ஞாயிறு, 17 டிசம்பர், 2017

நிர்பயாவின் நண்பன் அவேந்த்ரா பிரதாப் பாண்டே போற்றப்படவேண்டிய இளைஞன்

சில வருடங்களுக்கு முன்னால், டெல்லி நகரில், ஓடும் பஸ் வண்டிக்குள் அவன் கண்ணெதிரிலேயே, அவனுடைய காதலி, ஆறு மனித மிருகங்களால் மிகக் கொடூரமாக வன்புணர்வுக்கு இரையானாள். இரும்புக் கம்பியால் மோசமாகத் தாக்கப்பட்டு, உடல் நீலமாகிப் போகும் வரை அவன் போராடினான். அவன் காலை ஒடித்து, அலைபேசியைத் திருடி, அவன் உடைமைகளைக் கொள்ளையடித்து அவன் அரை நிர்வாணமாக்கப்பட்டான். தன்னால் முடிந்தவரை போராடிய அவன், அந்த உறைந்து போகும் குளிரான இரவிலே, அவனுடைய காதலியுடன் ஓடும் பஸ்ஸிலே இருந்து தூக்கி எறியப்பட்டான். அவர்கள் இருவரும் நிர்வாணமாக, பிழிந்தெடுக்கப்பட்டு, முற்றும் சோர்வுற்று, ரத்தம் வழிந்தோட, முழுதுமாய் உருக்குலைந்தார்கள். தங்களைக் கடந்து சென்ற அனைத்து வண்டிகளையும் நிறுத்த முயற்சி செய்து, சிதைக்கப்பட்டு நிர்வாணமான தனது காதலியின் உடலை மூட ஒரு சால்வையாவது தரவேண்டி அவன் கெஞ்சினான். நாற்பது நிமிடங்களுக்குப் பிறகே ஒரு சால்வை கிடைத்தது. அதன்பின் அவன் அவளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றான்.


காவல் துறைக்கும், அவளின் பெற்றோருக்கும் அறிவித்ததோடு, தேவையான நேரத்தில், உண்மையான ஒரு நண்பன் செய்ய வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்தான். அவன் அந்த பஸ் வண்டியிலிருந்து ஓடியிருக்க முடியும், ஆனால் அவன் ஓடவில்லை. அவளைத் தெருவிலே விட்டுப் போயிருக்க முடியும், ஆனால் அவன் போகவில்லை.

இறந்து போன அவனுடைய காதலி நிர்பயாவின் தந்தை, உத்தரப் பிரதேச முதல்வரிடமிருந்து பெற்றுக் கொண்ட 25 லட்சத்திலோ, அவளின் சகோதரனுக்குக் கிடைத்த உத்தியோகத்திலோ, பல்வேறு தரப்பிலும் இருந்து அவள் பெயரால், அவள் குடும்பத்திற்குக் கிடைத்த பல்வேறு உதவிகளிலோ அவனும் உரிமை கோரியிருக்கலாம். ஆனால் அவன் அதைச் செய்யவில்லை. அவளுக்கு தரப்பட்ட சிகிச்சைகளுக்கான செலவையும் அரசிடமிருந்து அவன் கோரியிருக்கலாம்.

ஆனால் அவன் அதைச் செய்யவில்லை. இன்றைய இலத்திரனியல் ஊடகங்களிலே, அடிக்கடித் தன் முகத்தைக் காட்டி, பிரபலமடைந்து பணம் கூட சம்பாதித்திருக்கலாம். ஆனால் அவன் செய்யவில்லை. ஆக, இது நட்பு இல்லையென்றால் பின் எதுதான் நட்பு? முழுநாடுமே அந்தப் பெண்ணுக்காக வெகுண்டெழுந்து கர்ஜித்தபோது, அந்த பயங்கரமான இரவிலே அவனுக்கு நேர்ந்ததை, அவன் அனுபவித்த கொடுமையை யாருமே சிந்தித்துப் பார்க்கவில்லை.

அவன் ஒரு பிரபல நடிகரோ, கிரிக்கட் விளையாட்டு வீரரோ அல்ல. அவன்தான் அவேந்த்ரா பிரதாப் பாண்டே. உத்தரப் பிரதேச, கொரக்ஸாபூர் என்ற ஊரைச் சேர்ந்த இளைஞன். தன் காதலியை தனது இதய நாடி, நரம்புகளிலெல்லாம் காதலித்தவன். இப்படி ஒரு இளைஞன் எங்கோ அடையாளப்படு்த்தாமல் இருக்கையிலே, நாம் இந்தியர்கள் எதற்காக அமெரிக்காவைப் பின்பற்றி ஆகஸ்ட் 3ம் திகதியை "நண்பர்கள் தினம்" எனக் கொண்டாடுகிறோம்? நட்பின் இலக்கணத்தை தனது செயலால் உணர்த்திய அவேந்த்ராவின் உயர்ந்த ஆத்மாவை கௌரவிக்கும் வகையில் டிசம்பர் 16ம் திகதியை "நண்பர்கள் தினம்" எனக் கொண்டாட வேண்டும்.

இந்தியாவின் "நண்பர்கள் தினம்" என டிசம்பர் 16ம் திகதி உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டு அறிவிக்கப்படட்டும். நான் பேசுவது அறிவு பூர்வமானதா? ஆம் என்றால் முடிந்தளவு அதிகமாக உங்கள் நண்பர்களோடும் இதைப் பகிர்ந்து, உண்மையான நட்பின் இலக்கணத்தை உலகுக்கு எடுத்துரைப்போம். சமூக விழிப்புணர்விற்கும் இது ஒரு மேடையாக அமையட்டும். (ஆங்கில வட்ஸ்ஆப் தகவல் - தமிழாக்கம் லோகு -

கருத்துகள் இல்லை: