திங்கள், 18 டிசம்பர், 2017

EVM Scandal வாக்குகளை திருடுய பாஜக ... ஜனநாயக உலகுக்கு சவால்?

Swathi K  : "எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்" 
- கடந்த இரண்டு வருடமாக இந்த கார்ப்பரேட்/ RSS ஆட்சிக்கு எதிராக மக்களிடையே(பக்தாள் பற்றி சொல்லவில்லை) விழிப்புணர்வு வளர்ந்து வருவது பாராட்டத்தக்கது. எந்த ஒரு ஆட்சி மாற்றமும், நடுநிலை மக்கள் மற்றும் முதல்முறை ஓட்டு போடுபவர்களால் தான் நடக்கிறது (கிட்டத்தட்ட 25-30% இதில் அடங்கும்). இந்த மக்கள் தான் 2014ல் மோடியின் போலி தேசபக்தி, பஞ்ச் டயலாக், பொய்யான விளம்பரத்தை நம்பி என்னைப் போல மோடிக்கு ஓட்டு போட்டு பிரதமர் ஆக்கியவர்கள். இப்போது மோடியின் முகமூடி கிழிந்த காரணத்தால் இந்த மக்களுக்கு மோடி எதிரி ஆகி இருக்கிறார். நாடு முழுவதும் 2014ல் காங்கிரஸ்க்கு எதிராக வீசிய அலைக்கு மேல் இப்போதே மோடிக்கு எதிராக வீச ஆரம்பித்தது அதிசயம் இல்லை.. இப்படி ஒருபுறம் இருக்க பிஜேபி கட்சியின் ஓட்டு சதவிகிதம் மட்டும் கூடுவது எல்லோருக்கும் எழும் சந்தேகம் தான். இந்த ஓட்டு விகிதம் கூடுவதற்கு "வோட்டிங் மெஷின்" ஒரு காரணமா என்று பார்ப்போம். அதற்க்கு தான் இந்த கட்டுரை.
EVM has three units,
1. Ballot Unit - ஓட்டு போடும் எந்திரம்
2. Control Unit - ஓட்டு எண்ணிக்கை காட்டும் எந்திரம்
3. VVPAT - உங்கள் ஓட்டுக்கு ரசீது கொடுக்கும் எந்திரம்
இதுவரை பிரச்சனைகள்னு மக்கள் சொன்னது.
1. காங்கிரஸ்க்கு ஓட்டு போட்டா பிஜேபி லைட் எரியுது.
2. காங்கிரஸ்க்கு ஓட்டு போட பட்டன் அழுத்த முடியவில்லை.
3. ப்ளூடூத்/ wifi கனெக்ட் ஆகுது.
4. VVPAT - நான் காங்கிரஸ்க்கு ஓட்டு போட்டேன் ஆனால் பிஜேபிக்கு ஓட்டு போட்ட மாதிரி receipt வருது.
5. EVM Rigging, Tampering.
மேலே உள்ள எல்லாமே உண்மையில் மெஷின் பிரச்சனையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. Or EVMல் இருக்கும் மிகப்பெரிய இமாலய திருட்டை மறைக்க பிஜேபி வழக்கம் போல செய்யும் சின்ன கிரிமினல் வேலையாக இருக்கலாம். அந்த மிகப்பெரிய EVM தவறு பற்றி கீழே விவரிக்கிறேன்.
மோடி & அமித்ஷா என்ன ஜோல்னா பை போட்டுட்டு, குச்சி மிட்டாய் சப்பிட்டே ஸ்கூல்க்கு போர குட்டி பசங்களா என்ன ? மேலே உள்ள மாதிரி தப்பு பண்ண!!. தீர்ப்பு தனக்கு எதிரா வரும்னா ஜட்ஜ்'ய போட்டு தள்ளிட்டு யாராவது பாத்த அவர்களையும் அந்த இடத்தில தடயம் இல்லாம முடிச்சுட்டு போறவங்க. 38 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளவர் அமிட்ஷா.


அந்த மெகா EVM கோல்மால் எதுவாக இருக்கும்? எது நடந்து கொண்டு இருக்க வாய்ப்பு இருக்கிறது என்றால்,
EVM control unit (ஓட்டு எண்ணிக்கை காட்டும் எந்திரம்) யில் "மைக்ரோ சிப்" மற்றும் அதில் ஒரு சாப்ட்வேர் (மென்பொருள்) இருக்கும். இதை உங்களுக்கு தேவையான மாதிரி நீங்கள் ப்ரோகிராம் பண்ண முடியும். உதாரணத்துக்கு, ஒரு ஓட்டு சாவடியில் மொத்தம் பதிவான ஓட்டு 1000 என்று வைத்து கொள்வோம்.. தாமரை சின்னத்துக்கு மேல் வேறு சின்னம் அதிகம் ஓட்டு வாங்கி இருந்தால் அவர்களின் ஓட்டில் இருந்து 5% ஓட்டை தாமரைக்கு மாற்ற முடியும்.
இதெல்லாம் ரொம்ப சின்ன மேட்டர். அந்த சாவடியில் உண்மையில் காங்கிரஸ் 48% (480) ஓட்டும் பிஜேபி 41% (410) வாங்கி இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளுங்கள்.. கடைசியில் ஓட்டு எண்ணிக்கை வரும் போது காங்கிரஸ்க்கு அந்த மெஷின் 430 (48%-5%=43%) என்று காட்டும். பிஜேபிக்கு 460(41%+5%=46%) என்று காட்டும். இந்த 5%.. 2% இருக்கலாம்.. or 10% கூட இருக்கலாம். இந்த மென்பொருள் திருட்டுத்தனம் எல்லா வோட்டிங் மெஷின்லையும் இருக்கும். இதனால் ஒரு குறிப்பிட்ட சதவிகித ஓட்டை ஒரு கட்சிக்கு சார்பாக மாற்ற முடியும்

கருத்துகள் இல்லை: