விகடன் .com கரூரில்
அ.தி.மு.க பிரமுகர் அன்புநாதனின் வீடு மற்றும் குடோனில் பிடிபட்ட நோட்டுக்
கட்டுகளால் பலத்த அதிர்வலைகளைக் கிளப்பி வருகிறது. பணம் பறிமுதல்
செய்யப்பட்டதைவிடவும், அதை மறைப்பதற்கு மாவட்ட அளவிலான அதிகாரிகள் சிலர்
செய்யும் தில்லுமுல்லுகளால் அதிர்ந்து போய்
இருக்கிறார்கள் அரவக்குறிச்சி மக்கள். ரெய்டு நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை அழித்துவிட்டதாகவும் பேசப்படுகிறது. யார் இந்த அன்புநாதன்?t;அ.தி.மு.க.வின் ஐவரணி அமைச்சர்களில் சிலரோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவர்தான் இந்த அன்புநாதன். அவர்களின் பணத்தை இவர்தான் பதுக்கி வைத்திருந்தாராம். திருச்சியில் இருந்து மதுரை செல்வதாக இருந்தால் கூட விமானத்தில்தான் பறப்பார்.
சமீபத்தில் ஜெயலலிதா கட்சியின் சீனியர்கள் சிலர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தபோது, அன்புநாதன் சம்பந்தப்பட்ட வீடு, தோப்புகளில் ரெய்டு நடந்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில்,10 சட்டமன்ற மன்ற தொகுதிகளுக்கான தேர்தல் செலவு செய்யும் பொறுப்பு ஒரு அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்தப் பணத்தைத்தான் அன்புநாதன் பதுக்கி வைத்திருந்தாக சொல்லப்படுகிறது. கரூர், அய்யம்பாளையத்தில் அன்புநாதன் என்பருக்குச் சொந்தமான குடோனில் இருந்து சுற்றுவட்டார ஊர்களுக்கு பணம் கடத்தப்பட்டு அங்கங்கே பதுக்கி வைப்பதுதான் திட்டம். அதற்காக, அன்புநாதன் குடோன் உள்ள ஏரியாக்களில் தினமும் சில மணிநேரம் கரண்ட் கட் ஆகியிருக்கிறது.
அந்த
நேரத்தில், ’இது மத்திய அரசுக்கு சொந்தமானது’ என்கிற ஸ்டிக்கருடன்
ஆம்புலன்ஸ் வேன்கள் அங்குமிங்கும் சென்றிருக்கின்றன. இதை திகைப்புடன் அந்த
ஏரியா மக்கள் கவனித்திருக்கிறார்கள். இந்த நூதனமான முறையில் பணம் எடுத்துச்
கடத்தப்படும் தகவல் வருவாய்த் துறை அதிகாரிகளுக்குக் கிடைக்கவே, நேற்று
முன்தினம் மாலையில் கரூர் மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே தலைமையிலான
அதிகாரிகள் ரெய்டுக்குக் கிளம்பினர். தொடர்ந்து இரண்டு நாட்களாக தீவிர
ரெய்டு நடந்து வருகிறது. தேர்தல் செலவு கணக்குப் பார்வையாளர் ஆசிஷ், வருமான
வரித்துறை அதிகாரி மணிகண்டன், டி.ஆர்.ஓ அருணா ஆகியோரும் விசாரணையில்
இறங்கியுள்ளனர். இருக்கிறார்கள் அரவக்குறிச்சி மக்கள். ரெய்டு நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை அழித்துவிட்டதாகவும் பேசப்படுகிறது. யார் இந்த அன்புநாதன்?t;அ.தி.மு.க.வின் ஐவரணி அமைச்சர்களில் சிலரோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவர்தான் இந்த அன்புநாதன். அவர்களின் பணத்தை இவர்தான் பதுக்கி வைத்திருந்தாராம். திருச்சியில் இருந்து மதுரை செல்வதாக இருந்தால் கூட விமானத்தில்தான் பறப்பார்.
சமீபத்தில் ஜெயலலிதா கட்சியின் சீனியர்கள் சிலர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தபோது, அன்புநாதன் சம்பந்தப்பட்ட வீடு, தோப்புகளில் ரெய்டு நடந்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில்,10 சட்டமன்ற மன்ற தொகுதிகளுக்கான தேர்தல் செலவு செய்யும் பொறுப்பு ஒரு அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்தப் பணத்தைத்தான் அன்புநாதன் பதுக்கி வைத்திருந்தாக சொல்லப்படுகிறது. கரூர், அய்யம்பாளையத்தில் அன்புநாதன் என்பருக்குச் சொந்தமான குடோனில் இருந்து சுற்றுவட்டார ஊர்களுக்கு பணம் கடத்தப்பட்டு அங்கங்கே பதுக்கி வைப்பதுதான் திட்டம். அதற்காக, அன்புநாதன் குடோன் உள்ள ஏரியாக்களில் தினமும் சில மணிநேரம் கரண்ட் கட் ஆகியிருக்கிறது.
>ரெய்டு நடந்த அன்று கலெக்டர் ராஜேஷ் சென்னையில் இருந்தார். மிகத் தாமதமாகத்தான் ரெய்டு குறித்த தகவலே அவருக்குத் தெரிய வந்துள்ளது. அதற்குள் முக்கிய அமைச்சர் ஒருவர், கார்டன் பெயரைச் சொல்லிக் கொண்டு சத்தம் போட்டிருக்கிறார். மூத்த அதிகாரிகள் சிலர் ரெய்டில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு சில குறிப்புகளைத் தந்துள்ளனர். ’சில அமைச்சர்களின் பினாமியான அன்புநாதனை தப்பிக்கவிட்டால்தான் தேர்தல் செலவு செய்யமுடியும்’ என்று ரகசிய உத்தரவுகள் பறந்தது. அதன்பிறகே, கரூர் ரெய்டு பின்னணியில் திருத்தங்கள் நடந்தது" என்றார் விரிவாக.
அய்யப்பாளையத்தில் என்ன நடக்கிறது? என்ற ரகசியத்தை அவிழ்க்க ஆணையம் தயாராக இல்லை. அன்புநாதனை கையில் வைத்துக் கொண்டே அமைச்சர்கள் சிலரை நெருக்கும் முயற்சியில் கார்டன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிறது. 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் தேர்தல் ஆணையம், 100 சதவீத உண்மையை அரவக்குறிச்சி மக்களுக்கு விளக்குமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக