சனி, 23 ஏப்ரல், 2016

உளவுத்துறை (மயிலாப்பூர்) ரிப்போர்ட் :ம ந கூ அன் கோ 130 முதல் 150 தொகுதிகளை கைப்பற்றும்...சீமான் அரசியலுக்கு முழுக்கா?

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி-தேமுதிக-தமாகா கூட்டணி ஆட்சி அமைக்கும்: உளவுத்துறை ரிப்போர்ட் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.இது குறித்து அரசியல் கட்சியின் நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், “234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று ஜெயலலிதா நினைத்த உச்சபட்ச சாதனையை எட்டிவிட்டார். ஆனால் ஜெயலலிதா எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது என்று உளவுத்துறை பகீர் ரிப்போர்ட் கொடுத்துள்ளது.இதனால் ஜெயலலிதாவின் பிரச்சாரத்திலும் சோர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் உளவுத்துறை ரிப்போர்ட்டில் மக்கள் நல கூட்டணி 130 முதல் 150 தொகுதிகளை கைப்பற்றும் என்று உளவுத்துறை கொடுத்த ஷாக் ரிப்போர்ட் தான் ஜெயலலிதாவை இந்தப் பாடுபடுத்துகிறது.அதனால் தான் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணி வேட்பாளர்களை அறிவித்ததும் ஜெயலலிதா ஒன்றன் பின் ஒன்றாக வேட்பாளர்களை மாற்றி வருகிறார். அதேபோன்று திமுக வேட்பாளர்கள் ஒரத்தநாடு, சோழவந்தான் தொகுதியில் போட்டியிட அச்சப்பட்டு விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது” என்று கூறியுள்ளது.வெப்துனியா.காம் நாம் தமிழர் கட்சியை விட ம ந கூ அன் கோ அதிக ஓட்டுக்கள்  பெற்றால் தான்தனது நாம் தமிழர் கட்சியையே கலைத்து விடுவதாக   சீமான் பேராசிரியர் அருணனுக்கு சவால் விட்டிருக்கிறார் . அதான் நாம் கொஞ்சம் ரோசிக்கிறோம் 

கருத்துகள் இல்லை: