BoochiMarunthu :பணத்தடையின் போது எல்லோரும் பணம் இல்லாமல் தவித்தபோது பிஜேபி மந்திரி திமிராக 500 கோடிக்கு திருப்பதி செட் , ஹெலிகாப்டர் , தங்கத்தில் அழைப்பிதழ் என்று செலவு செய்தார் , இன்று வரை ஒரு raid கைது வழக்கோ இல்லை . இவர்கள் தான் ஊழலை ஒழிகிறார்களாம் .
தினமலர் :முன்னாள் மத்திய அமைச்சர், ஜெயந்தி நடராஜனின் வீட்டில், தங்க நகை குவியல் சிக்கியது தொடர்பாக, வருமான வரித்துறையினர், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், தமிழகத்தைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவி வகித்தார். அவரால், தனியார் சுரங்க ஒதுக்கீட்டில் பிரச்னை ஏற்பட்டதாக, காங்., கட்சிக்குள்ளாகவே புகார் எழுந்தது. இதையடுத்து, 2013 டிசம்பரில், ஜெயந்தி நடராஜன் பதவி விலகினார்; பின், காங்., கட்சியில் இருந்து விலகினார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த, சி.பி.ஐ., அதிகாரிகள், 2017 செப்டம்பரில், சென்னை, மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில், சோதனை நடத்தினர். அப்போது, முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அப்போது, ஜெயந்தி வீட்டில் இல்லை.
இந்நிலையில், அவரின் வீட்டில், டில்லி, சி.பி.ஐ., அதிகாரிகள், டிச., 12ல், மீண்டும் சோதனை நடத்தினர். அப்போது, வருமான வரித்துறையினரும், சோதனையில் இணைந்தனர்.
இது குறித்து, தமிழக வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் கூறியதாவது: ஜெயந்தி நடராஜன் வீட்டில், சோதனை நடத்திய போது, சி.பி.ஐ., அதிகாரிகள், எங்களை அழைத்தனர். அங்கு சென்ற போது, ஏராளமான தங்க நகைகள் இருந்தன. அப்போது, விளக்கம் அளிக்கப்படாததால், சி.பி.ஐ., அதிகாரிகள், எங்களுக்கு தகவல் தெரிவித்து விசாரிக்க கோரினர்.
நாங்கள், சிக்கிய தங்க நகைகள் குறித்து, ஜெயந்தியிடம் விசாரணை மேற்கொண்டோம். அதற்கு, 'சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனையிட்ட போது, வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்று விட்டனர். அதனால், உடனடியாக என்னால் விளக்கம் தர முடியாது. எனக்கு கால அவகாசம் தேவை' என, கேட்டார். நாங்கள், ஒப்புக்கொண்டோம்; அவரின் விளக்கத்திற்காக காத்திருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக