மேலும் திமுக பொருளாளர் ஸ்டாலின்
திமுகவுக்கும், அழகிரிக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறியிருக்கிறாரே என
நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஆவேசமடைந்த அழகிரி ஸ்டாலினை ஒருமையில்
பேசினார். “எவன் சொன்னானோ அவனிடம் போய் கேளுங்க” என காட்டமாக பதில்
அளித்தார் மு.க.அழகிரி.யாருக்கும் ஆதரவு இல்லை: அழகிரி
வரும் சட்டப்பேரவை தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் மு.க. அழகிரியிடம் செய்தியாளர்கள், வரும் தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அழகிரி, "வரும் தேர்தலில் யாருக்கும் என் ஆதரவு இல்லை. இது என் ஆதரவாளர்களுக்கும் பொருந்தும்" எனக் கூறிச் சென்றார்.
தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி குறித்து விமர்சித்ததற்காக அழகிரி தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து தி.மு.க.,வை விமர்சித்து வந்த அவர் பின்னர் அமைதியானார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு, தந்தை - மகன் சந்திப்பு என பொருளாளர் ஸ்டாலின் கூறியது குறிப்பிடத்தக்கது. நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக