வெள்ளி, 22 ஏப்ரல், 2016

திறந்த வெளி சித்திரவதை கூடங்களா பிரசார கூட்டங்கள்? ...ஜெயலலிதா : இறைவன் திருவடி நிழலில் ஆன்மா.....


VIKATAN :தேர்தல் பிரசாரம்  கொளுத்தும் கோடை வெயிலில் காசு கொடுத்து கூட்டி வந்து, மனித உயிர்களைக் கருக வைத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிரசாரம் நடத்துவதாக சமூக வலைத்தளங்களில் கடும் கொந்தளிப்புடன் காரசார விவாதங்கள் அரங்கேறி
வருகிறது.  சிதம்பரம் நகர 31-வது
வார்டைச் சேர்ந்த அதிமுக தொண்டர் எஸ்.கருணரனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டும், அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரத்தைச் சேர்ந்த எம்.ராதாகிருஷ்ணனும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்பும் வழியில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டும் மிகுந்த வேதனையுற்றேன்.
அன்புச் சகோதரர்கள் கருணாகரன், ராதாகிருஷ்ணன் ஆகியோரை இழந்து வாடும் குடும்பத்தி னருக்கு ஆழ்ந்த இரங்களையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

கருத்துகள் இல்லை: