திங்கள், 18 ஏப்ரல், 2016

BBC: சொத்துகுவிப்பு வழக்கில் பொன்முடி விடுதலை....அதிமுக அரசின் பழிவாங்கல் நடவடிக்கை அம்பலம்

வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாகக் கூறி தொடுக்கப்பட்டிருந்த ஊழல் வழக்கிலிருந்து திமுகவின் முன்னாள் அமைச்சர் க பொன்முடி விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கில் விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுந்தரமூர்த்தி பிறப்பித்துள்ள இன்றைய (18-042016) உத்தரவில், குற்றச்சாட்டுகளை உறுதி செய்யத் தேவையான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்துள்ள நீதிபதி, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரையும் விடுவித்துள்ளார். இ
ந்த தீர்ப்புக்குப்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, இன்றைய தீர்ப்பின் மூலம் இந்த வழக்கு பழிவாங்கும் நோக்கத்துடன் தொடுக்கப்பட்டது என்பது உறுதியாகியுள்ளதாக குறிப்பிட்டார். கடந்த 2006 முதல் 2011 வரையிலான காலக்கட்டத்தில், திமுகவின் உயர்கல்வித்துறை அமைச்சராக தமிழகத்தில் பொறுப்பு வகித்த பொன்முடி மீது 2011ஆம் ஆண்டு ஊழல் வழக்கு தொடுக்கப்பட்டது.

அந்த வழக்கை தொடுத்த விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை காவல்துறை கண்காணிப்பாளர் கன்னியப்பன், பொன்முடி தனது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக கூறி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு ஆரம்பத்தில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. 2015ஆம் அண்டு இந்த வழக்கு விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு இன்று இறுதியாக அதில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வேட்பாளராக போட்டியிடும் பொன்முடிக்கு இந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டிருந்தால், தேர்தலில் போட்டியிடும் தகுதியை அவர் இழக்க நேர்ந்திருக்கலாம் என்பதால் இன்றைய தீர்ப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக கருதப்பட்டது.

கருத்துகள் இல்லை: