1-Devi Somasundaram : இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்ரேட் நிறுவனம் கம்யூனிஸ்ட் கட்சிகள்.. மக்களால் தொடர்ந்து நிராகரிக்க பட்டும் புத்தி வர்ல... வேதிக் ரேஷனலிஸ்ட்களிடம் வேறு என்ன எதிர்ப்பார்க்க முடியும்..
2-Nilabharathi அடிமைகூட்டத்தைவிட, மோசமா இருக்கிறது அவர்களின் இறங்கிவிடக்கூடாது, உண்மைய பேசி ஏத்துக்கிடக்கூடாது என்கிற வரட்டு வன்மம் அவர்களிடம், தலைமைக்கு முட்டுகொடுக்கிற உண்மைத்தொண்டர்கள் இருக்கிற வரை அப்படிதான் இருக்கும் அந்த இசம் வளரவே இயலாது.
3-Radha Manohar ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான புரட்சியை மடை மாற்றம் செய்யும் வேலையைத்தான் கம்யுனிஸ்டுகள் செய்கிறார்கள் ... ஒரு வகையில் இதுவும் ஒரு வகை RSS தான்.
4-Devi Somasundaram ஆம்...கீழ் வெண்மணியில் ஆரம்பித்த அயோக்கியதனம்...
5-Athi Narayanan கீழ வெண்மணியில் செய்த அயோக்கியதனம் என்ன தோழர்... தகவலுக்காக...
6-Devi Somasundaram ஒடுக்க பட்ட மக்களை வன்முறை நோக்கி தூண்டி விட்டது கம்யூனிஸ்ட்கள் தான்...நான் நேரடியாவே குற்றம் சாட்டுகிறேன் ..ஒருத்தர கட்டி வச்சு அடிச்சது கோபால கிருஷ்ண நாயுடு கும்பல் ..அவர மீட்க போகாம கோபால கிருஷ்ணன் வீட்டுகுல்ல பூந்து பெண்களை புடவை புடிச்சு இழுத்து அசிங்க படுத்துச்சு கம்யூனிஸ்ட்கள். .கோபால கிருஷ்ணன்.குழந்தைகளை ,பெண்களை ஊரையே தீ வச்சு கொளுத்தினார்..கோபால கிருஷ்ணன வெட்டியது பிற்படுத்தபட்ட வகுப்பை சேர்ந்த திராவிட கழகத்தினர்....தப்பை எல்லாம் செய்துட்டு. பெரியாரை குற்றம் சொன்னது கம்யூனிஸ்ட்...இல்லன்னு மறுக்க போறிங்க்ளா.
7-Athi Narayanan கண்டிப்பாக மறுக்கத்தான் போகிறேன்... தவறான விடயங்களை மறுக்கத்தானே வேண்டும்... ஆக கட்டி வைத்து அடிப்பவனிடம் அறம் போற்ற சொல்கிறேர்கள்... அதற்காக பொண்கள் மீதான வன்முறையை சரி என்று சொல்லவில்லை அதே சமயம் அது உண்மையா என்றே கேட்கிறேன்... அப்புறம் அப்போது ஆட்சியில் இருந்தது திமுக தானே...? திமுக எப்படி நடந்துகொண்டது... ஏன்... நான் மதிக்கும் பெரியாரிடமே வருகிறேன்...
44 பேரை கொழுத்தி கொன்ற கொடுமைக்கு பெரியாரின் எதிர்வினை என்ன...? அப்புறம் திக...வினரா கொன்றது...? சட்டம் காப்பாற்றிய கொலைகாரனை மக்கள் கொன்றார்கள்... மக்களின் பிரதிநிதிகள் கொன்றார்கள்... மேலும் அவர்கள் எம்எல் இயக்கத்தை தேர்ந்த பள்ளர் சாதியை சேர்ந்தவர்கள்... நாய்டு கொன்றவர்களின் பட்டியலை போல நாய்டை கொன்றவர்களின் பட்டியலும் அவர்கள் மீது அப்போதைய திமுக அரசு எடுத்த நடவடிக்கை குறித்தும் தகவல்கள் இருக்கத்தானே செய்யும்... எடுத்து வரிசையாக பதிவிடுங்கள்... தீர்க்கமாக சொல்கிறேன்... திமுக...வின் துரோகம் அப்போதிருந்தே துவங்கிவிட்டது...
8-Ezhil திராவிடர் கழகத்தினர் என்று சொல்வது மிகமிக அபத்தம்... கம்யுனிஸ்டுகளை கார்பரேட் கட்சி என்று சொல்வது ரொம்ப மட்டமான சிந்தனை. வரலாறு தெரியாமல் உளற கூடாது. Ezhil திராவிடர் கழகத்தினர் என்று சொல்வது மிகமிக அபத்தம்... கம்யுனிஸ்டுகளை கார்பரேட் கட்சி என்று சொல்வது ரொம்ப மட்டமான சிந்தனை. வரலாறு தெரியாமல் உளற கூடாது.
9-Devi Somasundaram கேஸ் நடந்து தீர்ப்பு இருக்கு ..போய் பாருங்க .கோபால கிருஷ்ணன் கொலையில் தண்டிக்க பட்டவர்கள் திகவினர் மட்டுமே ...வரலாறே ஓளரலா தான் இருக்கு..அது என் தப்பில்ல.
10 - Ezhil கர்நாடக மாநிலத்தில் பிறந்து கீழ தஞ்சை மாவட்டத்தில் வந்து தங்கி, கம்யூனிஸ்ட் இயக்கத்தையும், விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள் சங்கத்தையும் கட்டி அமைத்து, ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்களின் மனதில் வீரத்தை விதைத்து, உரிமைக்காகப் போராடிட அவர்களைச் சங்கமாக அணி திரட்டியவர் தோழர் பி.சீனிவாசராவ். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அடிமைகளாகவே வாழ்ந்து வந்த மக்களுக்கு உழைப்புக்கேற்ற கூலி உயர்வு மட்டுமா அவர்களது பிரச்சினை?
சமூகத்தில் மனிதனாக, எல்லா உரிமைகளும் பெற்ற மனிதனாக மதிக்கப்பட வேண்டிய சுயமரியாதை உணர்வும் அவர்களது தலையாய பிரச்சினை. பண்ணையார்களும், ஜமீன்தார்களும் மட்டுமே அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியாளர்கள், நெல் உற்பத்தியாளர்கள் சங்கத்தை உருவாக்கி, இராணுவத்தையும், போலீசையும் ஏவி விட்டு, உழைக்கும் மக்கள் மீது நடத்திய அடக்குமுறைகளின் கோர தாண்டவம், 1968 டிசம்பர் 5-இல் கீழ வெண்மணி கிராமத்தில் கொழுந்து விட்டெறிந்த அதிகார வர்க்கத்தின் தீயில் 44 உயிர்களைப் பலிகொண்ட பிறகுதான் அடங்கியது.
கீழ் வெணமணி படுகொலையைத் திட்டமிட்டு நடத்திய இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடுவை “நிரபராதி” என்று விடுதலை செய்ததன் மூலம் போலீஸ், சட்டம், நீதிமன்றம் அனைத்தும் அதிகாரவர்க்கத்தின் அடியாள் படைதான் என்பதை நிரூபித்தது.
இந்தத் தீர்ப்பை எழுதிய உயர்நீதிமன்றம் சொன்னது, “கோபாலகிருஷ்ண நாயுடு பணக்காரர்; கார் வைத்திருக்கிறார்; கார், பங்களா வைத்திருக்கும் கனவான் குடிசையைக் கொளுத்துவாரா?” என்று.
வெண்மணித் தீயில் வெந்து மடிந்த உயிர்களில் தப்பிப் பிழைத்த 13 வயது நந்தன் எனும் சிறுவன் மனதில் கனன்று கொண்டிருந்த தீக்கங்குகள்தான் பின்பு நக்சல்பாரி புரட்சியாளர்கள் வெண்மணிப் படுகொலையாளி கோபாலகிருஷ்ண நாயுடுவை 44 துண்டுகளாகக் கூறு போட்டுத் தீர்ப்பெழுதிய பின்பு அடங்கியதோ?!
இது உயர்நீதிமன்றத் தீர்ப்பல்ல; மக்கள் மன்றத்தின் தீர்ப்பு! சமூகத்தில் நிலவும் எல்லா கொடுமைகளுக்கும் பிழைப்புவாத அரசியல்வாதிகள் நடத்தும் அராஜக ஆட்சியால் நாடாளுமன்றமெனும் நாறிப் புழுத்துப் போன சகதியால் எந்தத் தீர்வும் காண முடியாது!
11- Devi Somasundaram தோழர் ஆதி நாராயணன்....நீங்க உண்மையை ஏற்க தயாரா இல்ல என்பது புரிகிறது. ..ஆனா நான் சொன்னது தான் நிஜம்..கீழ் வெண்மணி கொலை, தாமிரபரணி கொலை என்று ஆரியம் திமுக வுக்கு எதிரா நடத்தும் திட்டங்களுக்கு துணை நின்றது கம்யூனிஸம்...இது ஒவ்வொரு கீழ் வெண்மணிகாரர்களுக்கும் தெரியும்..
12 - -Athi Narayanan செம காமெடி... உங்கள் வாதத்திற்கே வருகிறேன்... மேற்கண்ட இரு சம்பவத்தின்போதும் அதிகாரத்தில் இருந்தது திமுக... அப்படியானால் சம்பந்தப்பட்டா ஆரியர்கள் மீதும் கம்யூனிஸ்ட்டுகள் மீதும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை... அல்லது எமக்கு எதிரான உங்கள் மூவரின் கூட்டுச்சதியா... அதனால்தான் நடவடிக்கை எடுக்கவில்லையா... பதில்..+
13 - Devi Somasundaram ஆரியம் என்னிக்கு நேரடியா மோதி இருக்கு...நம்மகுல்லவே அடிச்சுக்க விடறது தான பழக்கம்....எடுக்க பட்ட நடவடிக்கை எந்த சார்பும் அற்றது. .
14 - -Athi Narayanan ஆஹான்... அதான் விடுதலை செய்யப்பட்டார் போல... சார்பற்றது என்பதே எஸ்கேபிசம் தான்... ஆரியத்திற்கு அடியாள் வேலை பார்த்திருக்கு திராவிடம்...
15 - -Ezhil Devi Somasundaram கீழ்வெண்மணியில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவுத்தூணுக்கு அருகே 48 துண்டுகளாக சிதறிக் கிடக்கிறது கோபாலகிருஷ்ண நாயுடுவின் உடல். இது கீழ்வெண்மணி மக்களின்-நக்சல்பாரிகளின் தீர்ப்பு. வர்க்க-சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட்டங்கள் நடக்கும் பொழுதெல்லாம் அரசு எந்திரமானது உழைக்கும் மக்களுக்கானது இல்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. பண்ணைக்கு உழைத்துக் கொடுத்த மக்களை நெருப்பிலிட்டுப் பொசுக்கிய, ஆதிக்க சாதிவெறி பிடித்த பண்ணையார் கோபாலகிருஷ்ண நாயுடுவைப் போன்றவர்கள் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளிலும், ஆதிக்க சாதிக் கட்சிகளிலும், ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி போன்ற மதவெறி அமைப்புகளிலும் நிரம்பி வழிகிறார்கள்.
16 - -Ezhil “அய்யோ எரியுதே! யாராவது காப்பாத்துங்களேன்! அம்மா-அப்பா” என்ற அலறல்கள் செவிப்பறையைக் கிழிக்கின்றன. எரியும் குடிசைக்குள்ளிருந்து நீயாவது பொழைச்சுக்கோ என்று தன் குழந்தையை வெளியில் தூக்கிப் போடுகிறாள் அந்தத் தாய் எரிந்து கொண்டே. அதை மீண்டும் தூக்கி நெருப்பில் போடுகிறான் கோபாலகிருஷ்ணநாயுடு எனும் பண்ணையாரின் கூலிப்படைத் தலைவன் . “கூலியாடா வேண்டும்? செவப்புக் கொடியாத் தூக்குறீங்க? செத்துத் தொலைங்கடா!” என்கிறான்.
கீழ்வெண்மணியில் நடந்த இந்த படுகொலை 1968 டிசம்பர் 25 அன்று நடந்தது. சூரியன் எழுவதற்கு முன் எழுந்து மறைந்த பின்னரும்கூட வேலை ஓயாது விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும். நிலமெல்லாம் பண்ணையாருக்குச் சொந்தம். ஓய்வெடுக்க நேரமில்லை. கூலி கேட்கத் துணிவில்லை, மீறிக் கேட்டால் சாணிப்பாலும், சவுக்கடியும்தான் மிஞ்சும். சவுக்கடியால் தெறித்த ரத்தம்பட்டுக் களிமண்ணும் செம்மண்ணாகும்.
இந்த அநியாயத்துக்கு எதிராக உழைக்கும் மக்களை அணிதிரட்டுகிறார்கள் கம்யூனிஸ்டுகள். இருள் நிறைந்த தங்களின் வாழ்வை மீட்க வந்த கம்யூனிச இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள் மக்கள். தம் குருதி தோய்ந்த செங்கொடியை உயர்த்திப் பிடிக்கிறார்கள்.
“உழுபவனுக்கே நிலம்; உழைப்பவனுக்கே அதிகாரம்” என்ற முழக்கம் பண்ணையார்களை நடுங்கச் செய்கிறது.
அரை லிட்டர் நெல்கூலி உயர்வு கேட்டு கீழ்வெண்மணியில் தொடங்கியது போராட்டம். வெளியூர்காரர்களை வைத்து அறுவடை செய்யலாம் என்ற ஆண்டைகளின் கனவில் மண்ணள்ளி போட்டார்கள் மக்கள். வெளியூர் ஆட்கள் வந்த வண்டிகளை மறித்து அவர்களைத் திருப்பி அனுப்பினார்கள்.
பண்ணையாரின் அடியாட்கள் மக்களைத் தாக்க, செங்கொடிகள் மக்களைக் காக்கின்றன. அடியாட்களை விரட்டுகின்றன. திரும்பிய பக்கமெல்லாம் செங்கொடிகள் ஆண்டைகளை அச்சுறுத்துகின்றன. பண்ணையாளர்களின் சங்கமான நெல் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவனான இரிஞ்சியூர் கோபாலகிருஷ்ணநாயுடு சிவப்புக் கொடியை இறக்கிவிட்டுத் தங்களின் மஞ்சள் கொடியை ஏற்றினால் கேட்ட கூலியைத் தருவதாகக் கூறி, இல்லையேல் கீழ்வெண்மணி எரிக்கப்படும் என்று மேடைகளிக் கொக்கரித்தான்.
போலீசும், அரசும் அமைதியாக வேடிக்கைப் பார்த்தன. இனியும் இந்த அரசை நம்பிப் பயனில்லை. கீழ்வெண்மணியை செங்கொடிகள் பாதுகாத்தன. அதுவரை அடி வாங்கிய உழைக்கும் மக்கள் திருப்பியடிக்க ஆரம்பித்தார்கள்.
டிசம்பர் 25 இரவு 8 மணிக்கு திடீரெனப் புகுந்தது கோபாலகிருஷ்ண நாயுடுவின் வெறிநாய்ப்படை. கண்ணில் கண்டவர்களையெல்லாம் வெட்டித் தள்ளியது. தப்பி ஓடிய மக்கள் கூலித்தொழிலாளி ராமையாவின் குடிசையில் தஞ்சம் புகுந்தனர். குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என மொத்தம் 48 பேர் எல்லாம் கரிக்கட்டைகளாக அடுத்த நாள் காலையில். விவசாயத் தொழிலாளர்கள் தங்களைத் தாங்களே எரித்துக் கொண்டார்கள் – இது நெல் உற்பத்தியாளர்கள் சங்கம்.
இரு கிராம மக்களிடையே நடந்த சண்டை – இது தமிழக அரசு. ஒரு நிலக்கிழார் தானே எரித்துக் கொலை செய்திருக்க மாட்டார் – கோபாலகிருஷ்ண நாயுடுவை விடுதலை செய்த உயர்நீதிமன்றத் தீர்ப்பு.
“உயிரை விட்டாலும் செங்கொடியை விடேன்” என்று உரிமைகளுக்காகப் போராடிய கீழ்வெண்மணியின் மரபுதான் நம் மரபு. வர்க்கமும், சாதியும் பின்னிப் பிணைந்து இருக்கிற இந்த சமூகத்தில் உழைக்கும் வர்க்கமாக ஒன்றுபடாமல் ஆதிக்க சாதிவெறிக்கு, பண்ணை கொடுமைக்குக் கல்லறை கட்டமுடியாது என்பதைக் கீழ்வெண்மணி நமக்குக் கற்றுத் தருகிறது.
17 - Devi Somasundaram கீழ் வெண்மணில நடந்தத நான் ஏற்கனவே சொல்லிட்டேன் ..அது தான் நிஜம்..அரசாங்கத்திடம் போராட வேண்டிய மக்களை ஒரு தனி நபரோடு போராட தூண்டியது கம்யூனிஸ்ட்கள் ...ஒரு தலித் மனிதரை கட்டி வைத்து அடிததார் கோபால கிருஷ்ணன்.. கோபால கிருஷ்ணன் வீடு புகுந்து பெண்களை தாக்கியது கம்யூனிஸ்ட்கள் ...அதை தடுக்க போன தனுஷ் கோடி என்ற தலித் நபர் கம்யூனிஸ்ட்களால் தாக்க பட்டதில் இறந்து போனார்....தன் வீட்டு பெண்கள். அவமான படுத்த பட்ட ஆத்திரத்தில் தேடி தேடி மக்களை கொளுத்தியது கோபால கிருஷ்ணன் கும்பல்.. . கேஸுல் கோபால நாயூடுவுக்கு ஆதரவு. வக்கில் சீனிவாசன் ஒருபார்ப்பனர்.. . கோபால கிருஷ்ணனை கொன்றது திகவினர்...பேப்பரை கிழிச்சு போட்டுகிட்டா அது கம்யூனிஸ்ட் ஆகிடாது...ஏன் என்றால் குற்றம் சாட்ட பட்டு தண்டனை பெற்றவர்கள் திகவினர்...இதில் முழுக்க முழுக்க அயோக்கியதனம் செய்தது கம்யூனிஸ்ட் தான்...
18 - Devi Somasundaram கொடி பிடிக்கறது தான் நல்லா செய்விங களே ...கொலை செய்ய தான் வரமாட்டிங்க.
19 - Athi Narayanan ஆஹான்... எங்கூர்ல ஒருத்தரை போட்டு தள்ள வேண்டியிருக்கு... ஆள் அனுப்புறேங்களா தோழர்... ஹாஹாஹா... சமகாலத்தில் நடந்ததையே திக தான் நடத்தியது என்று திருத்துகிறேர்களே அப்ப ஆரியம் மட்டுமல்ல நீங்களும் தானே திருடர்கள்... நீங்கள் சொல்லுவது தான் நிஜம் என்று எழுதுவதிலேயே நீங்கள் எதையோ மூடிமறைக்க நினைக்கிறேர்கள் என்று தான் தெரிகிறது... முடிந்தால் வழக்கு ஆவணத்தையும் வாதத்தையும் தீர்ப்பையும் திமுக அரசின் நடவடிக்கைகளை ஆவனமாக பதிவிடுங்கள்... வெண்மணி திராவிடத்தின் துரோகம்...
20 - Ezhil Devi Somasundaram சுவாதி கொலை வழக்குல தண்டனை பெற்றது ராம்குமார். ஆனால் அந்த வழக்கில் ராம்குமாருக்கு சம்பந்தமில்லை என்கிறார்கள். ஒரு நாற்பது வருடம் கழித்து வழக்கின் அடிப்படியில் பார்த்தால் ராம்குமார் தான் குற்றவாளி என்று வரலாறு படிக்காதவர்களுக்கு தெரியும். அது போல் தான் உள்ளது உங்கள் வாதம். வரலாறை தெரிந்து கொண்டு பேச வேண்டும். திரும்பவும் சொல்லுறேன். எதையாவது உளற கூடாது. அதன் விளைவு மதிப்பை இழந்து விடுவோம். வினோத் மிஸ்ரா தலைமையிலான நக்சல்பாரி தோழர்கள் தான். ஒரு விஷயம் புரிந்து கொள்ளவும். கம்யுனிஸ்ட் என்றால் யாரை சொல்லுகிறேர்கள் என்று குறிப்பிட வேண்டும். இங்கே பல போலி கம்யுனிஸ்ட்கள் இருக்கிறார்கள். பொதுவாக அடித்து விடக்கூடாது.
21 - - Ezhil வெண்மணிப் படுகொலையை முன்னின்று நடத்திய கோபாலகிருஷ்ணனை விடுவிக்கின்ற வழக்கை தஞ்சை மாவட்டத்தில் இருந்த பண்னையார்கள் தான் நடத்தினர். இதற்காக அவர்கள் ஒரு கமிட்டியை அமைத்தாரகள். தஞ்சையின் மிகப்பெரிய பண்ணையாரும், பின்னாளில் த.மா.கா என்கிற கட்சியை நடத்தியவருமான கருப்பையா மூப்பனார் தான் இந்த கமிட்டிக்கு பொறுப்பேற்று கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட கொலையாளிகள் விடுதலை பெறுவதற்கு பாடுபட்டார். வெண்மணி மக்களின் வழக்கை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தன் வசம் எடுத்துக்கொண்டது. இந்தக் கட்சி தான் பின்னாளில் மூப்பனாருடன் அரசியல் கூட்டணி வைத்துக்கொண்டது. தலித் மக்களின் விடிவெள்ளி எனவும், சேரிப்புயல் எனவும் அடைமொழிகளை அடுக்கிக் கொள்கின்ற திருமாவளவன் மூப்பனாருடன் கைகோர்த்துக் கொண்டு ஓட்டு கேட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக