Lakshmi Priya - Oneindia Tamil
சென்னை: பெங்களூர் அம்ருத்தா தனது பெற்றோரை நிரூபிக்க சோபன்பாபுவின்
மகனுடைய டிஎன்ஏவும், ஜெயலலிதாவின் டிஎன்ஏவும் போதுமானது என்று அக்குபஞ்சர்
மருத்துவர் சங்கர் தெரிவித்துள்ளார்.
அம்ருத்தாவுடனான சந்திப்பு குறித்து சன் நியூஸ் தொலைகாட்சியில் அக்குபஞ்சர்
மருத்துவர் சங்கர் கூறுகையில், ஜெயலலிதாவுக்கு நான் அளித்த சிகிச்சைகளை
பார்த்துவிட்டு அம்ருத்தா என்னை வந்து சந்தித்தார். அப்போது ஜெயலலிதாதான்
எனது அம்மா, எனக்கு ஏதேனும் உதவ முடியுமா என கேட்டார். அதற்கு என்ன ஆதாரம்
என்றேன். டிஎன்ஏ சோதனைக்கு நான் தயாராக உள்ளேன். அதுபோல் சோபன் பாபுவின்
மகனும் தயாராக உள்ளார் என்றார்.;அம்ருத்தா, சோபன் பாபுவின் மகன், ஜெயலலிதா ஆகியோரது டிஎன்ஏக்களை
பார்த்தால் போதும் ஜெயலலிதாவுக்கும் சோபன்பாபுவுக்கும் பிறந்த மகள்
அம்ருத்தாதான் என்பது உறுதியாகிவிடும். டிஎன்ஏவுக்கு ஜெயலலிதாவின் தொடை
எலும்புகளும், பற்களும் தேவை என்பது தவறான தகவல். ஒரு முக்கிய பிரமுகர்
இறக்கும் போது அவரது முடி, ரத்தம் போன்ற ஏதாவது ஒரு டிஎன்ஏவை அப்பல்லோவில்
எடுத்து வைத்திருப்பர். இது சட்டமும் கூட. அதை நீதிமன்றம் மூலம் கேட்டால்
நிச்சயம் கிடைத்துவிடும்.
நான்
கூறிய அங்க லட்சணம், கை வாக்கு, நோய் தன்மை ஆகியவற்றை கொண்டு அம்ருத்தாதான்
ஜெயலலிதாவின் மகள் என்பது 40 சதவீதம் உறுதிப்படுத்தலாம். மீதி 60
சதவீதத்தை டிஎன்ஏ கொண்டு மட்டுமே உறுதிப்படுத்த முடியும்.ஜெயலலிதாவின்
மரணம் என்பது மருந்துகளால் ஏற்பட்ட பின்விளைவுகள்தான்.
ஜெயலலிதா போயஸ் கார்டனில் இறந்தபிறகுதான் அவரை அப்பல்லோவுக்கு அழைத்து
சென்றனர் என்று கூறுவதில் உண்மை இல்லை. இறந்த ஒருவருக்கு டிரக்கோடியம்
சிகிச்சை செய்ய முடியாது. அவரது மரணம் முழுக்க முழுக்க அவருக்கு
வழங்கப்பட்ட மருந்துகளால் மட்டுமே நடந்துள்ளது. மருந்துகளின் பக்க விளைவு
ஒரு புறம் இருந்தாலும் உணவு பழக்கம், சரியான கவனிப்பின்மையால் இதயம்,
சிறுநீரகம், கல்லீரல் என சிறுக சிறுக பாதிக்கப்பட்டு அவர் இறந்துவிட்டார்.
இதற்கு அவருக்கு சிகிச்சை (ஸ்டீராய்டு கொடுத்த மருத்துவர்கள்) அளித்த
அனைத்து மருத்துவர்களும் பொறுப்பேற்க வேண்டும். ஒன்றரை கோடி மக்களின்
தலைவியாக இருந்த ஒருவருக்கு ஸ்டீராய்டு மருந்துகளை கொடுப்பதனால் எத்தனை
பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிந்தும் அவருக்கு முன்பு சிகிச்சை அளித்த
மருத்துவர்கள் யாரும் இதை கட்டுப்படுத்தாததும் கொஞ்சம் கொஞ்சமாக
குறைக்காததும் வேதனை அளிக்கிறது என்றார் டாக்டர் சங்கர்.
://tamil.oneindia.com/
://tamil.oneindia.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக