தினமலர் : போபால், ம.பி., விமான நிலையத்தில், காங்., மூத்த தலைவர், கமல்நாத்தை
சுடுவதற்கு, துப்பாக்கியால் குறிபார்த்த போலீஸ்காரர், 'சஸ்பெண்ட்'
செய்யப்பட்டார்.காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான,
கமல்நாத், 71, ம.பி.,யைச் சேர்ந்தவர். இவர், நேற்று முன்தினம், டில்லி
செல்வதற்காக, ம.பி.,யில் உள்ள, சிந்த்வாரா விமான நிலையத்துக்கு வந்தார்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர், தன்
துப்பாக்கியை எடுத்து, கமல்நாத்தை நோக்கி குறிவைத்தார்.இதை பார்த்த சக
போலீஸ்காரர்களும், பாதுகாப்பு படையினரும், அவரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், அந்த போலீஸ்காரர்
பெயர், ரத்னேஷ் பவார் என, தெரிந்தது. அவர், மன அழுத்தம் காரணமாக, இவ்வாறு செய்தாரா அல்லது வேண்டுமென்றே செய்தாரா என, போலீசார் விசாரிக்கின்றனர். ஆனாலும், இந்த சம்பவம் தொடர்பாக, கமல்நாத்திடம், அதிகாரிகள் எதையும் தெரிவிக்கவில்லை. அவர், டில்லி சென்றதற்கு பின் தான் தெரிவிக்கப்பட்டது.இது குறித்து, ம.பி., போலீசார் கூறியதாவது:ரத்னேஷிடம் விசாரித்து வருகிறோம். முதற்கட்ட விசாரணையில், தான், கமல்நாத்தை கொல்லும் நோக்குடன், துப்பாக்கியால் குறிவைக்கவில்லை என்றும், யதார்த்தமாக துப்பாக்கியை எடுத்ததாகவும், சந்தேகப்பட்டு, போலீசார் தன்னை பிடித்து விட்டதாகவும்
தெரிவித்தார். இதையடுத்து, பணியிலிருந்து அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக