ஞாயிறு, 8 அக்டோபர், 2017

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலையாளிகள் பிடிபட்டனர் .. இந்துத்வா பயங்கரவாதிகள்

Subramanian Ramakrishnan : கௌரி கொலையாளிகள் அடையாளம் தெரிந்தது
குற்றவாளிகள் பட்டியலில் சங்பரிவாரைச் சேர்ந்த சனாதன் சன்ஸ்தா அமைப்பினர் பெயர்
பெங்களுரு, அக். 7- மூத்த பத்திரிகையாளரும் சங்பரிவார்அமைப்புகளை விமர்சித்து வந்தவருமான கௌரி லங்கேசை செப்டம்பர் 5ஆம்தேதி இரவு அவரது வீட்டருகே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.சங்பரிவாரில் உள்ள தீவிர இந்துத்துவ அமைப்பு சனாதன் சன்ஸ்தாஇன்டர்போல் தேடி வரும் நான்கு பேர் உட்பட ஐந்து நபர்கள் கௌரி லங்கேஷ் கொலையில் தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
2009 இல் கோவாவில் மட்காவில் நடந்த குண்டு வெடிப்பிலும் இவர்களுக்கு தொடர்புள்ளது தெரியவந்துள்ளது.
கொலையாளிகள் கோலாப்பூரைச் சேர்ந்த பிரவீண் ரிங்கார் (34), மங்களுருவைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (45),
புனேவைச் சேர்ந்த ஸாரங் அகோல்கர் (38),
ஸாங்க்ளியைச் சேர்ந்த ருது பாட்டீல் (37),
சத்தாராவைச் சேர்ந்த வினய்பவார் (32)
ஆகியோர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் ருதுபாட்டீல், ஸாரங் அகோல்கர், வினய் பவார்ஆகியோர் 2013 முதல் தலைமறைவாக உள்ளனர். சங்பரிவார் அமைப்புகளின் பிரிவினைவாத நடவடிக்கைகளை விமர்சித்து வந்த நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே, எம்.எம்.கல்புர்கிஆகியோர் கொலைகளிலும் இவர்களுக்கு தொடர்புள்ளது. தபோல்கர் கொலையில் சிபிஐயும், பன்சாரே கொலையில் மகாராஷ்ட்டிரா சிறப்பு விசாரணைக்குழுவும் இவர்களை தேடி வருகின்றன.
கல்புர்கி கொலையாளிகளுக்கும், கௌரி கொலையாளிகளுக்குமிடையில் தொடர்புள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவரது உடல்களிலிருந்தும் எடுக்கப்பட்ட குண்டுகள் ஒரே அளவில் உள்ளன. இருவரையும் 7.65 மி.மீநாட்டு கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். பன்சாரேயை கொல்லவும்இதே துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளனர். தங்களது செயற்பாட்டாளர்களில் சிலர் தலைமறைவாக உள்ளதாக அண்மையில் பத்திரிகையாளர்களிடம் சனாதன் சன்ஸ்தா அமைப்பின் தலைவர் சஞ்சய் புனலேகர் வெளிப்படையாக கூறினார்.
யார் இந்த சனாதன் சன்ஸ்தா ?
கௌரி லங்கேஷ் கொலையில் காவல்துறையினர் வெளிப்படுத்திய தகவல்கள் மூலம் இந்துத்துவ தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தா யின் முகம் தெளிவாகியுள்ளது. தபோல்கர் கொலையில் இந்த அமைப்புடன் தொடர்புள்ள ஜன ஜாக்ருதி சமிதி (எச்ஜெஎஸ்) தலைவர் டாக்டர் வீரேந்திரதவாடே யும், பன்சாரே கொலையில் சனாதன் சன்ஸ்தாவின் உறுப்பினர் ஸமீர் கெய்க்வாட்டும் கைது செய்யப்பட்டனர். மகாராஷ்ட்டிரா, கோவா எல்லைப்பகுதியில் 1990 இல் ஸனாதன் ஸன்ஸ்த அமைப்பு உருவாக்கப்பபட்டது. கோவாவை தளமாக கொண்டு செயல்படுகிறது. ஹிப்னாட்டிக் தெராபிஸ்டான ஜெயந்த் பாலாஜி அதாவலே இந்த அமைப்பின் ஸ்தாபகர். ஆர்எஸ்எஸ் போலவே இந்துநாடு நிறுவ வேண்டும் என்பது இந்த அமைப்பின் லட்சியம். மதத்தை பாதுகாக்க நக்சல்களைப்போல் செயல்படவேண்டும் என பிரகடனம் செய்துள்ளனர்.2008 இல் மும்பையில் வாஸி, தானே,பன்வேல் போன்ற இடங்களில் நடந்தகுண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்துஇந்த அமைப்பு வெளி உலகுக்கு தெரியவந்தது.
கோவாவில் கிறிஸ்தூன் தேவாலயத்தில் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் இந்த அமைப்புக்கு தொடர்பு இருந்தது விசாணையில் தெரியவந்தது. மட்காவில் நரகாசுரன் சிலை வைப்பதை எதிர்த்த இந்த அமைப்பின் தலைவர்கள் மல்கோண்ட பாட்டீலும், யோகேஷ் நாயக்கும் இருசக்கர வாகனத்தில் வெடிகுண்டுகளுடன் அங்கு சென்ற போதுஅது வெடித்ததில் இருவரும் பலியானார்கள்.2011இல் இந்த அமைப்பை தடை செய்யுமாறு கோரிக்கை எழுந்தது. அன்றுமத்தியில் அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் அரசு தடைவிதிக்க முன்வரவில்லை. கோவாவில் பாஜக அரசு இந்த அமைப்பின் வளர்ச்சிக்கு உதவி வந்தது. மோடியும் தன் பங்கிற்கு இந்த அமைப்புக்குஉதவியுள்ளார்.//தீக்கதிர்

கருத்துகள் இல்லை: