Shyamsundar - Oneindia Tamil டெல்லி: 2ஜி தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்று அமலாக்கத்துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. 2ஜி வழக்கில் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிபதி ஓ.பி. சைனி வழங்கிய தீர்ப்பில் 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்த போது , ''அமலாக்கத்துறை ஆதாரங்களை மிகவும் சிறப்பாக சேகரித்துள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் ஆதாரங்கள் பலவும் மிகவும் சரியான முறையில் திரட்டப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டது. தற்போது இதைவைத்து அமலாக்கத்துறை சிபிஐ அளித்த 2ஜி தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய இருக்கிறது. ஆதாரங்கள் குறித்து கோர்ட் கூறியதை தங்கள் மேல்முறையிட்டில் சுட்டிக்காட்ட அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக