சனி, 23 ஏப்ரல், 2016

கருணாநிதியின் கபடநாடகங்களைக் கண்டு தமிழக மக்கள் ஏமாறமாட்டார்கள்: ஜெயலலிதா

திருச்சி: இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் கருணாநிதி போடும் இரட்டை வேடங்களையும், மதுவிலக்கு பற்றி கருணாநிதி போடும் கபட நாடகங்களையும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார். 
திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், வேலூர், விழுப்புரம் மாவட்டங்களிலுள்ள சட்டசபைத் தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார் Jaya blasts Karunanidhi அப்போது பேசிய ஜெயலலிதா திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலானவற்றை நிறைவேற்றவில்லை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இந்த ஜெயலலிதாதான் என்று கூறினார்.
தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிடுபவர் கருணாநிதி என்றும் தெரிவித்தார்.
 திருச்சி பிரச்சாரத்தில் ஜெயலலிதா பேச்சின் முக்கிய அம்சங்கள் : -மக்களால் நான் மக்களுக்காக நான் உங்களால் நான் உங்களுக்காக நான் -உங்களுக்காக அர்பணிக்கப்பட்டது என் தவ வாழ்வு -சொன்னதை செய்தேன்... சொல்லாத பலவற்றையும் செய்தேன் -ஒரு தாய்க்குத்தான் தெரியும் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று -இனியும் எண்ணற்ற பல திட்டங்களை நிறைவேற்றுவேன் -கருணாநிதிக்கு மதுவிலக்கை கொண்டுவரும் எண்ணமே இல்லை -கபடமாக பேசி மக்களின் வாக்குகளை அள்ளவே பொய்யான வாக்குறுதிகளை அளிக்கிறார் -
மதுவிலக்கை அமல்படுத்துவது பற்றி திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது -பூரண மதுவிலக்கு பற்றி தேர்தல் அறிக்கையில் கூறவில்லை -மதுவிலக்கு அமல்படுத்தினால் திமுகவினர் நடத்தும் மது ஆலைகளை மூடுவதாக கனிமொழி கூறினார் -திமுகவினர் நடத்தும் மது ஆலைகளை மூட ஏன் நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டும்? -உடனேயே மதுஆலைகளை மூட வேண்டியதுதானே -
தனியார் கிளப்புகள் மூலம் மது விற்பனை தொடர திமுக முயற்சி -காங்கிரஸ் கட்சியுடன் ஒட்டுமில்லை உறவுமில்லை என்று கூறியவர் கருணாநிதி -கனிமொழிக்காக காங்கிரஸ் கட்சியிடம் கையேந்தினார்
 -2014 லோக்சபா தேர்தலில் வெட்டி விட்டவர் இப்போது கூட்டணி அமைத்துள்ளார் -கபடநாடகம் நடத்தி தமிழக மக்களை கருணாநிதி ஏமாற்றிவிட முடியாது -
இலங்கை அரசிடம் சரணடையுமாறு கனிமொழி கூறியதாக ஆனந்தி சசிதரன் குற்றம் சாட்டினார் -கனிமொழி பேச்சை நம்பி சரணடைந்த ஈழத்தமிழகர்கள் கொல்லப்பட்டனர் -இலங்கை தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்தவர் கருணாநிதி -அகதிகளாக இங்கே வந்தவர்களுக்கு அனைத்து பாதுகாப்பும் அளிக்கப்படுகிறது -இலங்கைக்கு திருப்பி அனுப்ப மத்திய அரசு முற்பட்டபோது எதிர்ப்பு தெரிவித்தேன் -இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசை வற்புறுத்துவோம் -
கடற்கரையில் 3 மணிநேரம் படுத்திருந்து உண்ணாவிரத நாடகம் நடத்தினார் -இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்று பொய்யாக கூறினார் கருணாநிதி -இவரது பேச்சை நம்பி பதுங்கு குழிகளில் இருந்து தமிழகர்கள் வெளியே வந்தனர் -இலங்கை அரசு கொத்து கொத்தாக குண்டு மழை வீசி தமிழர்களை இனப்படுகொலை செய்தது -
மக்கள் என் பக்கம் இருப்பதை திமுகவினால் பொருத்துக்கொள்ள முடியவில்லை -அதிமுகவிற்கு எதிராக திமுக பொய் பிரச்சாரம் செய்வதை தேர்தல் ஆணையம் கண்காணிக்கிறது -
இலங்கை தமிழகர்களுக்கு துரோகம் இழைத்தது கருணாநிதி -தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிக்கு எதிர்மறையாக செயல்பட்டது திமுக 
-திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தான் ஈழத்தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்தது -இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்டது -இது தெரிந்தும் தடுக்க கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை -
அதிமுக வேட்பாளர்கள்தான் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறப்போகிறார்கள் -திமுக இரண்டாவது இடத்திற்குக் கூட வரமுடியாது என்ற பயம் பீடித்துள்ளது -பயம் காரணமாகவே ஜோடிக்கப்பட்ட விளம்பரங்களை வெளியிடுகின்றனர் -
உரங்களின் விலை உயர்வுக்கு யார் காரணம்? -திமுக அங்கம் வகித்த மத்திய அரசுதானே உர விலை ஏற்றத்துக் காரணம் -
கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியே ஒப்புதல் அளித்துள்ளார் -விவசாயிகள் தற்கொலைக்கு யார் காரணம்? -
2014 - 15ல் உணவு தானிய உற்பத்தி 68.46 சதவிகிதம் அதிகரித்துள்ளது -
அதிக உணவு தானிய உற்பத்திக்காக மூன்று முறை மத்திய அரசிடம் விருது பெற்றுள்ளோம் -
உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பல லட்சம் விவசாயிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன -
திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றவில்லை -
தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடுபவர் கருணாநிதி -
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இந்த ஜெயலலிதாதான் -
மக்களை நாடி அரசு என்பதற்கேற்ப அம்மா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது -
தமிழகம் முழுவதும் 530 அம்மா உணவகங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன -திருச்சி ஜி. கார்னரில் பிரச்சாரத்தை தொடங்கினார் ஜெயலலிதா

Read more at:://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: