சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகம் உறுதியாகி இருக்கிறது. உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’. சபேஷ் – முரளி இசையமைத்த இப்படத்தை இயக்குநர் ஷங்கர் தயாரித்தார். 2006ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வந்தது. தற்போது ஷங்கரின் ‘எஸ் பிக்சர்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. இதனை லைக்கா நிறுவனத்தின் ராஜூ மகாலிங்கம் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
இரண்டாம் பாகத்தில் வடிவேலு நாயகனகாக நடிக்க சிம்புதேவனே இயக்க இருக்கிறார். வடிவேலுவுடன் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதற்காக தேர்வு படலம் தற்போது தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.