சனி, 23 ஏப்ரல், 2016

EVKS.இளங்கோவனின் சகோதர் வீட்டில் வருமானவரி துறை விசாரணை

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் சகோதரர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர்.
 சென்னையில் உள்ள பிரபலமான நகைக் கடையில் சோதனை மேற்கொண்டதன் தொடர்ச்சியாக வருமான வரித்துறை அதிகாரிகள்
 ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் சகோதரர் மதிவாணன் வீட்டிலும் விசாரணை செய்தனர்.

 இது குறித்து வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறியதாவது: சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிரபல நகைக் கடைக்குச் சொந்தமான கிளைகளில் வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித் துறையினர் வியாழக்கிழமை சோதனை மேற்கெண்டனர். இந்தச் சோதனையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குடும்பத்தினரிடமிருந்து சில சொத்துகளை அந்த நகைக் கடை நிறுவனம் வாங்கிய ஆவணம் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
 அந்த ஆவணத்தின் அடிப்படையில் சென்னை அண்ணாநகர் 10-ஆவது பிளாக்கில் வசிக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் சகோதரர் ஈவிகேஎஸ் மதிவாணன் குடும்பத்தினரிடம் வருமானவரித் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நகைக் கடை தரப்பு வாங்கியதாகக் கூறப்படும் சொத்துக்களின் விவரங்களையும், ஆவணங்களையும் வருமான வரித் துறையினர் பெற்றுச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருமான வரித் துறையினரின் இந்த நடவடிக்கை காங்கிரஸ் கட்சியினரிடமும், அரசியல் கட்சியினரிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தினமணி.com

கருத்துகள் இல்லை: