வெள்ளி, 13 அக்டோபர், 2017

13,000 கோடி ‘யமுனா எக்ஸ்பிரஸ் ஹைவே’ஐ 2.500 கோடிக்கு விற்கிறது ஜேபி இன்ஃப்ரா!

ஹைவே கட்டுமான செலவு
ரியல் எஸ்டேட் Tamilarasu GoodReturns Tamil இந்தியாவின் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜேபி உச்ச நீதிமன்றத்திடம் டெல்லியை இணைக்கும் முக்கிய யமுனா எக்ஸ்பிரஸ் ஹைவேயை விற்று விட்டு வீடுகளை டெலிவரி செய்ய முடியாத 30,000 நபர்களின் பணத்தினைத் திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளதா கூறியுள்ளது.
ஜேபி இன்ஃப்ராடெக் நிறுவனம் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள யமுனா எக்ஸ்பிரஸ் ஹைவேயை 2,500 கோடி ரூபாய் கொடுத்து வாங்க முன்வந்துள்ள நிறுவனத்திற்கு அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
"ஜேபி நிறுவனத்தில் வீடு வாங்கி ஏமார்ந்த வாடிக்கையாளர்களுக்குப் பணத்தினைத் திருப்பி அளிக்க 2,000 கோடி ரூபாயினை உச்ச நீதிமன்றத்தில் இந்த மாத...


உச்ச நீதிமன்றம் நிபந்தனை < ஜேபி நிறுவனத்தில் வீடு வாங்கி ஏமார்ந்த வாடிக்கையாளர்களுக்குப் பணத்தினைத் திருப்பி அளிக்க 2,000 கோடி ரூபாயினை உச்ச நீதிமன்றத்தில் இந்த மாதம் 27-ம் தேதிக்குள் டெபாசிட் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. திவால் வங்கிகளிடம் இருந்து 500 கோடி ரூபாய் கடன் பெற்றுத் திருப்பி அளிக்க முடியாமல் ஜேபி இன்ஃப்ராடெக் நிறுவனம் திவாலானது. இதனை அடுத்து ஜேபி நிறுவனத்தினால் வாடிக்கையாளர்களிடம் வீடு கட்டி தருவதாகக் கூறிக் குறித்த நேரத்தில் செய்ய முடியாததால் பெறும் சிக்கலில் மாட்டிக்கொண்டது.

ரியல் எஸ்டேட்  இதேப்போன்று இந்தியாவின் பல நகரங்களில் உள்ள மக்கள் வீடு வாங்க வேண்டும் என்ற கனவோடு பணத்தினைக் கட்டுமான நிறுவனங்களிடம் அளித்துவிட்டு வீட்டையும் பெற முடியாமல் கட்டிய பணமும் கிடக்காமல் 2000-ம் ஆண்டு முதல் சிக்கி தவிக்கின்றனர்.

எனவே வல்லுநர்கள் முடிந்தவரைக் கட்டி முடித்த வீடுகளை வாங்கவே பரிந்துரைக்கின்றனர். மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்கள்

மேலும் சில நிறுவனங்கள் வீடு காட்டி தருவதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தினை வாங்கிய பிறகு தங்களது முந்தைய திட்டங்களுக்கு முதலீடு செய்டதுவிட்டு திவால் ஆகியும் உள்ளன.

ஹைவே கட்டுமான செலவு
 டெல்லியை இணைக்கக் கூடிய ஆறு வழி சாலையான யமுனா எக்ஸ்பிரஸ் ஹைவேயை 2012-ம் ஆண்டு ஜேபி நிறுவனம் 13,000 கோடி ரூபாய் செலவில் போட்டது. மேலும் இந்தப் பாதையில் இருக்கும் டோல்வே மூலம் பணம் சம்பாதித்தும் வருகின்றது.

கருத்துகள் இல்லை: