tamilthehindu : குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச தேர்தல்களில் மக்களின் தீர்ப்பை
காங்கிரஸ் ஏற்றுக் கொள்கிறது என அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
கூறியுள்ளார்.
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இரு மாநிலங்களிலும் பாஜக வெற்றி அடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‘‘குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச தேர்தலில் மக்களின் தீர்ப்பை காங்கிரஸ் ஏற்றுக் கொள்கிறது. இரு மாநிலங்களிலும், புதிதாக அமையவுள்ள அரசுகளுக்கு எனது வாழ்த்துகள். அம்மாநில மக்கள் தங்களின் அன்பையும், மனதார வாழ்த்துகளையும் எனக்கு தெரிவித்துள்ளதாகவே எண்ணுகிறேன்.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றவர்களை போல் அல்லாமல் கண்ணியத்துடன் பிரச்சாரம் செய்துள்ளனர். காங்கிரஸின் பலத்தையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் வகையில் காங்கிரஸ் தொண்டர்களின் பிரச்சாரம் அமைந்தது. இதுன் மூலம் காங்கிரஸ் தொண்டர்கள் என்னை பெருமை அடையச் செய்துள்ளனர்’’ எனக் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக