பாட்னா:
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக பீகார் மாநில முதல்-மந்திரி
நிதிஷ்குமார் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் நிதிஷ்குமார் பிரதமர் வேட்பாளராக
களமிறங்குவார் என்றும் பேசப்படுகிறது.
நிதிஷ்குமார் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அதற்கு ராஷ்டிரிய ஜனதா
தளம் கட்சி ஆதரவு தெரிவிக்குமா? என்று நிருபர்கள் லாலு பிரசாத்திடம் கேள்வி
எழுப்பினர். அதற்கு பதிலளித்த லாலு பிரசாத், “ஆமாம் நிச்சயமாக. அதில்
எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
முன்னதாக, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து பீகாரில் மெகா கூட்டணி அமைத்து கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றது. இதனிடையே, நிதிஷ்குமார் தலைமையிலான மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியும் நடைபெற்று வருகின்றன.
2019 தேர்தலில் மோடிக்கு எதிராக ராகுல்காந்தி மட்டுமே முக்கிய பிரதமர் வேட்பாளராக இருப்பார் என்று கருதப்பட்டது. நிதிஷ்குமார் தற்போது களத்தில் இறங்கியுள்ளதால் அது ராகுல்காந்திக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. maalaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக