குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற
தேர்தலுக்கான முடிவுகள் இன்று (திங்கள்கிழமை) வெளியாகவுள்ள நிலையில், காலை 8
மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியுள்ளது. 182 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில்,
கடந்த 9 மற்றும் 14 ஆம் தேதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இருகட்ட
வாக்குபதிவின் சராசரி 68.41 சதவீதம் ஆகும்.
இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையின் முதல் பகுதியாக தபால் வாக்குகளை எண்ணும் பணி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
குஜராத்தில் உள்ள 37 மாவட்டங்களில் உள்ள அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் நடைபெறும் இந்த வாக்கு எண்ணிக்கை தொடர்பாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குஜராத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக 115 இடங்களையும், காங்கிரஸ் 61 இடங்களையும் வென்றன.
இதே போல மொத்தம் 68 தொகுதிகள் உள்ள இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
இமாச்சல பிரதேசத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 36 இடங்களையும், பாஜக 27 இடங்களையும் வென்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக