திங்கள், 18 டிசம்பர், 2017

ஜெயலலிதா அப்போலோவுக்கு உயிரோடு வந்தாரா?.... சோம்பு தூக்கிய ஊடகங்கள்

கேடு கெட்ட ஊடகங்கள் Thanthi TV புதிய தலைமுறை News18 Tamil Nadu News7Tamil போன்றவை விவாதம் நடத்தி கலைஞர் மீது அவதூறு பரப்பியதே!
ராஜா ஜி : செப் : 22 அன்று அப்பல்லோவில் ஜெயலலிதாவை அனுமதிக்கும் பொழுதே மிகவும் கவலைக்கிடமான நிலையில் தான் அனுமதிக்கப்பட்டார் என்று பிரதாப் ரெட்டி கூறியுள்ளார் ;
செப் 26 அன்று முதல்வர் காவிரி விவகாரமாக ஆலோசனை நடத்தினாராமே?
இதில் தலைமைச் செயலளர் ராம மனோகர்ராவ், அட்வகேட் ஜெனரல் முத்துக்குமாரசாமி, தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், முதல்வரின் முதன்மைச் செயலாளர் கே.என்.வெங்கட்ராமன் , முதல்வரின் செயலாளர் ராமலிங்கம் போன்றோர் கலந்துகொண்டதாக நாளிதழ்களில் வந்ததே!
இதன் உறுதித் தன்மையை யார் விசாரிப்பது? இதற்கு அடுத்த நாளே திமுக தலைவர் இது குறித்து அறிக்கை கேட்டாரே!
அந்த போட்டோவையாவது வெளியிடுங்களேன், அந்த கட்சியின் தொண்டர்களாவது நிம்மதி அடைவார்கள் என்றாரே!
உண்மையை சொல்லவேண்டிய ஊடகங்கள் அனைத்தும் உண்மையை மறைக்க துணை போனதே!
இன்றைய கேவலமான சூழலுக்கு இந்த ஊடகங்களே காரணம்.
நீதிமன்றங்கள் என்ன செய்யப் போகின்றன?

கருத்துகள் இல்லை: