இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த பூவரசன் கூறியதாவது: ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்கு அந்த ஆள் மீது சந்தேகம்தான். பலமுறை எங்க பசங்க கிட்ட பில்லி, சூனியம் பத்தி பேசியிருக்கான். இதை எங்க மக்கள் பெருசா எடுத் துக்கல. ரெண்டு மாசமா வெளிமாநிலத்திலிருந்து விலை உயர்ந்த கார்கள் எங்க கிராமத்துக்கு அடிக் கடி வர ஆரம்பிச்சது. இதுல ஏதோ இருக்குன்னு சந்தேகப்பட்டு, ஊர் மொத்தமா ஒண்ணு கூடி அந்த இடத்துக்குப் போய் பார்த்தோம். அங்க பார்த்த விஷயத்தை எப்படி சொல்றது...?
படுபாவிப்பய..சின்ன குழந்தைகளோட கை, கால்களை வெட்டி ஒரு கிண்ணத்துல அடைச்சு வெச்சிருந்தான். அதோட ஆறு மனுச மூளைகளும் அங்க இருந்துச்சு. அதைப் பார்த்து வெலவெலத்துப் போய், காவல்துறைக்கு தகவல் கொடுத்தோம் என் றார் பீதி விலகாத குரலில்.
இது தொடர்பாக, கார்த்திகேயன், சித்திக், குலாம்ராசு, ராம் குமார், சலீம், சாதிக் உட் பட அறுவரைக் கைது செய்துள்ளது காவல்துறை. அங்கு நரபலி கொடுக்கப்பட்ட குழந்தை, இந்த பகுதியைச் சேர்ந்ததா, இல்லை வேறு பகுதியைச் சேர்ந்ததா என இன்னும் கண்டறியப்படவில்லை.
இது தொடர்பாக, காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: நடந்த சம்பவம் தொடர்பாக இது வரை அறுவரைக் கைது செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது’’ என முடித்துக் கொண்டனர். விடுதலை.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக