தமிழகத்தில் அதிமுகவின் கிளை அமைப்பாகத்தான் பாஜக தனது வியாபரத்தை இதுவரை நடத்தி கொண்டிருந்தது.. ஜெயலலிதாவின் இமாலய ஊழல் வழக்குகளில் இருந்து அவரை காப்பாற்ற பாஜகவால் முடியவில்லை . பல உதவிகளை செய்தாலும் ஒட்டு மொத்தமாக கோப்புக்களை கடாசிவிடவேண்டும் என்ற ஜெயலலிதாவின் பூதகரமான கோரிக்கையை யாராலும் நிறைவேற்றுவது சாத்தியம் இல்லை. முன்பும் வாஜ்பாயின் ஆட்சியை ஜெயலலிதா கவிழ்த்ததும் இதே பிரச்னையை வைத்துதான் .
அதிமுக சிலவிடயங்களில் பாஜகவை விட படு தீவிரமான இந்துத்வா பார்ப்பனீய கட்சியாகவும் இருக்கிறது. எனவே புதிதாக ஒரு பார்ப்பனீய கட்சி இங்கு தேவையும் இல்லை . அதைவிட முக்கியமான ஒரு விடயம் என்னவென்றால் ஜெயலலிதாவிடம் அதிருப்தி கொண்டுள்ள இந்துத்வா வாக்காளர்கள் தமிழக பாஜக பக்கம் திரும்ப தொடங்கி விட்டார்கள். இது அதிமுகவின் வாக்கு வங்கியில் சகல தொகுதிகளிலும் சிறிய சிறிய வெடிப்புக்களை ஏற்படுத்தி சில துண்டுகளை திருடி விட்டது. இது வெளியே சொல்ல முடியாத வலியை ஜெயாவுக்கு உண்டாக்கி விட்டது...
ஊழல் வழக்குகள் ஒரு புறம் இருந்தாலும் கட்சி பலமாக இருந்தால்தான் மத்திய அரசுகளை மிரட்டி மிரட்டி வழக்குகளில் இருந்து தப்ப முடியும்.
பாஜகவுக்கு இப்பொழுதும் தமிழகத்தில் ஒன்றும் குடி முழுகி போய்விடவில்லை.
அவர்களின் கொள்கைகளை அதிமுக செவ்வனே நிறைவேற்றி கொண்டு வருகிறதே? அந்த திருப்தி என்ன லேசானதா?
இவை மட்டும் அல்லாமல் ராம் கோபாலன்களும் அர்ஜுன் சம்பத்துக்களும் இங்கே சாமியாடி சாமியாடி மக்களை மக்சிமம் பயமுறுத்தி வைத்துள்ளார்கள். இதுக்குள்ள நீங்க வேற.....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக