ஜெருசலேம் விவகாரத்தில் இந்தியா ஏன்
இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கவில்லை? ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த
அமெரிக்காவின் அறிவிப்பிற்கு எதிராக ஐ.நா பொதுச்சபையில் இந்தியா
வாக்களித்ததற்கு காரணம் என்ன?
ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அறிவிப்பிற்கு பரவலான எதிர்ப்புகள் எழுந்தன.
அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை நிராகரிக்கும் தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் வெற்றி பெற்றது. 128 நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த நிலையில் 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 9 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்துள்ளன.
இந்த விஷயத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கவேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் மோதி தலைமையிலான அரசுக்கு அழைப்பு விடுத்தனர்.
ஐ.நா தீர்மானத்தில் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னதாக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஸ்வப்ன தாஸ் குப்தா வெளியிட்டிருந்த டிவிட்டர் பதிவில், ”இஸ்ரேல் நமது நட்பு நாடு என்பதால் ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை நிராகரிக்கும் தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கக்கூடாது அல்லது எதிர்க்கவேண்டும்” . என்று தெரிவித்தார்.
ஆனால், இந்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்தது. அதாவது, அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் எதிராக இந்தியா வாக்களித்தது.
இந்தியா ஐ.நா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது சில பிரிவினருக்கு ஏமாற்றமளித்திருக்கிறது. “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களிக்காத இந்தியா பெரிய தவறை செய்துவிட்டது” என்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமி.
ஆனால், இந்தியாவின் இந்த நிலைப்பாட்டுக்கு காரணம் என்ன? அண்மைகாலங்களில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நட்பாக இருந்த இந்தியாவின் இந்த முடிவுக்கு காரணம் என்ன?
இதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். சர்வதேச விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர் கமால் பாஷா, இந்தியாவின் இந்த முடிவின் பின்னணியில் இரண்டு காரணங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டுகிறார்.
”இந்த விவகாரத்தில் சர்வதேச சமுதாயம் ஒத்த கருத்தை கொண்டுள்ளது. இஸ்தான்புலில் நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு உச்சி மாநாட்டிலும் இதேதான் எதிரொலித்தது. பல்வேறு நாடுகளின் மனோநிலை அமெரிக்காவின் அறிவிப்புக்கு எதிராகவே இருக்கிறது.”
”எனவே, இந்தியாவின் சர்வதேச சமூகத்தின் கருத்தையொட்டி செயல்படுகிறது. கடலில் பயணிக்கும்போது அலையின் போக்கிற்கு ஏற்றவாறு நீச்சலடிப்பதுதான் புத்திசாலித்தனம்”
”இரண்டாவதாக, இஸ்ரேலுடன் இந்தியாவின் உறவு வலுப்பெற்று வருகிறது, அதுவும் குறிப்பாக ஆயுதத்துறையில். ஆனால் அது குறித்து அண்மையில் மேற்கொண்ட உடன்பாடு தொடர்பாக சர்ச்சைகளும் எழுந்துள்ளன” .என்று அவர் தெரிவித்தார்.
”இஸ்ரேல் தொடர்பாக செளதி அரேபியா மற்றும் கத்தார் போன்ற இஸ்லாமிய நாடுகளில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்தியா இந்த நாடுகளுடன் நல்ல உறவை கொண்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.
”இருதரப்பு உறவுகள் என்பது தனிப்பட்ட விடயம், ஆனால் சர்வதேச விவகாரங்களில் வித்தியாசமான நிலைப்பாடு நாங்கள் எடுக்கலாம் என்ற சமிக்ஞையை UNGAவில் அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்திருப்பதன் மூலம் இந்தியா தெரிவித்துள்ளது” என்கிறார் பாஷா.
ஜெருசலேம் ஒரு தீர்க்கப்படாத சர்ச்சையாகத் தொடர்ந்து வரும் நிலையில் அந்நகரை இஸ்ரேலின் தலைநகராக ஏற்பதாக அறிவித்த அமெரிக்காவின் முடிவு தொடர்பாக இஸ்லாமிய நாடுகள் மற்றும ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியாவும் கைகோர்த்துவிட்டது என்கிறார் பாஷா.
இந்தியா பல ஆண்டுகளாக பாலத்தீனத்துடன் வலுவான உறவு இருப்பதுதான் ஐ.நா தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்தற்கு காரணமா?
”யாசர் அராஃபத்தின் காலம் மீண்டு வரப்போவதில்லை என்பது நிதர்சனம். காலம் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் நிலைமையை அனுசரித்து நடக்கவேண்டியது இந்தியாவிற்கு அவசியமானது” என்று பாஷா முத்தாய்ப்பாய் முடிக்கிறார்.
ஐ.நா தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா, இஸ்ரேல், குவாத்தமாலா, ஹோண்டுராஸ், மார்ஷல் தீவுகள், மைக்ரோனேஷியா, நௌரு, பாலூ மற்றும் டோகோ ஆகிய நாடுகள் வாக்களித்தன.
பாலத்தீனியம் மற்றும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவை இந்தியா சமநிலையில் தொடர்ந்தாலும், அண்மைக் காலங்களில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான இந்தியாவின் உறவு வலுவாகிவிட்டதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.
அமெரிக்காவின் டெலாவேர் பல்கலைக்கழக பேராசிரியர் முக்தர் கானின் கருத்துப்படி, ”இந்தியா பெரும்பாலும் சட்டத்திற்கு உட்பட்டே நடக்கும். இந்தியாவிற்கு அதன் தேசிய நலனே முக்கியமானது. சர்வதேச விதிகளின்படி இந்தியா நடந்துகொண்டால், அதன் பிரதான பிரச்சனையான காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவு கிடைக்கும் என்பதே முக்கியம்”.
இந்தியா இதுபோன்ற தீர்மானத்திற்கு ஆதரவளிப்பது ஒன்றும் புதிதல்ல. ஏனெனில் இந்த விவகாரத்தில் கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவின் நிலை இதுதான், பல முறை இந்தியா இந்த கருத்துக்கு ஆதரவாகவே வாக்களித்திருக்கிறது.
புனித ஜெருசலேம் நகரம் தொடர்பாக இஸ்ரேலுக்கும், பாலத்தீனத்திற்கும் இடையிலான பிரச்சனை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.
இஸ்ரேல்-அரபு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனைகளில் பிரதானமாக விளங்குவதும் ஜெருசலேம். யூதம், இஸ்லாம் மற்றும் கிறித்துவ மத்ததினர் புனிதமாக கருதும் இடம் ஜெருசலேம்.
நபிகள் நாயகத்தின் வாழ்க்கையுடன் இணைந்த ஜெருசலேம் நகரை இந்த மூன்று மதங்களும் புனிதமான இடமாக கருதுகின்றன.
பல நூற்றாண்டுகளாக இஸ்லாமியர், யூதர்கள் மற்றும் கிறித்துவர்களின் இதயங்களில் இந்த நகரத்தின் பெயர் புனித நகராக பதிந்துவிட்ட்து. ஹீப்ரு மொழியில் ‘யெருஷ்லாயீம்’ என்றும், அரபியில் ‘அல்-குதஸ்’ என்றும் அழைக்கப்படும் ஜெருசலேம் நகரம் உலகின் பழமையான நகரங்களில் ஒன்று.
பல முறை ஆக்கிரமிக்கப்பட்ட இந்த நகரம், பலமுறை இடிக்கப்பட்டு மீண்டும் புனரமைக்கப்பட்டது. இந்த புனித நகரின் மண்ணின் ஒவ்வொரு துகளிலும் வரலாற்றின் சுவடுகள் மறைந்துள்ளது.
வரலாற்றுடன் பல்வேறு மதங்களை சேர்ந்த மக்களை இணைக்கும் ஜெருசலேம், தற்போது பல்வேறு மதங்களை சேர்ந்த மக்களிடையே ஏற்படும் பிரிவுகள் மற்றும் மோதல்களின் காரணமாக, தலைப்பு செய்திகளில் இடம்பெற்றுள்ளது.
நகரின் மையத்தில் இருக்கும் புராதன நகரத்தின் குறுகிய வீதிகள் கிறித்துவம், இஸ்லாம், யூத மற்றும் ஆர்மீனிய வரலாற்று கட்டிடக்கலையின் சான்றாக நான்கு பகுதிகளாக இருக்கின்றன.
உலகின் மிகவும் புனிதமான நகராக கருதப்படும் ஜெருசலேமில் அமைந்துள்ளன ஒரு சுவரை சுற்றி இந்த மதங்களுக்கான புனித தளங்கள் அமைந்துள்ளன. அங்கு அந்தந்த மதங்களை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர்.
இந்த புனித நகரில் அர்மீனியக் குடியிருப்பு, கிறித்துவ குடியிருப்பு, யூத குடியிருப்பு, முஸ்லிம் குடியிருப்புகள் என நான்கு குடியிருப்புகள் உள்ளன.
கிறித்துவர்களுக்கு இரண்டு குடியிருப்புகள் உள்ளதாக சொல்லலாம், ஏனெனில், அர்மீனியர்களும் கிறித்துவர்களே. நான்கு குடியிருப்புகளில் மிகவும் பழமையானது அர்மீனிய குடியிருப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆர்மீனியர்களின் மிகவும் புரதான நகரமான இங்கு, புனித தோமையர் தேவாலயம் மற்றும் ஆர்மீனிய மடாலயத்தில் தங்கள் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை பாதுகாத்து வருகின்றனர் அந்த மதத்தினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக