ஏப்.23_ இதய மாற்று
அறுவை சிகிச்சை நேயாளிகளுக்கு உதவும் வகையில், இதயத்துக்கு ரத் தத்தைச்
செலுத்தும் புதிய கருவியை இந்திய விண் வெளி ஆராய்ச்சி நிறுவனத் தின்
(இஸ்ரோ) விஞ்ஞானி கள் கண்டுபிடித் துள்ளனர்.
இதயம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மாற்று
இதய அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால், இதய தானம் செய்வோரின்
எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதேநேரம் மாற்று இதயம் தேவைப் படும் நோயாளிகளின்
எண்ணிக்கை உலகம் முழு வதும் அதிகமாக உள்ளது.
இதற்காக விஞ்ஞானி கள் செயற்கை இதயம்
தயாரித்து பரிசோதனை முறையில் பொருத்தி ஆராய்ச்சியும் செய்துவரு கின்றனர்.
எனினும், முழு அளவில் இது இன்னும் வெற்றி பெறவில்லை. அதேநேரம் செயற்கை
இதயத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து நோயாளிகளுக்கு பொருத்த
கோடிக் கணக் கில் செலவாகிறது.
இந்தச் சூழ்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள்,
பாதிக்கப்பட்ட நோயாளி களின் இதயத்துக்கு ரத் தத்தை செலுத்தும் புதிய
கருவியை (பம்ப்) கண்டு பிடித்துள்ளனர். இந்த கருவி 100 கிராம் எடை கொண்டது.
இதயத்துக்கு ரத்தத்தை எடுத்து செல்லும்
ரத்தக் குழாய்க்கு பதில் இந்த புதிய பம்ப் செயல்படும். இது இதய மாற்று
அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு பெரிதும் உதவும். இந்த பம்ப் சமீபத்தில்
திருவனந் தபுரத்தில் உள்ள மருத்து வமனையில் 5 பன்றிகளுக்கு பொருத்தி சோதனை
செய்து பார்க்கப்பட்டது. அந்த சோதனை வெற்றி பெற் றுள்ளது.
இஸ்ரோ தயாரிக்கும் ராக்கெட்டுகளுக்கு டைட்
டானியம் என்ற உலோகம் பயன்படுத்தப்படுகிறது. அந்த உலோகத்தில் இருந்து இந்த
பம்ப் தயாரிக்கப்பட் டுள்ளது.
மேலும், இந்த பம்ப் ஒரு நிமிடத்தில் 3 முதல் 5 லிட்டர் ரத்தத்தை இதயத் துக்கு செலுத்தும் திறன் கொண்டது.
மேலும், இந்த பம்ப் ஒரு நிமிடத்தில் 3 முதல் 5 லிட்டர் ரத்தத்தை இதயத் துக்கு செலுத்தும் திறன் கொண்டது.
வெளிநாட்டு செயற்கை இதயங்கள் கோடியில்
விற் கப்படும் போது, இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டுபிடித் துள்ள இந்த பம்ப்
ரூ.1.25 லட்சம்தான் என்பது குறிப் பிடத்தக்கது.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் டாக்டர் கிரண் குமார் கூறுகையில்,
ராக்கெட் தொழில் நுட்பமும், செயற்கை கோள்
தொழில்நுட்பமும் எப்படி மனிதகுலத்துக்கு பயன்படுகின்றன என்ப தற்கு இந்த
புதிய பம்ப் சிறந்த எடுத்துக்காட்டு. இதயத்துக்கு ரத்து ஒட்டம் சரியாக
இல்லாமல் பாதிக் கப்பட்டுள்ள நோயாளிக்கு இந்த கருவி மிகவும் பயன் படும்
என்றார். viduthalai.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக