்.
யாசீன் போன்றவர்களுக்கு இந்திய சாதிய சமூக அரசியலை உள்வாங்கி, நேர்மையுடன் அரசியல் களத்தில் இயங்கும், ஒரு பன்முக சமூகத்தை உருவாக்க பாடுபடும் திமுக என்ற பேரியக்கமே அடிநாதமாக இருக்கிறது. யாசீன் என்ற ஒரு தனிநபரை வைத்து நான் பேசவில்லை, மேலூர் நகராட்சியில் 27 வார்டுகளில் 9 வார்டுகளில் சிறுபான்மை வேட்பாளர்களை நிறுத்த, அதில் 8 வேட்பாளர்களை திமுக வெற்றிபெற வைத்திருக்கிறது.
இந்த வெற்றிக்கு பின்னால் திமுக என்ற இயக்கமும், அதன் தலைமையிலான மாநில அரசின் மீதான நம்பிக்கையும், அனைத்து சமூக மக்களுக்குமான அமைதியான வாழ்வியல் சூழலுக்கு திமுக ஆதாரசுருதியாகவும், பிரதானமாகவும் இருப்பதும், இஸ்லாமியர் வாக்கு வங்கி என்பது கானல் நீராகவுமே இருந்திருக்கிறது என்பதையும் கள ஆய்வுகளின் மூலம் நிரூபிக்க முடியும்.
யாசீன் போன்றவர்களுக்கு இந்த இடத்திற்கு கடுமையான போட்டிகளும், உள்ளடி வேலைகளும் இருந்த போதிலும், ஆரம்பம் முதல் இறுதிவரை யாசீன் போன்ற கட்சியினருக்கு பக்கபலமாகவும், அவர்களுக்கான இடத்தை உறுதிசெய்ததில் மாவட்ட செயலாளர் அண்ணன் மூர்த்தி அவர்களின் பங்கு மகத்தானது என்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டியது.
மேலூருக்கு அருகில் இருக்கும் நத்தம், பெயரிலேயே அதிமுக தலைவரால் கடந்த இருபதாண்டுகளாக வசமிருத்த பேரூராட்சி, இன்று பாட்சா என்ற திமுக செயல்வீரராலும், ஐ. பெரியசாமி என்ற திமுக ஆளுமையாலும் திமுக வசமாகிறது. அங்கும் பாட்சா பேரூராட்சி தலைவராக திமுகவால் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
நான் எப்போதும் சொல்வது போல, திமுகவில் இயங்கும் இஸ்லாமியர்களால் மட்டுமே தங்களின் பன்முக தன்மை கொண்ட பார்வையாலும், சமூகநீதிக்கான திமுக தலைவர்களின் தனித்துவமான செயல்பாடுகளாலும் அதிகாரத்தை நெருங்க முடியும்.
ஆகவே அரசியல் செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்ட சிறுபான்மை இளைஞர்கள் தாமதிக்காமல் திமுகவில் இணைந்து மக்கள் பணியாற்றவும், சமுதாய பணியாற்றவும் அழைக்கிறேன்.. ஏனைனின்
பாட்ஷாக்களும், யாசீன்களுமே இன்றைய சமூக சூழலுக்கான சமுதாய தலைவர்கள்!!
பிலால் அலியார்
05/03/2022

கருத்துகள் இல்லை: