
இந்த வழக்கின் விசாரணை கடந்த திங்கட்கிழமை முதல் தலைமை நீதிபதி கே.எம். ஜோசப், நீதிபதி வி.கே. பிஸ்த் ஆகியோரை கொண்ட அமர்வின் முன் நடந்து வந்தது. அப்போது மத்திய அரசின் நடவடிக்கையை நீதிபதிகள் கடுமையாக விமர்சித்தனர். நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் , உத்தரகாண்டில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதை ரத்து செய்து, தீர்ப்பு அளித்தனர். dailythanthi.com
இது
மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்ட நிலையில், உத்தரகாண்ட்
உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்
முறையீடு செய்தது. இந்த மனுவை பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச
நீதிமன்றம், உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை
விதித்து உத்தரவிட்டது.
உத்தரகாண்டில்
குடியுரசுத்தலைவர் ஆட்சி 27 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும்,
உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற உத்தரவு 26 ஆம் தேதிக்குள் அனைத்து
தரப்புக்கும் கிடைக்க வேண்டும் எனவும், அதுவரை குடியரசு தலைவர் ஆட்சியை
திரும்ப பெற மத்திய அரசுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவித்தது.
உத்தரகாண்ட் நீதிமன்ற உத்தரவையடுத்து அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சி ரத்து
செய்யப்பட்டு இருந்த நிலையில், இடைக்கால தடையால், 27 ஆம் தேதி வரை
குடியரசு தலைவர் ஆட்சி அமலில் இருக்கும். இந்த வழக்கின் அடுத்த கட்ட
விசாரணையை வரும் 27 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்து
உத்தரவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக